Wednesday, August 5, 2009

ஆவணி அவிட்டம்...



நாம் உபயோகிக்கும் துணிகள், பாத்திரங்கள், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் பல பொருட்களுக்கும் தேய்மானம் ஏற்படுவதைக் காண்கிறோம். சிறிதுகாலம் உபயோகம் செய்யப்பட்டுவிட்டால் அது பழைய பொருளாகிறது. நாளாக, ஆக, பொருட்களின் செயல்பாடும் குறைகிறது. இது போன்றே நாம் தினசரி வாழ்வில் சந்த்யாவந்தனம், பூஜை, ஹோமம் போன்றவை செய்யும் போது சொல்லப்படும் வேத மந்திரங்களும் பழயதாகிறது (யாதயாமம்). குறிப்பாக நமது வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரத்திற்கு யாதயாம தோஷம் [மஹா சங்கல்பத்தில், 'அதீதாநாம் சந்தஸாம் அயாதயாமத்வாயா'] ஏற்படுகிறதாகச் சொல்யிருக்கிறார்கள் மஹரிஷிகள். இந்த தோஷம் நீக்கி, சொல்லும் மந்திரங்கள் தோஷம் நீங்கியதாக, புத்தணர்ச்சியை அடைந்து நம்மை சரியான வழியில் இட்டுச் செல்லக்கூடியதாகச் செய்யும் கர்மாவே 'உபா கர்மா'.


வேதத்தை மீண்டும் அத்யயனம் செய்ய ஆரம்பிப்பதே உபாகர்மாவின் நோக்கம். இதன் ஒரு அங்கமாகவே மஹா சங்கல்பம், மற்றும் யக்ஞோபவித தாரணம் போன்றவை. ரிக் வேதத்தினர் சிரவண மாதத்தில் சிரவண நகஷத்திரத்தன்றும், யஜுர் வேதத்தினர் சிரவண மாச பெளர்ணமியன்றும், சாம-வேதிகள் பாத்ரபத மாச ஹஸ்த நக்ஷத்திரத்தன்றும் இந்த உபா கர்மாவைச் செய்யவேண்டும் என்று ஆபஸ்தம்பர் முதலான மஹரிஷிகள் சொல்லியதாகத் தெரிகிறது.

அதெப்படி வேதத்திற்கே தோஷம் என்று சொல்லப்படுகிறது?. நமது அனாசாரத்தால், வேதோக்த/வைதீக கர்மாக்களை செய்யாததால் இந்த தோஷம் தோன்றுகிறதாம். இது வேதத்திற்கான தோஷம் என்பதைவிட வேதத்தைப் பிரயோகிக்கும் நமக்கு அதனால் உருவாகும் சக்தி குறையும் என்றே கூறப்படுகிறது. கும்பாபிஷேகம் செய்த கோவில்களில் ஸம்ரோக்ஷணம் என்று 12 வருடங்களுக்கு ஒருமுறை செய்வது போன்றதே இது. ஸ்ரீ க்ருஷ்ணருக்கு மட்டும் இந்த தோஷம் இல்லாது இருக்கட்டும் என்று அவரது குரு சாந்தீபினி முனிவர் அருள் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. 'கிருஷ்ணன் சொல்லியபடி நட, ராமன் போலவாழ்'என்று பெரியவர்கள் கூறுவர். வால்மிகி முனிவர் ராமாயணத்தில் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் சந்த்யாவந்தனம் போன்றவற்றை எப்படி வழுவாது செய்தார் என்பதைச் சொல்லியிருக்கிறார்.

வேதத்யயனம் செய்பவருக்கல்லவா இந்த தோஷம்?. நாம் ஏன் செய்ய வேண்டும்?. மூன்று வேதங்களின் சாரம் என்று காயத்ரி மந்திரத்தைச் சொல்கிறார்கள் மஹரிஷிகள். வேத அத்யயனம் செய்யாவிடினும், சந்த்யாவந்தனத்தில் காயத்ரி ஜபமாக செய்து வருவதால் இக்கர்மா நாமும் கண்டிப்பாகச் செய்யவேண்டியதே!. வேத அத்யயனம் செய்யாதிருப்பதே தவறு, அத்துடன் உபா கர்மா செய்யாது இன்னொரு தவற்றினை ஏன் செய்ய வேண்டும். மேலும், சன்யாசிகள் சாதுர்-மாஸ்யத்தில் வேத-வ்யாஸரை பூஜிப்பது போல, இக்கர்மாவில் வேதத்தைத் தந்த வ்யாஸருக்கு பிரம்மசாரி, க்ருஹஸ்தர், மற்றும் வானப்ரஸ்தர் நன்றி செலுத்தும்படியான பூஜையும் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த தினத்தில் வேதாரம்பம் என்பதாக குரு/ஆசார்யாரிடமிருந்து அத்யயனம் ஆரம்பிக்கப்படுகிறது. எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமான ஸ்ரீ ஹயக்ரீவர் அவதரித்த தினம் இன்று. வேத மாதாவையும், ஹயக்ரீவரையும், வ்யாஸரையும் வணங்கி சகல வித்யைகளும், ஞானமும் அருள வேண்டுவோம்.


ஞானாநந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிகாக்ருதிம்,

ஆதாரம் சர்வ வித்யானம் ஸ்ரீஹயக்ரீவம் உபாஸ்மஹே!

இந்த நல்ல நாளில், இங்கு வரும் பெரியவர்கள் எல்லோருக்கும் எனது பணிவான நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

24 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

படங்கள் உதவி கூகிளாண்டவர்.

திவாண்ணா said...

நல்ல நேரத்தில் பதிவு மௌலி. நிறைய பேருக்கு பூணூல் மாத்திக்கிறது மட்டுமே தெரியுது. வேத ஆரம்பம்தான் முக்கியமான கர்மான்னு தெரியலை. ஆவணி அவிட்டம் எப்படி ஆடியில வந்ததுன்னு வேற கேக்கிறாங்க!

நல்லது. எங்கே இப்படி பூணூல் போட்டுக்கிறாங்கன்னு கேக்கப்பாத்தா கூகிளாண்டவர் ன்னு சொல்லிட்டீங்க!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திவாண்ணா. கரெக்டா இந்த பதிவுக்கு வந்துட்டீங்களே? :) நன்றி.

ஏதோ வெளிநாட்டில் நடந்ததை யாரோ வலையேற்றியிருக்காங்கன்னு நினைக்கிறென்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திவாண்ணா. கரெக்டா இந்த பதிவுக்கு வந்துட்டீங்களே? :) நன்றி.

ஏதோ வெளிநாட்டில் நடந்ததை யாரோ வலையேற்றியிருக்காங்கன்னு நினைக்கிறென்.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஏதோ வெளிநாட்டில் நடந்ததை யாரோ வலையேற்றியிருக்காங்கன்னு நினைக்கிறென்.

இங்கே சிங்கப்பூரில் ஆவணி அவிட்டம் வீட்டிலேயே நன்றாக நடந்தது. நானும் போட்டுக் கொண்டு என்பையன் சம்பந்தி எல்லொருக்கும் போட்டு வைத்து மஹாசங்கலபம், வேதாரம்பம் எல்லாம் செய்து வைத்தேன்
ஆவணி அவிட்டத்தன்று நல்ல பதிவு. இன்றைய தலை முறைக்கு தெரியவேண்டிய விஷயங்கலை தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். நன்றி

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திராச. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Sridhar V said...

:) நல்ல பதிவு. தகவல்களுக்கு மிக்க நன்றி!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி ஸ்ரீதரண்ணா. :)

Raghav said...

ரொம்ப நன்றி மெளலிண்ணா.. வேத ஆரம்ப தினம் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். வேதத் தொடக்கமும் ஆயிற்று.

அப்புடியே காண்டரிஷி தர்ப்பணம் பற்றியும் சொல்லுங்களேன்.

Raghav said...

// ஸ்ரீ க்ருஷ்ணருக்கு மட்டும் இந்த தோஷம் இல்லாது இருக்கட்டும் என்று அவரது குரு சாந்தீபினி முனிவர் அருள் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.//

கிருஷ்ண பகவானுக்கு எந்த தோஷம் தான் பற்றும் :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராகவ்.

க்ருஷ்ணனுக்கு எந்த தோஷமும் இல்லைன்னாலும் அவர் எதையும் விடல்லை....point to be noted :-)

இந்த இடுகைல நான் டீடெயிலா (ஸ்டெப் பை ஸ்டெப்)ஏதும் சொல்லலை ராகவ். மேலோட்டமா மட்டுந்தான் சொல்லியிருக்கேன்.

பிறகொரு முறை நீங்க கேட்டது பற்றிச் சொல்றேன்.

Geetha Sambasivam said...

தேவையான சமயம் தேவையான இடுகைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கீதாம்மா. :)

ஷைலஜா said...

மௌலி! நல்ல பதிவு இது!
//மந்திரங்கள் தோஷம் நீங்கியதாக, புத்தணர்ச்சியை அடைந்து நம்மை சரியான வழியில் இட்டுச் செல்லக்கூடியதாகச் செய்யும் கர்மாவே 'உபா கர்மா'.
//

அப்படியா நல்ல தகவல் இது.

//எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமான ஸ்ரீ ஹயக்ரீவர் அவதரித்த தினம் இன்று. வேத மாதாவையும், ஹயக்ரீவரையும், வ்யாஸரையும் வணங்கி சகல வித்யைகளும், ஞானமும் அருள வேண்டுவோம்.

/////


அறிவிலே தெளிவு வேண்டி, ஹயக்ரீவனையும் வேதமாதாவையும் வியாசரையும் சேவிக்கிறேன். அளித்த அன்புத்தம்பி மௌலிக்கு ஆசிகள் பல.

அமெரிக்கால இப்பதான் அருகில் ஒருகோயிலில் ஆவணி அவிட்டம் ஆச்சு! சாஸ்த்ரிகள் லெக்ஸஸ் கார்ல ஐபோன்ல பேனபடியே வந்தார்.
ஆபீஸ் செல்லும் ஐடிக்காரார்கள் ஜீன்ஸ்மேல வேஷ்டிகட்டிக்கொண்டு மந்திரங்களை சொல்லிமுடிச்சி பூணல்மாத்திண்டதும் வேஷ்டியை கார்ல பின்சீட்டுல உருவிப்போட்டபடியே ஷர்ட்டைமாட்டிக்கொண்டு வேகமாய் ஆபீச் சென்ற காட்சி வித்தியாச்மா இருந்தது. (பெண்கள் எங்களூக்கு மந்திரம் ஒண்ணுமில்லேன்னாலும் காது கொடுத்துக்கேட்கத்தான் உடன்போனோம்:):)அப்பம் இட்லியெல்லாம் செஞ்சிவச்சிட்டுதான்:):)

கிருஷ்ண மூர்த்தி S said...

வேத அத்யயனத்தை நல்லபடியாகப் புதுப்பிச்சாச்சா!திவா சார் சொன்ன மாதிரி, அர்த்தம் தெரியாமலேயே வெறும் சடங்குகளை மட்டும் ஊருக்காக ஒப்புக்குச் செய்கிற போது ஆவணி எப்படி ஆடியிலேயே வருதுன்னு தான் கேட்கத் தோன்றும்!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கிருஷ்ணமூர்த்தி சார். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஷைல்ஸக்கா. உங்களுக்குப் பிடித்திருக்கு என்பது பற்றிச் சந்தோஷம். :-)

ஆசிகள் அளித்தமைக்கு நன்றி.

அமெரிக்காவில் நடந்த காக்ஷியை அளித்தமைக்கும் நன்றி. சிரத்தையுடன் செய்திருக்கிறார்கள்...மகிழ்ச்சி.

கிருஷ்ண மூர்த்தி S said...

தவிட, இந்தத் தேய்மானம், பழசாகிப் போவது எல்லாம் மந்திரங்களுக்கோ, வேதத்திற்கோ இல்லை. கோவிலுக்குப் போகிறவன், போன வேலையை விட்டு விட்டுப் பராக்குப் பார்க்க ஆரம்பித்துவிடுவதைப் போல, மனிதர்களாகிய நமக்கும், எதையுமே refresh செய்துகொள்ளாமல் ஒரே கவனத்தில் இருக்க முடிவதில்லை.

அதற்காகவே, என்ஜினை ரீஸ்டார்ட் பண்ணுகிற மாதிரி, இப்படி ஒரு ஏற்பாடு போல!

மெளலி (மதுரையம்பதி) said...

//என்ஜினை ரீஸ்டார்ட் பண்ணுகிற மாதிரி, இப்படி ஒரு ஏற்பாடு போல!//

அதே!. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திவா said...
நல்லது. எங்கே இப்படி பூணூல் போட்டுக்கிறாங்கன்னு கேக்கப்பாத்தா கூகிளாண்டவர் ன்னு சொல்லிட்டீங்க!//

எடத்தைப் பார்த்தாலே மடத்தைச் சொல்லீற மாட்டோமா? :))
திவா சார்
அது பாஸ்டன், Ashland, Lakshmi Temple-ல்ல நடக்கும் உபகர்மா!

கோயில் உணவறை இங்கிட்டு தான் ரொம்ப குறுகலா இருக்கும்! படத்தைப் பார்த்தாலே தெரியலையா? :))
நடாத்தி வைப்பவர்: கிருஷ்ண பட்டர்!

குமரன் (Kumaran) said...

//எஞ்ஞோபவித //

தமிழ் உச்சரிப்பில் இது சரிதானா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள் மௌலி. இது வரை நான் படித்த இடங்களில் எல்லாம் யக்ஞோபவிதம் என்று தான் படித்த நினைவு. அது தான் சரியான உச்சரிப்பாகவும் எனக்குத் தோன்றுகிறது.

திவா ஐயாவுக்கும் உங்களுக்கும் ஒரு செய்தி. மதுரையில் இப்படி ஒரு சமஸ்டி உபாகர்மா வருடா வருடம் சௌராஷ்ட்ர மேல் நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. இந்த முறை போகலாமா கூடாதா என்று என் தம்பி எங்கள் வாத்தியாரிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

Geetha Sambasivam said...

//மதுரையில் இப்படி ஒரு சமஸ்டி உபாகர்மா வருடா வருடம் சௌராஷ்ட்ர மேல் நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. //

அநேகமாய் எல்லா இடங்களிலுமே உபாகர்மா சமஷ்டியாகவே நடைபெறுகிறது.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி குமரன். டைப்பண்ணும் போதே நினைத்தேன் ஏதோ தப்பாக இருக்கிறதென்று, ஆனால் நீங்க வந்து சுட்டினபிறகே தெரிகிறது. நன்றி. பதிவிலும் திருத்திவிடுகிறேன்.

செளராஷ்ட்ரா ஸ்கூல் விஷயம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

மீள் வருகைக்கு நன்றி கீதாம்மா.