Wednesday, April 1, 2009

மதுரையிலேயே பெரிய வீடு... (கும்பாபிஷேகச் சிறப்புப் பதிவு -1)


திடீரென இன்று காலையில் குமரனிடமிருந்து ஒரு மின்னஞ்சல், மதுரையம்பதியில் கும்பாபிஷேகச் சிறப்புப் இடுகைகள் வரவேண்டும் என்று. அவர் கேட்டது தினம் ஒரு இடுகையாக ஏப்ரல் 8ஆம் தேதி வரையில். தினம் ஒரு பதிவு எழுத முடியுமெனத் தோன்றவில்லை. ஆனாலும், மீனாக்ஷி கோவில் கும்பாபிஷேகத்தை மதுரையம்பதியில் கொண்டாடாது வேறு எங்கே கொண்டாடுவது?. ஆகவே, முடிந்த அளவு எழுதுவதாகச் சொல்லியிருக்கிறேன்.

இன்று கோவில் பற்றிய சிறு-சிறு செய்தகளைப் பார்க்கலாமா?. [இவை முன்பே எழுதியதுதான், சற்று மாற்றங்களுடன் இங்கே அளித்திருக்கிறேன்]


மதுரை என்ற உடன் மனதில் நினைவிலாடுவது 2 விஷயங்கள். ஒன்று மீனாக்ஷி, இன்னொன்று மதுரை மல்லிகை பூ. இன்றும் மதுரையிலிருந்துதான் உலகெங்கும் மல்லிகை ஏற்றுமதியாகிறது. இதுபோலவே சாக்தர்களுக்கு மீனாக்ஷி கோவில் முக்கிய இடம் வகிக்கிறது, சக்தி வழிபாட்டில் மதுரைக்கு ராஜமாதங்கி சியாமளா பீடம் என்று பெயர்.

இங்குள்ள மீனாக்ஷி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது, அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர்.மேலும் தடாதகை, கோமளவல்லி, அங்கயற்கண்ணி, பாண்டிய ராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தர வல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவது, இந்த அன்னை மீனாக்ஷியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாக்ஷி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை/அதை காத்து குஞ்சு பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாக்ஷி தன் அருட்கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்.

சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள பல நூறு கோவில்களில் இதுவே முதன்மையானது. சுடலையாண்டி, ருத்திரன் என்றெல்லாம் அழைக்கப்படும் சிவன், பாண்டிய ராஜ குமாரியை (மீனாக்ஷி) மணக்க வருகையில் அழகிய வடிவெடுத்து வந்தாராம். அந்த சுந்தர வடிவால் அவருக்கு சுந்தரன் என்றும், சொக்க வைக்கும் அழகால் சொக்கன் என்றும் பெயர். இங்கு கருவரையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிகபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்கு எதிரே மாலிகபூரால் உடைக்கப்பட்ட லிங்கம் காட்சிக்கு உள்ளது.

குலசேகர பாண்டியன் காலத்தில் முதன் முதலில் கடம்பவனக் காட்டில் ஸ்வயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் நகரத்தையும் நிர்மாணித்ததாக வரலாறு. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சொக்கநாதர். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம். இங்கே தல விருக்ஷமே கடம்ப மரந்தான். பல காலங்களுக்கு முந்தைய கடம்ப மரம் ஒன்று இன்றும் துர்கை சன்னதிக்கு முன்னால் தனி பீடத்தில் இருக்கிறது. மரம் பட்டுப் போயிருந்தாலும், காலத்தால் மிகப் பழையது என்பதால் விசேஷமாக, வழிபாட்டுக்கு உரியதாக இருக்கிறது.

ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சன்னதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கிறது. இக்கோவிலின் தீர்த்தம் பொற்றாமரை குளம், வைகை, மற்றும் கிருதமால் நதிகள். இன்று கிருதமால் நதி என்பது பல ஆக்ரமிப்புக்களால் வெறும் கழிவுநீர்க்கால்வாயாக உள்ளது. பலநூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக்குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதினத்தின் வழிபாட்டில் உள்ளது.

விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகிறது.

மற்ற எல்லா இடங்களிலும் இடதுகாலைத் தூக்கி நனடமாடும் நடராஜர், இங்கு வலதுகாலைத் தூக்கிவைத்து நடனமாடுகிறார். இந்தசன்னதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது. முன்னொரு காலத்தில் இங்குள்ள நடராஜ விக்ரகமும் இடது காலைத் தூக்கி ஆடுவதாகத்தான் இருந்ததாம். ஓர் பாண்டிய மன்னன் ஈசனைத் தொழுகையில், இப்படி இடது பதத்தை தூக்கியபடியே இருக்கும் ஈசனுக்கு கால் வலிக்குமே என்று வருந்தி, ஈசனைக் கால் மாற்றி ஆடிட வேண்டினானாம். அவ்வரசனது வேண்டுகோளை ஏற்ற சுந்தரேஸ்வரர், தமது காலை மாற்றி ஆடிக் காண்பித்தாராம். இது மதுரைக்கே ஆன சிறப்பு தரிசனம், சிதம்பரம் உட்பட வேறெங்கும் காணக் கிடைக்காது.

32 comments:

Raghav said...

அரிய விஷயங்கள் சொல்லிருக்கீங்கண்ணா.. எனக்கு அன்னை மீனாட்சியையும், கோபுரத்தையும் தவிர ஒண்ணும் தெரியாது.. இப்போ நிறைய தெரிஞ்சுகிட்டேன்..

Raghav said...

//மீனாக்ஷி கோவில் கும்பாபிஷேகத்தை மதுரையம்பதியில் கொண்டாடாது வேறு எங்கே கொண்டாடுவது?.//

அதானே :)

Raghav said...

// ஒன்று மீனாட்சி, இன்னொன்று மதுரை மல்லிகை பூ.//

முருகன் இட்லியை விட்டுட்டீங்களே :)

மதுரையம்பதி said...

படங்கள் கூகிளார் உபயம், வலையேற்றியவர்களுக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

அதானே1 பனி இல்லாத மார்கழியும் மௌளி அண்ணா இல்லாத மதுரை விழாவா?நல்லா எழுதுங்கோ! மதுராபுரி நிலயே! மணிவலயே! மரகதசாயே! மீனலோசனி பாச மோசனி! மீனாக்ஷி தேஹி முதம்

Sridhar Narayanan said...

வாழ்த்துகள் மௌலி அண்ணா. தொடர்ந்து வரும் பதிவுகளுக்காக வெயிட்டீஸ்.

தங்க முகுந்தன் said...

நாம் கல்லூரியில் கல்வி கற்ற போது மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரைப் பற்றிய ஒரு சங்கீதப் பாடல் பாடல் படித்திருந்தோம். அப்பாடலை இங்கு இணைப்பதில் ஓரளவு மனநிறைவடைகிறேன்.
சுந்தரரேஸ்வரனே - சுபகர(னே)
க்ருபாகடாட்சம் வைத்தெம்மை ஆண்டருள் - சுந்த

சந்த்ர சேகர(னே) சங்கராதிரு
ஆலவாயமர் ஸ்ரீ மீனாட்சி - சுந்த

பண் சுமந்த பாணர்போல் விறகுடன்
மண் சுமந்த திருமுடி அழகா
பெண் செய் பிட்டு விரும்பி மாறன் பிரம்படி
புண் சுமந்த மேனியனே மாமதுரை - சுந்த

மதுரையம்பதி said...

வாங்க தங்க முகுந்தன் சார்... :)

நல்ல பாடல், நினைவிருந்தால் முழுமையாக தாருங்களேன்?

மதுரையம்பதி said...

வாங்க ஸ்ரீதரண்ணா...ஏதேது ரொம்ப தொலைவிலிருந்து வந்திருக்கீங்க...:)

முதல் வருகைக்கு நன்றிண்ணா :)

மதுரையம்பதி said...

வாருங்கள் திராச....அந்தப்பாடலையும் போடத்தான் நினைத்திருக்கிறேன். தீக்ஷதருக்கு மிகப் பிடித்த, முக்தியளித்த க்ருதியல்லவா!...

மதுரையம்பதி said...

வாங்க பரவஸ்து ராகவ். அதானே, முருகன் இட்லிக்கடையை எப்படி மறந்தேன் :))

Anonymous said...

யாகசாலை பூஜை மதுரையம்பதிஅண்ணா வலைபூவில் தொடங்கியாச்சு போலருக்கே???...:)

தம்பி

ambi said...

//மீனாக்ஷி கோவில் கும்பாபிஷேகத்தை மதுரையம்பதியில் கொண்டாடாது வேறு எங்கே கொண்டாடுவது?. //

இது பாயிண்ட். :))


//சிறு-சிறு செய்தகளைப் பார்க்கலாமா//

You mean செய்திகளை..?

அவசரமா டைப்பினீங்களோ? எ-பி பரவலா இருக்கு.

சாக்தர்கள்
கருவறை

மீதிய மதுரை நக்கீரியம்மா வந்து கீறுவாங்க. :))

ambi said...

ஸ்ரீதரும் உங்க ஊர்காரர் தான், அதான் அடிச்சு பிடிச்சு வந்திட்டாரு. பாசக்கார ஆட்கள். :))

ambi said...

ஒரு துண்டு செய்தி,

பொற்றாமரை குளத்துக்கு போகிற வழில அதாவது விபூதி பிள்ளையாருக்கு நேரே இருக்கற முக்குல கல்-யானை பத்தியும் மாலிகாபூர் பத்தியும் ஒரு செய்தி (கல்வெட்டா) பெயிண்டுல எழுதி இருப்பாங்க.

படிச்சு இருக்கீங்களா? :))

மதுரையம்பதி said...

வாங்க தம்பி கணேசன்....

பதிவில் யாக சாலைப் பூஜையல்லாம் பண்ணனுமானா ஒவ்வொரு கால பூஜைக்கும் அல்லவா பதிவுகள் எழுதணும்? ... எனக்கு அவ்வளவு பாக்யம் கிடையாதுப்பா...:)

மதுரையம்பதி said...

வாங்க அம்பி....

பிழைகளைச் சுட்டியமைக்கு நன்றி....திருத்திவிட்டேன்..

முன்பு வலைக்கு வந்த புதிதில் டைப்பினேன்...அப்போது எல்லா எழுத்துக்களும் டைப் பண்ண தெரியாது...அதுக்கும் மேலே நேற்று பதிவு போடுவதில் இருந்த அவசரம், சரிபார்ப்பதில் இல்லை....அதான் பிழைகள்...

மதுரையம்பதி said...

//ஸ்ரீதரும் உங்க ஊர்காரர் தான், அதான் அடிச்சு பிடிச்சு வந்திட்டாரு. பாசக்கார ஆட்கள். :))//

ஓ! அப்படியா, நல்லது. ஹாஹாஹா...:)

மதுரையம்பதி said...

//பொற்றாமரை குளத்துக்கு போகிற வழில அதாவது விபூதி பிள்ளையாருக்கு நேரே இருக்கற முக்குல கல்-யானை பத்தியும் மாலிகாபூர் பத்தியும் ஒரு செய்தி (கல்வெட்டா) பெயிண்டுல எழுதி இருப்பாங்க. //

முக்குறுணி வினாயகரைச் சொல்கிறீர் என்று நினைக்கிறேன், அடுத்த பதிவில் வருகிறார் கணபதி/கணேசன் ::)....கல்வெட்டு மேல் மெயிண்ட் அடித்தது தெரியாது :)

ambi said...

//முக்குறுணி வினாயகரைச் சொல்கிறீர் என்று நினைக்கிறேன்,//

இல்லை, பொ-தாமரை குள முக்குல இருப்பாரே விபூதி பிள்ளையார் அவருக்கு நேரே எதிரே நீளமான ( நடைபாதை)ஒரு கெஜலெட்சுமி பொம்மைக்கு பக்கத்துல சுவரில் அந்த பெயிண்டில் எழுதிய கல்வெட்டு இருக்கு. :))

ஸ்ஸ்ஸ்பா, மதுரை பஸ்ஸுக்கு ஒரு டிக்கட் போடுங்கப்பா. :))

Sridhar Narayanan said...

//பொற்றாமரை குளத்துக்கு போகிற வழில அதாவது விபூதி பிள்ளையாருக்கு //

கரெக்டா அம்பி பிடிச்சாரு பாருங்க பாய்ண்டை. அந்த விபூதி பிள்ளையார்தான் பல ஜோடிகளுக்கு ‘சந்திப்பு’ இடமாக இருந்திருக்குன்னு சொல்லக் கேட்டிருக்கேன். ஒருகாலத்துல மதுரையோட மெரினா பொற்றாமரைக் குளம்தானே. நமக்கெல்லாம் கேள்வி ஞானம்தான். அம்பி மாதிரி ஜகதெலபிரதாபர்களுக்கு இந்த மாதிரி இடமெல்லாம் அத்துபடி பாருங்க :))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

துவஜாரோகணக் கொடியேற்றப் பதிவுக்கு அடியேன் வந்தனங்கள்!

//எனக்கு அன்னை மீனாட்சியையும், கோபுரத்தையும் தவிர ஒண்ணும் தெரியாது.. இப்போ நிறைய தெரிஞ்சுகிட்டேன்..//

ரிப்பீட்டே!

// ஒருகாலத்துல மதுரையோட மெரினா பொற்றாமரைக் குளம்தானே. நமக்கெல்லாம் கேள்வி ஞானம்தான். அம்பி மாதிரி ஜகதெலபிரதாபர்களுக்கு இந்த மாதிரி இடமெல்லாம் அத்துபடி பாருங்க :))))//

இதுவும் தெரியாத தகவல் தான்! இப்போ நெறைய தெரிஞ்சிக்கிட்டேன் ஸ்ரீதர் அண்ணாச்சி! ஸோ, இதுக்கும் ரிப்பீட்டே! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ambi said...
ஸ்ஸ்ஸ்பா, மதுரை பஸ்ஸுக்கு ஒரு டிக்கட் போடுங்கப்பா. :))//

KPN Frequent Flyer ராகவ் கிட்ட சொன்னீங்கன்னா, கை மேல் பலன்...ச்சே கை மேல டிக்கெட் ஸ்ரீமான் அம்பி அண்ணே! :)

மதுரையம்பதி said...

அம்பி, ரொம்ப க்ளோசா இந்த இடுகையை பாலோ பண்றீங்க போல.. :)

நீங்க சொன்ன கல்வெட்டு நான் பார்த்ததில்லை...முக்கால்வாசி நேரம் நான் தெற்கு கோபுரத்தின் வழியாகத்தான் கோவில் உள்ளே நுழைவேன்...விபூதிப் பிள்ளையாரிடம் விபூதி தரிக்காது செல்வதில்லை...ஆனால் கல்வெட்டு கண்களில் விழவில்லை. :)

மதுரையம்பதி said...

// ஒருகாலத்துல மதுரையோட மெரினா பொற்றாமரைக் குளம்தானே. நமக்கெல்லாம் கேள்வி ஞானம்தான். அம்பி மாதிரி ஜகதெலபிரதாபர்களுக்கு இந்த மாதிரி இடமெல்லாம் அத்துபடி பாருங்க :))))//

சரியாச் சொன்னீங்க ஸ்ரீதர்...அம்பிக்குத்தான் இதெல்லாம் தெளிவாத் தெரியுது...இங்கும் இவ்விஷயம் கேள்வி ஞானம் தான். :))

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

கீதா சாம்பசிவம் said...

// மீதிய மதுரை நக்கீரியம்மா வந்து கீறுவாங்க. :))//

அதான் உடனே வரலை! :P:P:P:P

திவா said...

// மரம் பட்டுப் போயிருந்தாலும், காலத்தால் மிகப் பழையது என்பதால் விசேஷமாக, வழிபாட்டுக்கு உரியதாக இருக்கிறது. //

பெரும்பாலான கோவிகளிலே இப்படித்தான் இருக்கோ?

இட நெருக்கடி ஏற்படும்போது/ சுற்றி தளம் போடும்போது ஒரு விஷயம் மறந்து விடுகிறார்கள். வேர்கள் சுவாசிக்கணூம்னா மண்ணா இருக்க வேண்டியது அவசியம். தண்ணீர் பாய வசதி இருந்தா போதும்ன்னு நினைக்கீறாங்க.
btw நெரூர்ல நல்லாவே ரிவைவ் ஆகிகிட்டு இருக்குன்னு சேதி! மரத்தடியிலே ஒரு 10 அடி டயாவுக்கு தளத்தை நீக்கி மண்ணாக்கிட்டாங்க.

மதுரையம்பதி said...

வாங்க கீதாம்மா...வருகைக்கும் கீரியமைக்கும் நன்றிகள் பல.

மதுரையம்பதி said...
This comment has been removed by the author.
குமரன் (Kumaran) said...

மதுரைன்னாலே நினைவுக்கு வருவது முதலில் மீனாட்சியும் அப்புறம் மதுரை மல்லியுமா? எந்த மல்லியைச் சொல்றீங்க? குமரன் மல்லியோ? :-)

குமரன் (Kumaran) said...

அம்பி சொல்ற 'வண்ணத்தால் எழுதிய தகவல் பலகை' சிதைந்த இலிங்கத்தோடு தலமரத்துக்குப் பக்கம் இருக்குங்க. உள் பிரகாரத்தில் இருந்து கல்யாணசுந்தரரைத் தரிசிக்க வெளிப்பிரகாரத்திற்குச் செல்ல ஒரு வழி இருக்கே. அங்கே. இன்னும் சொல்லணும்னா சண்டிகேஸ்வரருக்கு நேர் பின்னால்.