Wednesday, August 12, 2009

கோகுலாஷ்டமி : வரகூர்

தேவகி, வசுதேவர், உத்தவர் முதலியவர்களால் பூஜிக்கப்பட்டு, ப்ரஹஸ்பதி மற்றும் வாயுவால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹத்தை, குரு+வாயு+அப்பனை பற்றிய பஞ்சரத்னம் ஒன்று இருக்கிறது. இதை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. எனது தந்தைவழிப் பாட்டி ஸ்ரீமதி யக்ஞாம்பாள் அனுதினமும் தனது பாராயணத்தின் ஒருபகுதியாக இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். நாளை கோகுலாஷ்டமிக்கான சிறப்புப் பதிவாக அந்த பஞ்ச ரத்னத்தையும், அதற்கு எனக்குத் தெரிந்த பொருளையும், வரகூர் க்ஷேத்திரத்தில் நடக்கும் கிருஷ்ண ஜெயந்தி விழாவையும் பார்க்கலாம்.


கல்யாணரூபாய கலெள ஜனானாம் கல்யாணதாத்ரே கருணா ஸுதாப்தே
கம்ப்வாதி திவ்யாயுத ஸ்த்கராய வாதாலயாதீச நமோ நமஸ்தே.

கலியுகத்தில் மங்களமான ரூபத்துடனும், பக்தர்களுக்கு மங்களங்களை அருளுபவனும், சங்கு-சக்ரம் முதலிய திவ்ய ஆயுதங்களைத் தாங்கியவனுமான ஸ்ரீ குருவாயுரப்பா உனக்கு பல நமஸ்காரங்கள்.


நாராயணேத்யாதி ஜபத்பிருச்சை: பக்தை: ஸதா பூர்ண மஹாளயாய
ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்ன நிவர்த்திதாஸேஷ ருஜே நமஸ்தே.

எப்போதும், நாராயணா!, கோவிந்தா! என்னும் திவ்ய நாமங்களை உரக்க ஜபம் செய்யும் பக்தர்கள் நிரம்பிய ஆலயத்தில் அமர்ந்திருப்பவனும், தங்களது தீர்த்தமெனும் கங்கைக்கு நிகரான ஜலத்தில் ஸ்நானம் செய்பவர்களது அனைத்து ரோகங்களையும் போக்குபவனுமான குருவாயுரப்பா, உனக்கு நமஸ்காரம்.


ப்ராஹ்மேமுஹூர்த்தே பரித: ஸ்வபக்தை: ஸந்த்ருஷ்டஸர்வோத்தம விஸ்வரூப
ஸ்வதைலஸம்ஸேவக ரோகஹர்த்ரே வாதாலயாதீஸநமோ நமஸ்தே.

பிரம்ம முஹூர்த்தம் எனப்படும் விடியற்காலையில், பலதிசைகளில் இருந்தும் வந்த பக்தர்கள் தரிசிக்க விச்வரூப தரிசனத்தை அளிப்பவனே!, உனக்கு அபிஷேகம் செய்த நல்லெண்ணையை உள்ளும், புறமும் உபயோகிப்பவர்களின் ரோகங்களை நீக்குபவனுமான ஸ்ரீ குருவாயுரப்பா, உனக்கு நமஸ்காரம்.


பலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானே திவ்யான்னதானாத் பரிபாலயத்பி:
ஸதா படத்பிஸ்ச புராணரத்னம் ஸம்ஸேவிதாயாஸ்து நமோ நமஸ்தே.

உன் சன்னிதானத்தில் குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்து வைத்து, தங்கள் குழந்தைகளை ரக்ஷிக்கிறவர்களாலும், எப்போதும் ஸ்ரீபாகவதத்தை பாராயணம் செய்கிற பக்தர்களாலும் நன்கு பூஜிக்கப்படும் உனக்கு நமஸ்காரம்.


நித்யான்னதாத்ரே ச மஹீஸுரப்யே: நித்யம் திவிஸ்த்தைர் நிசிபூஜிதாய
மாத்ரா ச பித்ரா ச ததோத்தவேன ஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே.

அனுதினமும் எல்லோருக்கும் அன்னம் அளிப்பவரும், தினந்தோறும் இரவில் தேவர்களால் பூஜிக்கப்படுபவரும், அன்னை தேவகி, பிதா வசுதேவர் மற்றும் பக்தர் உத்தவர் ஆகியோரால் பூஜிக்கப்பட்டவருமான உனக்கு நமஸ்காரம்.



குருவாதபுரீஸ பஞ்சகாக்யம் ஸ்துதிரத்னம் படதாம் ஸுமங்கலம் ஸ்யாத்
ஹ்ருதிசாபி விஸேத் ஹரிஸ்வயம்து ரதிநாதாயுத துல்யதேஹ காந்தி:

ஸ்ரீகுருவாயுரப்பனைக் குறித்த ஐந்து ஸ்லோகங்களடங்கிய இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்களுக்கு மங்களம் உண்டாகும். பத்தாயிரம் மன்மதனுக்கு ஒப்பான வடிவழகுடைய ஸ்ரீ நாராயணன் நமது ஹ்ருதயத்தில் காக்ஷியளிப்பார்.



ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ண பரமாத்மனே நம:

*******************************************

வெகுநாட்கள் கழித்து திங்களன்று நண்பன் சேஷசாயி போன் செய்திருந்தான், அவன் ஸ்ரீ-ஜெயந்தியை வரகூரில் கொண்டாட இருப்பதாகவும், உடன் வர முடியுமா என்றும் கேட்டான். வரகூரில் என்ன விசேஷம் என்று கேட்டதில் கிடைத்த தகவல் கீழே!. படங்கள் கூகிளார் உபயம்.

கிருஷ்ண பக்தியில் சிறந்த ஒருவர் ஒருசமயம் தீராத வயிற்று வலியால் துன்பப்பட்டார். வயிற்று வலி தீர வேண்டி பல ஸ்தலங்களுக்கும் சென்று பெருமாளை வேண்டி வருகையில், தஞ்சை திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள வரகூர் என்னும் க்ஷேத்திரத்தில் இருக்கும் ஒரு வினாயகர் கோவிலில் இரவு தங்குகிறார். நள்ளிரவில் அவரது ஸ்வப்னத்தில் ஒருவர் தோன்றி, காலையில் கண்விழிக்கும் போது கண்ணில்படும் விலங்கினைத் தொடர்ந்து செல்லுமாறும், அவ்வாறு சென்றால் அவரதுவயிற்று வலி நீங்கும் என்றும் கூறுகிறார்.

அவ்வாறே காலையில் கண்விழிக்கையில் தனது கண்களில் அகப்பட்ட வராகத்தைத் தொடர்ந்து செல்கிறார் பக்தர். வராகம் ஒரு பெருமாள் கோவிலுள் சென்று மறைகிறது. வந்தது வராக மூர்த்தியே என்றுணர்ந்த பக்தர் மனமுருகி, அப்பெருமாளைப் பாடினார்.அவரது வயிற்றுப் பிணி தீர்ந்தது. இறைவன் வராஹ ரூபத்தில் காக்ஷியளித்ததால் அவ்வூர் வராஹபுரீ என்றும், வரகூர் என்றும் அழைக்கப்பெறலாயிற்று.வயிற்றுப்பிணி நீங்குவதற்காகப் பாடல்கள் பாடிய பக்தர் நாராயண தீர்த்தர், அவர் பாடியது ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி.

இன்றும் இவ்வூரில் ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண லீலா தரங்கிணி பாடல்களைப் பாடி, ஸ்ரீகிருஷ்ணனின் ஜனனம் முதல் ஸ்ரீருக்மிணி கல்யாணம் போன்றவற்றைக் கொண்டாடுகின்றனராம். நடுநிசிக்கு மேல் உறியடி உற்சவமும் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிகிறது.

கீழே- வரகூர் பெருமாள் உறியடி அலங்காரத்தில்



வரகூரில் மக்கள் கொண்டாடும் உறியடி விழா கீழே!



ராதே கிருஷ்ணா!

ராதே கிருஷ்ணா!

36 comments:

Radha said...

dear mouli sir, i liked this post very much !!
beautiful wonderful brindhavana venugopalan !! thanks a lot !! :-)
~
Radha

Radha said...

And thanks for the previous post too !!
After reading the post, I was discussing with some of my friends. Came to know that the Thirunedunthantakam pasuram is the only pasuram for Thirukalvanoor divya desam, denoted just by the word "kalvaa" in that pasuram. Now I want to go to Kamakshi Amman temple again. Mainly to have the darshan of Kalvar.:-)

Not that I don't like Kaamaakshi. Meenakshi & Kaamaakshi are like Queens. My all time favourite Ambaal, who is readily accessible like my mother is Karpagaambal of Mylapore.

Radhe Krishnaa !
Radhe Krishnaa !
~
Radha

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராதா சார். எல்லாம் கூகிளார் உபயம்....நீங்களும் சேமித்துக் கொள்ளலாம் :-)

மெளலி (மதுரையம்பதி) said...

ஆமாம், அந்த பாடலில் மட்டும்தான் 'கள்வா' என்று கூறியிருப்பதாக முன்பு ஒருமுறை எ.அ.பாலா கூட எழுதியிருந்தார்.

நேரம் கிடைக்கையில் போய் வாருங்கள். என்ன, இந்தக் கோவிலைப் பொருத்தவரை, பெருமாள் கோஷ்ட தேவதைதான் என்பதால் மற்ற பெருமாள் கோவில்கள் போன்ற சிறப்புக்கள் இருக்காது.

கிருஷ்ண மூர்த்தி S said...

கோபாலனைக் குருவாயூரப்பனாக சேவித்து, வரகூர் உத்சவத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறீர்கள். குட்டிக் கண்ணன் எல்லாவிதமான மங்களங்களையும், சந்தோஷம், சந்துஷ்டியையையும் எல்லோருக்கும் அனுக்ரகிக்கட்டும்!

Raghav said...

அண்ணா, வண்ணமயமான பதிவிற்கு நன்றி.. படங்களெல்லாம் அருமை.

ஸ்ரீஜெயந்தி அன்று உங்க வீட்டிற்கு இராகவன் வரலாம் தானே :)

Raghav said...

பஞ்சரதன விளக்கம் அருமை. அன்னப்ராசனம்னா என்னண்ணா?

Raghav said...

வரகூர் இன்று தான் கேள்விப்படுகிறேன் அண்ணா.. நல்லதொரு தகவல்.

Unknown said...

Hai Anna...

I think this s sengalipuram anantharama deekshithar composition.

im nt sure. if u get the right one pls... let us knw

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கிருஷ்ணமூர்த்தி சார். உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும். எல்லோருக்கும் ஸ்ரீகிருஷ்ணனின் அருள் கிடைக்கட்டும்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி ராகவ். முன்பே சொன்னதுபோல, படங்கள் எல்லாம் கூகிளாண்டவர் உபயம். முதலில் வலையேற்றியவர்களுக்கு எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்.

இதென்ன கேள்வி ராகவ்?, கண்டிப்பாக வரலாம், வரவேண்டும். :)

அன்னப் பிராசனம் - குழந்தைக்கு முதலில் அன்னத்தை மந்திர பூர்வமாக அளிக்கும் விழா. அவரவர் இல்லத்து வழக்கத்தின் படி குருவாயூர் போன்ற கோவில்களிலோ, அல்லது வீட்டிலோ செய்யப்படுவது.

கிருஷ்ண லீலா தரங்கிணி பற்றி அறிந்திருந்தாலும், நாராயண தீர்த்தர் மற்றும் வரகூர் பற்றி நானும் 2 நாட்கள் முன்புதான் கேள்விப்பட்டேன். பின்னர் நெட்டிலும் சில லிங்க் கிடைத்தது.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க லலிதா மேடம். முதல் வருகைக்கு நன்றி.

அனந்த ராம தீக்ஷதரா?..விசாரித்துச் சொல்கிறேனம்மா.

திவாண்ணா said...

//இதென்ன கேள்வி ராகவ்?, கண்டிப்பாக வரலாம், வரவேண்டும். :)//
என்னை நெனச்சுகிட்டு ரெண்டு சீடை வாயிலே போட்டுக்கப்பா!
:-))

Raghav said...

//மதுரையம்பதி said...
இதென்ன கேள்வி ராகவ்?, கண்டிப்பாக வரலாம், வரவேண்டும். :)//

டாங்கீஸ்னா.. வந்துர்றேன் :)

//திவா said...
என்னை நெனச்சுகிட்டு ரெண்டு சீடை வாயிலே போட்டுக்கப்பா!
:-))//

ஹா ஹா.. திவா ஐயா, கண்டிப்பாக.. யாரெல்லாம் வர முடியலையோ.. ஒவ்வொருத்தர் சார்பா அத நானே வாங்கிக்கிறேன். சரிதானே மெளலிண்ணா.. :)

சிவமுருகன் said...

கண்ணன் என் அழகன்
கண்ணன் என் ஆசான்
கண்ணன் என் இறைவன்
கண்ணன் என் ஈசன்
கண்ணன் என் உற்றான்
கண்ணன் என் ஊரான்
கண்ணன் என் எதிரி
கண்ணன் என் ஏகாந்தன்
கண்ணன் என் ஐயன்
கண்ணன் என் ஒளி
கண்ணன் என் ஓவியம்
கண்ணன் என் ஔஷதம்

தி. ரா. ச.(T.R.C.) said...

சனிக்கிழமைதோறும் விஷ்ணுஸ்கஸ்ரநாமம் பாராயணம் செய்யும்போது இதையும் சேர்த்தே பாராயணம் செய்வது எனது வழக்கம்

கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாயச
நந்தகோப குமாராய கோவிந்தாயா நமோ நமஹ:

வசுதேவ சுதம் தேவம் கம்ச சாருண மர்தனம்
தேவகி பரமாநந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

கண்ணன் பிறந்தான் - எங்கள்
கண்ணன் பிறந்தான் - இந்தக்
காற்று அதை எட்டு திசையிலும் கூறிடும்
திண்ண முடையான் - மணி
வண்ண முடையான் - உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினான்
பண்ணை இசைப்பீர் -நெஞ்சிற்
புண்ணை யொழிப்பீர்-- இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர்- நன்கு
கண்ணை விழிப்பீர்- இனி
ஏதுங்குறைவில்லை
வேதம் துணயுண்டு.--பாரதியார்

S.Muruganandam said...

குருவாயூர் அப்பன் பஞ்ச ரதனம் பஞ்சாமிர்தமாக இனித்தது. படங்களும் அருமை.

வரகூர் மகிமையும் அற்புதம் .

நன்றி மௌலி ஐயா.

குமரன் (Kumaran) said...

பஞ்சரத்னத்தைப் பொருளுடன் சொல்ல ஒரு வாய்ப்பு தந்ததற்கு நன்றி மௌலி. வரகூர் மஹாத்மியமும் படித்து மகிழ்ந்தேன். நன்றி.

கபீரன்பன் said...

அற்புதமான படங்களுடன் அரியப் பிரார்தனையை பொருள் விளக்கத்துடன் அளித்ததுமல்லாது வரகூர் கிருஷ்ண ஜெயந்திக்கும் அழைத்து சென்று பரவசப் படுத்தி விட்டீர்கள். யாவருக்கும் ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்.

பி.கு. பாட்டியின் பெயரை ஸ்ரீமதி யக்ஞாம்பாள் என்றல்லவோ எழுத வேண்டும்?

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கபீரன்பன் சார். தவற்றை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, திருத்திவிட்டேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி குமரன். பொருளை இன்னும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு ஸ்தோத்திர மாலாவில் சேர்த்துவிடுங்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கைலாஷி சார். உங்களுக்குப் பிடித்திருப்பது எனக்கும் மகிழ்ச்சியே!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி திராச சார்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி சிவமுருகன். ரொம்ப பிஸி போல?, இப்போதெல்லாம் ரொம்ப பதிவுகளும் போடுறதில்லை?

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திவாண்ணா. ஏதேது இந்தப்பக்கம்?. சீடை அழைத்ததோ?. :)

Kavinaya said...

குட்டிக் கிருஷ்ணன் பற்றி ச்வீட்டான பதிவிட்டமைக்கு நன்றி மௌலி. படங்கள் எல்லாம் அழகா இருக்கு, ஆனா குட்டிக் குட்டியா இருக்கு :( சீடை மிச்சம் இருந்தா எனக்கும் வேணும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பத்தாயிரம் மன்மதனுக்கு ஒப்பான வடிவழகுடைய ஸ்ரீ நாராயணன் நமது ஹ்ருதயத்தில் காக்ஷியளிப்பார்//

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிறந்தநாள் பையா!

மெளலி அண்ணனை மன்னிச்சி விட்டுரு! "பத்தாயிரம் கோடி" மன்மதனுக்கு ஒப்பான வடிவழகுடைய கண்ணன்-ன்னு சொல்லி இருக்கணும்! வாயில் சீடையால் கோடி விட்டுப் போயிருச்சி! :)

அண்ணா,
ஸ்ரீஜெயந்தி அன்று, உங்க வீட்டிற்கு, ராகவ் வருவதற்கு முன்னரே, நான் வரலாம் தானே? :))

பி.கு: //பாட்டியின் பெயரை ஸ்ரீமதி யக்ஞாம்பாள் என்றல்லவோ எழுத வேண்டும்?//
இன்னும் பதிவில் திருத்தப்படவில்லை-ண்ணா!

மெளலி (மதுரையம்பதி) said...

வந்து படித்ததற்கும், ரசித்ததற்கும் நன்றி கவிக்கா.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தஞ்சை-திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் காவிரியின் கிளையான குடமுருட்டி பாயும் வரகூர் கிராமம் கொள்ளை அழகு! வரகூர் பற்றிய தகவல்களுக்கு நன்றி-ண்ணா!

மகான் நாராயண தீர்த்தர் கிருஷ்ண லீலா தரங்கிணியைப் பாடியவர்! கோவிந்தபுரத்தில் போதேந்திரரைப் பார்த்து விட வேண்டும் என்ற தாபத்தில் வரும் போது தான் அபசகுணம் போல் வயிற்று வலி பிடித்துக் கொண்டது! அப்போது தான் தெரியும் போதேந்திரர் சமாதி அடைந்து விட்டார் என்று! குருவைப் பார்த்து ஞானம் பெற முடியாமல் கலங்கிப் போய் நடுக்காவிரியில் தங்கிய போதே, ஞானப் பிரான் ஆகிய வராகப் பெருமாள், குருவாக வந்து, காட்டிக் கொடுத்தது!

வரகூர் உறியடி போல் தென்னகத்தில் வேறெங்கும் இல்லை! அம்புட்டு ஃபேமஸ்! :)
அப்பா தஞ்சையில் வேலை பார்த்த போது, நாங்க அங்கே விடுமுறைக்கு ஆஜராகும் போது, வரகூர் உறியடி கலாட்டாவில் கலந்து கொள்ள ரொம்பவும் பிடிக்கும்! :)

உறியடியோ, கோவிந்தோ
முருக்கடியோ, தடியடியோ
உறியடியோ, கோவிந்தோ-ன்னு கோஷம் காதைப் பிளக்கும்! வழுக்கு மரம் கூட ஏறுவாங்க!

இந்தாங்க காணொளி (வீடியோ)

தி. ரா. ச.(T.R.C.) said...

கலாட்டாவில் கலந்து கொள்ள ரொம்பவும் பிடிக்கும்! :)

கேஆஸ் அதான் தெரிஞ்ச விஷ்யமாச்சே! அப்பறம்.....

Thiruppullani Raguveeradayal said...

கோகுலாஷ்டமி அன்று வரகூர் சென்று வந்த நண்பர் அனுப்பிய சில வீடியோக்கள் இங்கு காணலாம்.
http://www.youtube.com/watch?v=DEZbjzaQBks
http://www.youtube.com/watch?v=anPM5hdHOXU
http://www.youtube.com/watch?v=OdTK_hJr6AI

நிழல்படங்கள் இங்கே

http://picasaweb.google.com/lh/sredir?uname=Rajtha&target=ALBUM&id=5370322746673724353&authkey=Gv1sRgCO_cnsa51vHKNQ&invite=CMrx6dQH&feat=email

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும், சுட்டிகளுக்கும் நன்றி திருதிரு அவர்களே.

Unknown said...

Hi anna.... u missed two lines of this slogam. in that lines u can get the composer name.. Sengalipuram Anantharama deekshidar..

that lines...

Anantharaamakya maki praneetham
sthothram pateth yasthu narasthrikaalam
vaathaalayesasya krupaa palena
lapetha sarvaani cha mangalaani

Unknown said...

http://www.geocities.com/shyamdesai/sreeguru.html

மெளலி (மதுரையம்பதி) said...

தகவல்கலுக்கும் சுட்டிக்கும் நன்றி சகோதரி லலிதா.

எனக்கு இந்த ஸ்லோகம் மீண்டும், மீண்டும் கேட்டே பழக்கமானது. ஆகையால் நீங்கள் இட்ட வரி மறந்திருக்கலாம். அளித்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.