நடமாடும் தெய்வம், பரமேஸ்வரனின் சமீபத்தைய அவதாரம், அபார கருணா-மூர்த்தி என்றெல்லாம் பெருமையுடன் அழைக்கப்படும் ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் தனது 13ம் வயதில் ஸன்யாசம் பூண்டு உலக மக்களின் நன்மைக்காவே வாழ்ந்தவர். அவரது 100 வருட பூலோக வாசத்தில் பலமுறை ஆஸேது-ஹிமாசலம் பலமுறை நடைப்பயணமாகவே யாத்ரை செய்து, ஆங்காங்கே த்ரிபுர சுந்தரி, ஸ்ரீசந்திர மெளலி பூஜைகள் செய்து இறையருளை பாரதமெங்கும் நிறையச் செய்தவர்.இன்று அவரது ஆராதனை தினம். காலையில் இருந்தே மனது பழைய தரிசனங்களை அசை போடுகிறது.
பெரியவாளை தரிசிக்கச் சென்றால், 2-3 நாட்கள் அவருடனே இருந்து அருள் மழையில் நனைந்து வருபவர் என் தந்தை. 1990க்கு மேலேயே தரிசன நேரத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டார் ஆசார்யாள். முன்பு போல் எப்போதும் அவரருகில் இருக்க இயலவில்லைஎன்று மிகுந்த விசனம் கொள்வார். இடையிடையில் மடத்திற்குச் சென்று வருபவர்கள் அவரது உடல் நிலை பற்றிச் சொல்வதைக் கேட்கும் போதும், ஏதோ நமது இல்லத்தில் ஒருவர் உடல் நலமின்றி வருந்துவது போன்ற மனநிலையை உணர்ந்திருக்கிறேன். 16 வருஷங்களுக்கு முன் தாய்-தந்தையுடன் காஞ்சி சென்று தரிசனம் செய்த பிறகு,ஒரு வருஷமாக பெரியவாளது தரிசனம் வாய்க்கவில்லை. காஞ்சி சென்று 3 நாட்கள் தங்கி தரிசனம் செய்து திரும்பினோம். முதல் நாள் தரிசனம் செய்த போது, காஷ்ட-மெளனத்திலும்,நிஷ்டையிலுமே பெரியவா இருந்ததாகத்தான் தோன்றியதே தவிர, அவருக்கு உடல் நலக்குறைவு என்றோ, தள்ளாமையினால் பேச, உட்கார இயலாது இருக்கிறார் என்றோ தோன்றியது,ஆயிற்று இரண்டாம் நாளும் தரிசனம் செய்து பாத பூஜை, பிக்ஷாவந்தன பிரசாதம் எல்லாம் வாங்கிக் கொண்டு திரும்பினோம். மறுநாள் தரிசனம் முடித்து சாயரக்ஷை கிளம்பி சகோதரியைப் பார்க்கச் செல்வதாக் உத்தேசம். ' நாளைய தரிசனத்தின் போது நம்மிடம் பெரியவா ஒரு வார்த்தையாவது பேசுவாளாடா?, என்னதான் அவாளை த்ருப்தியா தரிசனம் செய்தாலும், அவரது குரலைக் கேட்காது திரும்பிச் செல்ல நேருமோ' என்றெல்லாம் சொல்லியவாறு படுத்தார்.
மறுநாள் தரிசனம் செய்யச் சென்றோம், கூட்டம் அதிகமில்லை. பெரியவா தரிசனத்தின் போது என்-தந்தை கண்களில் நீர் மல்க நிற்கிறார், 'க்ஷேமமாக இருப்பாய்,போய்ட்டு வா' என்று உடைகளுக்குள் இருந்த கைகளை விலக்கி ஆசியளித்தார். இதுவே கடைசி தரிசனம் என்பதை நாங்கள் யாரும் நினைத்தும் பார்க்கவில்லை. பெரியவா ஆசிர்வாதம் செய்தார், 2 வார்த்தைகள் பேசினார் என்கிற பரம-த்ருப்தியுடன் காத்திருந்து தீர்த்தப் பிரசாதம் பெற்றுத் திரும்பினோம்.
மறுநாள் தரிசனம் செய்யச் சென்றோம், கூட்டம் அதிகமில்லை. பெரியவா தரிசனத்தின் போது என்-தந்தை கண்களில் நீர் மல்க நிற்கிறார், 'க்ஷேமமாக இருப்பாய்,போய்ட்டு வா' என்று உடைகளுக்குள் இருந்த கைகளை விலக்கி ஆசியளித்தார். இதுவே கடைசி தரிசனம் என்பதை நாங்கள் யாரும் நினைத்தும் பார்க்கவில்லை. பெரியவா ஆசிர்வாதம் செய்தார், 2 வார்த்தைகள் பேசினார் என்கிற பரம-த்ருப்தியுடன் காத்திருந்து தீர்த்தப் பிரசாதம் பெற்றுத் திரும்பினோம்.
1994ம் ஆண்டு, நான் அலுவலக விஷயமாக திருக்கோவிலூருக்குச் சென்றிருந்தேன். அன்று சனிக்கிழமை, அலுவலக வேலைகளை மதியத்துடன் முடித்துக் கொண்டு விழுப்புரம் சென்று பெரியவாளது பூர்வீக இல்லத்தை விட்டு, மறுநாள் ஞாயிறன்று காஞ்சியில் பெரியவாளை தரிசனம் செய்ய நினைத்திருந்தேன். மாலை 6 மணி சமயத்தி விழுப்புரத்தை அடைந்த நேரத்தில் பெரியவா முக்தியான செய்தியை அறிய நேர்ந்தது. 1994ம் ஆண்டு, உத்தராயண புண்யகாலம், மார்கழி மாதம், க்ருஷ்ண பக்ஷ, சர்வ ஏகாதசி (ஜனவரி 8ம் தேதி), மதியம் 2.50 மணிக்கு ஜகத்குரு என்றழக்கப்பட்ட ஸ்ரீ பெரியவா ஈசனுடன் இணைந்தார். வருஷங்கள் சென்றுவிட்டன, ஆனால், அன்றிரவே காஞ்சி சென்று அவரது திருமேனி தரிசனம் செய்ததும், பின்னர் நடந்த மஹா-அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டதும் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.
முக்தி க்ஷேத்ரமான காஞ்சியில் ஸ்ரீ பெரியவாளது அதிஷ்டானத்தில் இன்று மிக விமர்சையாக ஆராதனை நடக்கிறது. மடத்தின் எல்லாக் கிளைகளிலும் ஆராதனை சிறப்பாக நடைபெறுவதாகத் தெரிகிறது. அருகில் இருக்கும் கிளைகளிலோ, அல்லது அவரவர் இல்லத்தில்பெரியவாளை த்யானித்து சித்த சுத்தியும், ஞான வைராக்யமும் சித்திக்க வேண்டிடுவோம்.
அபார கருணா ஸிந்தும் ஞானதம் சாந்த ரூபிணிம்
ஸ்ரீ சந்திர சேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
20 comments:
பகிர்விற்கு மிக்க நன்றிகள் மௌலி சார்!
டிசம்பர் 8 என்று இருக்கவேண்டுமென நினைக்கிறேன்.
மிக நல்ல பதிவு!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
எனக்கு பெரிய குறையே அவரை பாக்க பேச கொடுத்தவைக்கலை.
:-(
என்னப் பெருந்தவம் நான் செய்தது
என்னையும் காஞ்சி முனி ஆட்கொண்டது என்சொல்வேன்
மஹானின் கருணையைப் பற்றி என்ன சொல்ல!
52 வருடங்களுக்கு முன்னால் மடத்தில் மஹானின் கைகளினால் அமரகோஷம் சொல்லும் தேர்வில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கினேன். அப்போது எனக்கு பிரும்மாஉபதேசம்
ஏன் ஆகவில்லை என்று கேட்டார். எனது குடும்பத்தின் கஷ்டநிலையை கூறினேன். உடனே மடத்தின் செலவில் எனக்கு பிரும்மாஉபதேசம் செய்வித்த மஹான் அவர். நன்றி மௌலி நினைவூட்டலுக்கு.
பக்தர்கள் செய்திட்ட பாக்கியம் இப்பாரினில் பரம்பொருளே பெரியாவாளாக அவதரித்தார்
வருகைக்கு நன்றி ஜீவா!
//இறையருளை பாரதமெங்கும் நிறையச் செய்தவர் //
குருஷேத்திரத்தில் பகவத் கீதை உபதேசம் ஆன இடமென்று மகாஸ்வாமிகள் குறிப்பிட்டு காட்டிய இடத்தில் தான் இன்று கீதா மண்டபம் நிறுவப்பட்டுள்ளது. தேசத்தின் எல்லா பாகங்களிலும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப் பட்ட தபஸ்வி வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்திருக்கிறோம் என்பதே ஒரு நிறைவு தான்,
மகானைப் பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி
வாங்க விஎஸ்கே சார், ஜனவரி-8 தான். இந்த முறை முன்னரே வந்துடுத்து. சாந்திரமான பஞ்சாங்கம், அதிலும் திருகணிதம் தானஸ்ரீமடத்தில் பயன்படுத்துவது.
வாங்க திவாண்ணா, அவரை பார்க்க, பேச இயலவில்லைன்னு நீங்க வருந்தவே வேண்டியதில்லை. அவர் சொல்படி வாழ்வதில் நீங்களல்லவோ முதலில் இருக்கிறீர்கள்.
வாங்க திராச சார். உண்மைதான் பக்தர்கள் செய்த பாக்கியம்தான் நமக்கு அவர் குருவாக அவதரித்தது.
வாங்க கபீரன்பன் சார். பகிர்வுக்கு நன்றிகள்.
கண்பனிக்கச் செய்யும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மௌலி.
என் தாத்தா (அம்மாவின் தாய்மாமா) வேத ரக்ஷண நிதி ட்ரஸ்டி. பெரியவரின் தீவிர பக்தர். பெரியவரின் சொல்படி எங்கள் குடும்பத்தில் யாரும் வரதட்சணை வாங்குவதில்லை, பட்டு கட்டுவதும் இல்லை.
வருகைக்கும் பெரியவரது கருத்துக்கும் நன்றி புதுவையக்கா.
வருகைக்கு நன்றி கவிக்கோ-கவிக்கா..
//காலையில் இருந்தே மனது பழைய தரிசனங்களை அசை போடுகிறது//
என் மனமும் நான் காஞ்சியில் இருந்த அந்த ஒரு வருட காலத்தை அசை போட தொடங்கி விட்டது. ஒரு வருடம், தினமும் அதிகாலையில் அவர் அதிஷ்டானத்தை தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது.
அருமையான பகிர்வு மெளலி அண்ணா.
பெரியவரின் தரிசனம் கிடைக்காத நானெல்லாம் பிறந்ததே வீண். அவர் இருக்கும்போது அவரைப் பற்றித் தெரியவில்லை.. சொல்வதற்கும் ஆளில்லை. இப்போது தெரிந்து கொண்ட பிறகு.. அவரை மனத்தினால் தரிசித்துக் கொள்கிறேன்.
அடிக்கடி பெரியவர் பற்றி எழுதுங்கண்ணா..
மஹா சுவாமிகளின் கருணை பொழியும் படங்கள் மிகவும் அருமை மௌலி சார்.
அடியேனுக்குக் காஞ்சிப் பெரியவரைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கவே இல்லையே என்ற வருத்தம் என்றுமே இருக்கிறது. உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மௌலி.
azhagiya padhivu...
http://erodenagaraj.blogspot.com/search/label/periyava
முதல் வருகைக்கு நன்றி நாகராஜ் சார்.
Post a Comment