பத்ம விபூஷன், கலைமாமணி D.K.பட்டம்மாள் மறைந்தார் என்று தெரிகிறது. 90 வயதாகிய அவர் சற்று உடல் நலமில்லாது இருந்து இன்று இறைவனடி சேர்ந்தார் என்று கூறப்படுகிறது. கர்நாடக சங்கீத உலகில் த்ரிரத்னங்களாக எம்.எல்.வி, எம்.எஸ், ஆகியோருடன் கூறப்படுபவர்.
தமிழிசைக்கு திருமதி பட்டம்மாள் மிகுந்த சேவை செய்துள்ளார் என்றால் மிகையாகா. இந்தியாவின் சுதந்திரம் பெற்ற தினத்தன்று சென்னை வானொலியின் இவர் பாரதி பாடல்களைப் பாடி மகிழ்ச்சியை எங்கும் பரவச் செய்தவர். தீக்ஷதர் கிருதிகளை இவரும் இவர் சகோதரர் டி.கே. ஜெயராமனும் அதிக அளவில் பாடி பிரபலம் செய்தனர் என்று சொல்வர்.
அன்னாரது ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்.
|
2 comments:
திருமதி பட்டம்மாள் அவர்கட்கு அடியேனின் அஞ்சலி!
தேசபக்திப் பாடல்களை அதிகம் பிரபலமாக்கியவர் இவரே!
இசை இன்பம் வலைப்பூவில் பதிவிட நேரமில்லையே-ன்னு எண்ணிக் கொண்டிருந்தேன்! இங்கு இட்டு விட்டீர்கள்!
தினமலர் இதழில் படித்து மிகவும் வருத்தப்பட்டேன். டி.கே.பட்டம்மாள் எனது பாட்டியைப் போன்றே முகஜாடை உடையவர் என்பதாலும் எனக்கு மிகவும் பிடிக்கும். இறைவனின் திருவடியில் தனது இனிய குரலால் மகிழ்விப்பார்.
Post a Comment