Monday, November 30, 2009

திருக்கார்த்திகைத் திருநாள்.....

தீபத்திற்கான திருவிழாக்களில் தீபாவளி ஒன்று, மற்றொன்று கார்த்திகை. தமிழகத்தில் தீபத்திருவிழாவாக நாம் கொண்டாடுவது கார்த்திகையே. இந்தப் பண்டிகையின் சிறப்பினையும், இறைவனை தீப-ஜோதியாக பெரியவர்கள் வழிபாடு செய்திட்ட சில நிகழ்வுகளையும் பற்றி இவ்விடுகையில் பார்க்கலாம். எல்லோருக்கும் திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.

எல்லா ஒளியும் இறைவனிடமிருந்தே தோன்றுகிறது என்பதை நிதர்சனமாக காட்டும் விழா கார்த்திகை தீபத் திருவிழா. கார்த்திகை முப்பது நாட்களும் விளக்குகள் ஏற்றி வீட்டின் நிலை/தலை வாசல் அருகே வைப்பது வழக்கம். கார்த்திகை மாதப் பெளர்ணமியன்று கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவது என்பது வழக்கம். விளக்கு ஏற்றும் போதும், சொக்கப்பனை கொளுத்தும் போதும் சொல்லப்படும் மந்திரம், உலகில் அனைவருக்கும் நன்மை ஏற்பட வேண்டும், மங்களம் எங்கும் பரவ வேண்டும் என்பதாகவே இருப்பதாகத் தெரிகிறது. இந்த சொக்கப்பனையில் எல்லோரும் சிறிதளவு குங்கிலியத்தை சேர்ப்பதன் மூலம் தமது பாபங்களை நீக்கிக் கொள்ளலாம் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.

சிவாலயங்களில் கர்பக்கிரஹத்தின் பின்புறம் லிங்கோற்பவ மூர்த்தியைக் காணலாம். சிவபெருமான் ஜோதிமயமாக நின்றபோது அடியை மஹாவிஷ்ணுவும், முடியை பிரம்மனும் தேடித் தோல்வியுற்றதைக் குறிப்பதே இந்த மூர்த்தி குறிக்கிறது. இதனையே திருநாவுக்கரசர் பின்வருமாறு கூறியுள்ளார்.






நாடி நாராயணன் நான்முகன் என்றிவர்
தேடித் திரிந்தும் காணவல்லதோ
மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத்
தாடிய பாதம் என் நெஞ்சுள் இருக்கவே

ஜோதி ஸ்வரூபனின் திருவடியைத் தேடி மஹாவிஷ்ணு கீழ் நோக்கிச் சென்றார், பிரம்மன் மேல் நோக்கிச் சென்றார். சிவபெருமான் ஜோதி ரூபமாக நின்றதை நினைவூட்டுவதே கார்த்திகைப் பெருவிழா.


திருவண்ணாமலை மற்றும் பல சிவஸ்தலங்களில் கார்த்திகைக்கு முந்தைய தினமான பரணியன்று அந்தி சாயும் நேரத்தில் ஒரு பெரிய அகல்-விளக்கினை ஏற்றி சிவபெருமானை அதில் ஆவாஹனம் செய்து அந்த தீபத்தை சுவாமி சன்னதியில் வைத்து பூஜிக்கின்றனர். மறுநாள் சொக்கப்பனையில் இருக்கும் பனைமரத்தின் அடித்துண்டில் அந்த தீபத்தை வைக்கின்றனர். இறைவன் ஜோதி ஸ்வரூபன் என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்யப்படுகிறது. இந்த சொக்கப்பனை ஆந்திரத்தில் "ஜ்வாலா தோரண விழா" என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அந்த பிரதேசத்தில் கூறப்படும் புராணம் வேறு மாதிரியானது.

தமிழகத்தில் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கு மலையே சிவஸ்வரூபம். திருவண்ணாமலையை நினைத்தாலேயே முக்தி என்பர். ஜோதி-ஸ்வரூபனின் அடி-முடி தேடிய சம்பவம் நடந்தது இங்கே என்று சொல்லப்படுகிறது. மலைமீது தீபத்திருநாளான இன்று ஒரு பெரிய செப்பு அண்டாவில், 24 முழம் உள்ள துணியில் கற்பூரத்தூளைக் கொண்டு திரியாக்கி நெய்யிட்டு தீபமேற்றுகிறார்கள். இக்கோவிலில் தீப தரிசன மண்டபம் என்றே ஒரு மண்டபம் இருக்கிறது. கார்த்திகையன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகி, இந்த மண்டபத்தில் எழுந்தருளியதும் மலைமீது தீபம் ஏற்றப்படுகிறது.





அண்ணாமலையானுக்கு அரோஹரா..
******************************************************************************
தீபத்தில் இறைவன்

ஜோதிர் மயமான இறைவன் அண்டத்தில் மட்டுமில்லாது பிண்டத்திலும் சுடரொளியாகப் பிரகாசிக்கிறார் என்கிறது வேத வாக்கியம். "தஸ்ய மத்யே வஹ்னிசிகா அநியோர்த்வா" என்பதாக கட்டைவிரல் அளவில் தீப ஜோதியாக பிரம்மம் இதயத்தில் விளங்குகிறது என்பது பொருள். சாக்தத்திலும் தீபத்தில் அன்னையை ஆவாஹித்து வழிபடுவது சிலரது மரபு. இவ்வாறு அம்பிகையை தீபத்தில் பூஜிக்கும் போது சாக்ஷி தீபம் என்று அருகில் இன்னொரு தீபமும் இருக்க வேண்டும் என்பர்.


விளக் கொளியாகிய மின் கொடியாளை
விளக் கொளியாக விளங்கிடு நீயே!
விளங்கிடு மெய் நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளக்கினர் தானே

என்று திருமந்திரத்தில் ஞான விளக்கினைப்பற்றி திருமூலரும்,

"அருள் விளக்கே அருட்சுடரே அருட்ஜோதி சிவமே
அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே"

என்று ராமலிங்க ஸ்வாமிகளும் தமது 'அருட் பெருஞ்ஜோதியில் கூறியிருக்கிறார். இவர் வடலூரில் ஒளி விளக்கிற்கே ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தவர். இன்றும் தை-பூசத்தன்று ஜோதி தரிசனம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. வள்ளலார் ஏற்றிய தீபமும், அன்னதானத்திற்க்காக ஏற்றிய அடுப்பும் அணையாது காப்பாற்றப்படுகிறது.


திருநாவுக்கரசர் பஞ்சாக்ஷர மந்திரமே ஒளி மயமானது என்பதை பின்வரும் பாடலில் கூறியிருக்கிறார்.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது ஜோதியுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயமே

சிவபெருமான் ஜோதியாக விளங்கியது போல மஹாவிஷ்ணுவும் ஜோதி ஸ்வரூபனாக இருந்திருக்கிறார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இதனை உணர்த்தும் கோவில் காஞ்சீபுரத்தில் இருக்கிறது. பெருமாள் திருநாமமே தீபப்பிரகாசர் என்பது. தீந்தமிழில் விளக்கொளிப் பெருமாள் என்று கூறப்படுகிறார். இந்த தலத்திற்கு திருத்தண்கா, தூப்புல் என்று பெயர். பிரம்மா யாகம் செய்கையில் அவர் மனையாள் சரஸ்வதியே அதைத் தடுக்க முயல்கிறாள். அப்போது பெருமாள் ஜோதியாக விளங்கியதாக இத்தலபுராணம் சொல்கிறது. இந்த பெருமாளை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார்,
மின்னுருவாய் முன்னுருவில் வேத
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்

என்று கூறியதாக நண்பன் சேஷசாயி சொல்லக் கேட்டிருக்கிறேன். நண்பன் இந்த பாசுரம் தவிர பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் பாசுரங்களையும் சுட்டிக் காட்டினான். அவை கீழே!

வையகம் தகழியாக வார் கடலே நெய்யாக
வெய்யக் கதிரோன் விளக்காகச் செய்ய
சுடரொளியின் அடிக்கே சூட்டினேன்
சொல்மாலை இடரொளி நீங்கவே

அன்பே தகழியாக ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியாக நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.

இவ்வாறாக எல்லா தெய்வங்களும் வாசம் செய்யும் தீபத்தை வணங்குவோம். மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

27 comments:

Raghav said...

பெரிய கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா... எங்க ஊர்ல பெரிய கார்த்திகைன்னு சொல்வாங்க. ஊரில் இருந்தவரை சிவன் கோவிலுக்கு தவறாமல் சென்று வந்துள்ளேன்.. இப்போ இப்புடி பதிவுல தான் சேவிக்க முடிகிறது.

Anonymous said...

// சாக்தத்திலும் தீபத்தில் அன்னையை ஆவாஹித்து வழிபடுவது சிலரது மரபு. இவ்வாறு அம்பிகையை தீபத்தில் பூஜிக்கும் போது சாக்ஷி தீபம் என்று அருகில் இன்னொரு தீபமும் இருக்க வேண்டும் என்பர். //

தீபத்தில் பகவதியை ஆவாகனம் செய்து மந்திர ரூபமாக 64 வகையான உபசாரங்களும் செய்து ஆராதிக்கும் முறைக்கு பகவதி சேவைனு பெயர், ஆனா இந்த பூஜைக்கு யந்திரம் ரொம்ப முக்கியம், அதில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தேவதை ஆராதிக்கப்படுவார்கள்.மலயாள நாட்டில் இந்த ஆராதனை மிகவும் பிரசித்தி.

தேவி மகாத்மியம் பாராயணம் செய்யும் போது தேவதையானவள் புஸ்தகத்தில் ஆவாகனம் செய்யப்பட்டு ஆராதிக்கப்படுவாள். பாராயண பீடத்திற்கு ஈசான மூலையில் சாக்ஷி தீபம் ஸ்தாபிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவாள்.

தம்பி

Raghav said...

அண்ணா, ஒரு சந்தேகம்.. சிவபெருமான் ஜோதி வடிவாய் நின்றதை குறித்து சிவன் கோவில்களில் தீபம் ஏற்றும் காரணம் தெரியும்.. ஆனால் பெருமாள் கோவில்களில் சிவன் கோவில் கார்த்திகைக்கு மறுநாள் தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்துவதன் காரணம் என்ன ?

திவாண்ணா said...

சரியான நேரத்தில் சரியான பதிவு.
காஞ்சி அருகில் பிரம்மா யாகம் செய்ய சரியான நேரத்துக்கு சரஸ்வதி வராமையால் வேறு துணையுடன் சங்கல்பம் செய்தார். இதனால் கோபம் அடைந்த சரஸ்வதி பெருக்கெடுக்க விஷ்ணு அணைபோல குறுக்கே படுத்து யாகத்தை காத்தார் என்பது வரலாறு.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராகவ். ஆமாம், பெரிய-கார்த்திகை என்றும் சொல்வாங்க..

வீடுகளிலும் பல தீபங்கள் ஏற்றி, அவல் பொரிக்கு பாகு கலந்து, அப்பம் போன்றவை செய்து ஜோதிக்கு நைவேத்தியம் செய்யப்படும். இப்பண்டிக்கைக்கு மட்டும் தான் பொரி, அது ஏன் என்று எனக்கு தெரியல்ல.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கணேசன்...

//தீபத்தில் பகவதியை ஆவாகனம் செய்து மந்திர ரூபமாக 64 வகையான உபசாரங்களும் செய்து ஆராதிக்கும் முறைக்கு பகவதி சேவைனு பெயர்//

ஆமாம், "சதுஷ்ஷஷ்டி உபசாராட்யா" என்ற நாமமே இந்த அறுபத்து நான்கு உபசாரங்களை குறிப்பதுதான். இந்த சதுஷ்ஷஷ்டி உபசாரமானது பரசுராம கல்பத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்குன்னு படித்த நினைவு. :-)

பகவத்பாதர் எல்லா தெய்வங்களுக்கும் மானச பூஜைக்கான ஸ்லோகங்கள் பண்ணினாலும், அம்பாளுக்கு மட்டும் செய்த சிறப்பு சதுஷ்ஷஷ்டி உபசாரம் சேர்ந்த மானச பூஜை. 64 உபசாரங்களுக்கும் ஸ்லோகங்கள் செய்வித்திருக்கிறார்.

அந்த ஸ்லோகங்களை பொருளுடன் தனிப் பதிவாகத் பிறகு இடுகிறேன்.

//இந்த பூஜைக்கு யந்திரம் ரொம்ப முக்கியம், அதில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தேவதை ஆராதிக்கப்படுவார்கள்.//

இதற்கென தனியாக ஏதாகிலும் எந்திரம் இருக்கிறதா?, இல்லை ஸ்ரீசக்ரமே தானா கணேசன்?.

//மலயாள நாட்டில் இந்த ஆராதனை மிகவும் பிரசித்தி//

ஆம், மலையாள நாட்டில்தான் தீப ஆராதனை அதிகம். எல்லா தெய்வங்களையும் அவர்கள் தீபத்தில் ஆவாஹித்து பூஜித்துவிடுவர்.

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆனால் பெருமாள் கோவில்களில் சிவன் கோவில் கார்த்திகைக்கு மறுநாள் தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்துவதன் காரணம் என்ன ?//

அந்த காரணம் நீங்கதான் சொல்லணும்...:-). இல்லத்துப் பெரியவர்களிடம் போன் போட்டு கேட்டு இங்கே சொல்லுங்களேன்?. நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

பதிவில் சொல்லியபடி, ஸ்ரீவைஷ்ணவத்திலும் ஜோதியாக இறைவனை உருவகப்படுத்தி வழிபட்டிருக்கின்றனர் ஆழ்வார்கள். அதனால் இருக்குமோ?.

இன்னொரு செய்தி, புரட்டாசி திருவோணத்தில் பெருமாளை உரல்-உலக்கையில் ஆவிர்பஹித்து பூஜிப்பது பல இல்லங்களில் வழக்கம். சில இல்லங்களில் உரல்-உலக்கைக்கு பதிலாக, மாவிளக்கு தீபத்தில் பெருமாளை பூஜிப்பர்...ஆனால் இந்த பூஜை ஸ்ரீவைஷ்ணவர்கள் செய்வதாகத் தெரியவில்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும், தகவலுக்கும் நன்றி திவாண்ணா.

Raghav said...

//அந்த காரணம் நீங்கதான் சொல்லணும்...:-). இல்லத்துப் பெரியவர்களிடம் போன் போட்டு கேட்டு இங்கே சொல்லுங்களேன்?. நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
//

கேட்டாச்சுண்ணா...
பதிலாக வேண்டுமா? இல்லை
பதிவாக வேண்டுமான்னு எங்க அக்கா கேட்டாங்க.. பதிவாவே போட்டுருங்கன்னு சொல்லிட்டேன் :)

Kavinaya said...

வெகு அழகான பதிவு. பிரவாகமாக எழுதியிருக்கிறீர்கள் :) தெய்வங்களெல்லாம் சுடரொளியாக இருந்து நம் மன இருளை நீக்குவதை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் எடுத்துக் காட்டிய பாடல் ஒவ்வொன்றும் மனதை உருக்குவன. மிக்க நன்றி. உங்களுக்கும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்.

மெளலி (மதுரையம்பதி) said...

//பதிலாக வேண்டுமா? இல்லை
பதிவாக வேண்டுமான்னு எங்க அக்கா கேட்டாங்க.. பதிவாவே போட்டுருங்கன்னு சொல்லிட்டேன்//

அதென்ன 'எங்க அக்கா'? :-)

பதிவுலகில் எல்லோருக்கும் அக்காவான ஷைல்ஸ்ஸக்காவா?..பதிவு போடறாங்களா?..நல்லது..லிங்க் கொடுங்க போட்ட பிறகு.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா...

பிரவாகம் என்றெல்லாம் சொல்லாதீங்க...எப்போதோ எடுத்து வைத்த குறிப்புக்கள் உதவின....இரவு ஒரே மூச்சாக உட்கார்ந்து எழுதினேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

திருக்கார்த்திகைத் திருநாள் தமிழ் மரபின் நெடுநாளைய திருநாள்!
விளக்கினைப் பற்றிய தகுந்த பதிகங்களும் பாசுரங்களும் பதிவுக்கு விளக்கு ஏற்றுகிறது!

//விளக் கொளியாகிய மின் கொடியாளை
விளக் கொளியாக விளங்கிடு நீயே!//

விளக்கில் ஒளியாக இறைவியும், விளக்காக இறைவனும் விளங்குவதே பல சமயங்களின் தாத்பர்யம்! அதான் நீங்கள் கொடுத்த இரண்டு பாசுரங்களிலும், விளக்கை ஏற்றிய அடுத்த நிமிடமே "திரு"க் கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று அடுத்த பாசுரம் பாடுகிறார்!

// சொக்கப்பனை கொளுத்தும் போதும் சொல்லப்படும் மந்திரம்//

என்ன மந்திரம் அது? அறியத் தாருங்களேன்!

சொக்கப்பனையைக் கொளுத்துபவர் சொல்வதா? அவர் சரியான நேரத்துக்குள் கொளுத்திட்டு வெளியே வந்துவிட வேண்டும் அல்லவா?

//பிரம்மா யாகம் செய்கையில் அவர் மனையாள் சரஸ்வதியே அதைத் தடுக்க முயல்கிறாள். அப்போது பெருமாள் ஜோதியாக விளங்கியதாக இத்தலபுராணம் சொல்கிறது//

//திவா said...
கோபம் அடைந்த சரஸ்வதி பெருக்கெடுக்க விஷ்ணு அணைபோல குறுக்கே படுத்து யாகத்தை காத்தார் என்பது வரலாறு//

குறுக்கே விளக்கு போல் படுத்துக் காத்தாரா?
புரியலையே! புதசெவி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜோதி ஸ்வரூபனின் திருவடியைத் தேடி மஹாவிஷ்ணு கீழ் நோக்கிச் சென்றார், அது தாமஸ குணத்தைக் குறிப்பது.

பிரம்மன் மேல் நோக்கிச் சென்றது ராஜஸ குணத்தைக் குறிப்பது.

இறையை தாமஸ குணத்தாலும், ராஜஸ குணத்தாலும் காண முடியாது. இறைவனை சத்வ குணத்தால் மட்டுமே காணலாம் என்பதே இதன் தாத்பர்யம்//

இங்கே பெருமாள் வராகமாய் கீழே சென்ற குணம் தாமச குணம் அல்ல என்பதை லிங்க புராணம் சைவ புராணங்களைக் கொண்டு என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும்!

நான்முகன் காணாததைக் கண்டதாகச் சொல்வது ராஜச குணம் என்று மாற்றிச் சொல்கிறீர்களே!

பொய் உரைப்பது, பொய் சாட்சி கொண்டு வருவது தாமச குணமா இல்லை ராஜச குணமா? விளக்குங்களேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@மக்கள்ஸ்
இதைப் பல காலம் தப்பாகவே புரிந்து கொண்டு மேலோட்டமாகவே இவ்வாறு சொல்லப்பட்டு வருகிறது!
அதனால் ஸ்கந்த புராணம்/லிங்க புராணம் காட்டும் தாத்பர்யத்தை இங்கே பதிந்து வைக்கிறேன்!

பொதுவாக மும்மூர்த்திகளுக்கு சத்வ/ராஜச/தாமச குணங்களைக் காட்டும் போது முறையே விஷ்ணு/பிரம்மா/சிவன் என்று காட்டினாலும்...அவை முடிந்த முடிபான குணங்கள் அல்ல!

ஒவ்வொரு திருவிளையாடலிலும் ஒவ்வொரு மூர்த்தி ஒவ்வொரு குணத்தைக் கொண்டு, நமக்காகக் காட்டி அருள்வார்கள்! ஒரே மூர்த்தியிடம் தான் ஒரே குணம் என்பது இல்லை! மனிதனின் குணம் எப்படி மாறிக் கொண்டே இருக்கோ, அதே போல குணங்கள் மாறிக் கொண்டே இருப்பதைத் தான் மும்மூர்த்திகளும் காட்டுகிறார்கள்!

இறைவனின் அடி-முடி தேடிய போது, ஈசனின் முடியைத் தேடாது, அடியைத் தேடிய பெருமாளும் அப்பாலும் "அடிச் சார்ந்தவர்" என்னும் அடியார் தான்!

அடியைத் தேடிக் காணாத போது, தோல்வியை ஒப்புக் கொள்ளவும் ஒரு மனப் பக்குவம் வேண்டும் அல்லவா? தோல்வியைத் தவறான வழிகளால் வெற்றி ஆக்கும் முயற்சிகளில் ஈடுபடாது வந்து நிற்கிறது வராகம்!

இந்த நேர்மையில் மகிழ்ந்த ஈசன், தன் திருவடிகளைக் காட்டிக் கொடுக்கிறார்! ஆணவத்தால் தேடினால் தலையும் தலைமையும் தெரியுமா? பணிவால் அடியைத் தொட்ட போது, ஈசனின் தலை தானே தெரிந்தது! காயத்ரி உச்சாடனம்

இதை பிரம்மாவே சனகரிடம் சொல்ல, நைமிசாரண்யத்தில் சுதர் ரிஷிகளுக்குச் சொல்கிறார் - ஸ்கந்த புராணம் பார்க்கவும்!
சிவபுராணம், லிங்க புராணம் இரண்டிலும் கூட, கிட்டத்தட்ட இதே நிகழ்வுகள் தான்!

எதிலுமே வராகத்தைத் தாமசம் என்று சொல்லவில்லை என்பது உறுதி!

ஸ்மிருதிகளின் தாத்பர்யத்தைச் சுருக்கித் தரும் போது,
ராஜசத்தைத் தாமசம் என்றும், தாமசத்தை ராஜசம் என்று மாற்றித் தருதல் கூடாது...

இனி இப்படி எழுதும் போது, சற்றே நுணுக்கி எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

(தாத்பர்யத்தைத் தன் போக்குக்கு ஏற்றவாறு மாற்றித் தொனிக்கிறார்கள், அதற்கான அதிகாரம் நமக்கு இல்லை என்று குற்றம் சாட்டும் நாமே அதைச் செய்தால் எப்படி? :))

குமரன் (Kumaran) said...

கார்த்திகை தீபத்திருவிழாவைப் பற்றி சங்க இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் பலவாறாகப் பேசுகின்றன என்று அறிகிறேன். ஆடிப்பெருக்கும் பேசப்பட்டிருக்கிறது - இன்று காவிரிக்கரையில் மட்டும் தான் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அன்று மதுரையிலும் / வைகையிலும் கொண்டாடப்பட்டதாக பரிபாடல் சொல்கிறது.

குங்கிலியம் என்றால் என்ன? கற்பூரமா?

அடிமுடி தேடிய கதையின் தத்துவத்தை இப்படி நான் எண்ணிக் கொள்வதுண்டு - கல்வியாலும் செல்வத்தாலும் இறையின் அடியையும் முடியையும் காணமுடியாது. 'என்னால் இயலாது' என்ற உபாய கைவிடலால் சரண் அடையும் போது தானே அடியும் முடியும் தெரிகிறது. கல்வியால் முடியாது என்பதை கலைமகள் கணவனால் காணமுடியாததால் சொல்லலாம்; செல்வத்தால் முடியாது என்பதை செல்வத்திருமகள் கேள்வனால் காணமுடியாததால் சொல்லலாம். என்னால் முடியாது என்று அடி அடைந்ததும் முடியும் தென்பட்டத்தை வராகரூபியின் செயலால் சொல்லலாம். :-)

ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று எல்லா அருளாளர்களும் தீபத்தைப் பற்றி சொன்னதை மிக அழகாகச் சொன்னீர்கள் மௌலி.

தீப மங்கள ஜோதீ நமோ நம:

Anonymous said...

// இதற்கென தனியாக ஏதாகிலும் எந்திரம் இருக்கிறதா?, இல்லை ஸ்ரீசக்ரமே தானா கணேசன்?//

அந்த யந்திரத்தின் பெயர் "ஸர்வதோ பத்ரம்".மத்திய பாகத்தில் 6 சிவலிங்க உருவம் இதில் வரும்.

தம்பி

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்.

//கார்த்திகை தீபத்திருவிழாவைப் பற்றி சங்க இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் பலவாறாகப் பேசுகின்றன என்று அறிகிறேன்.//

இதெல்லாம் நீங்க சொன்னாத்தான் தெரியும்..தயவு செய்து சங்க இலக்கியங்கள் பற்றி நீங்கள் எழுத இருக்கும் லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க குமரன்.நீங்கள் என்னிடம் ஏற்றும் தீபமாக இருக்கும் :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கே.ஆர்.எஸ்.

உங்க எப்போதும் போல இஷ்டைலில் பின்னூட்டத்தை வாரி வழங்கியிருக்கீங்க...நன்றி. :-)

//ஒவ்வொரு திருவிளையாடலிலும் ஒவ்வொரு மூர்த்தி ஒவ்வொரு குணத்தைக் கொண்டு, நமக்காகக் காட்டி அருள்வார்கள்! ஒரே மூர்த்தியிடம் தான் ஒரே குணம் என்பது இல்லை! மனிதனின் குணம் எப்படி மாறிக் கொண்டே இருக்கோ, அதே போல குணங்கள் மாறிக் கொண்டே இருப்பதைத் தான் மும்மூர்த்திகளும் காட்டுகிறார்கள்//

ஹிஹிஹி...நான் பதிவில் இதுதான் இந்த ரூபத்திற்கான ஒரே குணம் என்று சொல்லவில்லையே?....எது எப்போது அதிகமாக இருந்திருக்கலாம்/இருந்திருக்கு என்பதாகத்தான் சொன்னேன். நீங்க சொல்வதை ஏற்கிறேன்...ஒவ்வொரு அவதாரத்திலும் ஒரு வித குணம் அதிகமாக தென்படலாம், அது அவதார நோக்கத்தை நிறைவு செய்வதற்காக....

//ஸ்மிருதிகளின் தாத்பர்யத்தைச் சுருக்கித் தரும் போது,
ராஜசத்தைத் தாமசம் என்றும், தாமசத்தை ராஜசம் என்று மாற்றித் தருதல் கூடாது...//

உத்தரவு எஜமான். :-)

திவாண்ணா said...

//கோபம் அடைந்த சரஸ்வதி பெருக்கெடுக்க விஷ்ணு அணைபோல குறுக்கே படுத்து யாகத்தை காத்தார் என்பது வரலாறு//

குறுக்கே விளக்கு போல் படுத்துக் காத்தாரா?//

//குங்கிலியம் என்றால் என்ன? கற்பூரமா? //

சாம்பிராணிக்கு ஒரு மூலப்பொருள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஹிஹிஹி...நான் பதிவில் இது தான் இந்த ரூபத்திற்கான ஒரே குணம் என்று சொல்லவில்லையே?....//

எப்பமே பதிவில் சொல்லி இருக்குறதையே மட்டுமா வச்சி கேள்வி கேட்டிருக்கோம்? அதே ரூல்ஸ் தானே இப்போதும்? :)

இதுக்கு என்ன அர்த்தமாம்?
//சத்வ குணத்தால் "மட்டுமே" காணலாம் என்பதே இதன் தாத்பர்யம்//

//மஹாவிஷ்ணு கீழ் நோக்கிச் சென்றார், அது தாமஸ குணத்தைக் குறிப்பது. பிரம்மன் மேல் நோக்கிச் சென்றது ராஜஸ குணத்தைக் குறிப்பது//

மகாவிஷ்ணு தாமச குணமா?இல்லை கீழ் நோக்கிச் செல்லுதல் தாமச குணமா? யாரை, எதை தாமசம் என்று "மறைமுகமாகச்" சொல்ல வருகிறீர்கள்?

மெளலி (மதுரையம்பதி) said...

சத்வகுணத்தால் பர-பிரம்மத்தை காணலாம்/உணரலாம் என்பது ஒரு ஜெனரல் ஸ்டேட்மெண்ட். நீங்க எப்போதும் சொல்வது போல, அவரவர் பார்வைக்கு ஒவ்வொரு மாதிரி தெரியும். இதற்குமேல் இதில் நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. நான் சொல்லியதை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திவாண்ணா. குங்கிலியம் பற்றி இன்னொரு நண்பர் கேட்டார் மெயிலில், பதில் சொன்னேன்,...இங்கு விடுபட்ட அந்த கேள்விக்கு நீங்க சொல்லிட்டீங்க...நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//"அணை போல" குறுக்கே படுத்து யாகத்தை காத்தார் என்பது வரலாறு//

அதான் கேட்டேன் திவா சார். அணையாய் படுத்துக் காக்கும் போது, விளக்கு எங்கே வந்தது? பெருகி வரும் நீரைத் தடுக்க அணை ஆனான். சரி. எதற்கு விளக்காய் ஜோதியாய் ஆனான்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
நான் சொல்லியதை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி//

இது மமதையான பேச்சு!
நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்பது தான் கேள்வி!

வராகம் கீழே சென்றது தாமச குணம் தானா?

பொய் உரைத்தாலும், பொய் சாட்சி சொன்னாலும், மேலே சென்று விட்டால் அது ராஜசம். அப்படியெல்லாம் தவறு செய்யாவிடினும் கீழே சென்ற ஒரே காரணத்தால் அது தாமசமா?

அப்படித் தான் ஸ்மிருதிகளில் சொல்லி இருக்கா?
அதைத் தான் நீங்கள் சொன்னீர்களா? இல்லை அது நீங்களாகச் சொன்னீர்களா?

//நீங்க எப்போதும் சொல்வது போல, அவரவர் பார்வைக்கு ஒவ்வொரு மாதிரி தெரியும்//

:)
அதே நியாயம் தானே அப்போதும்? எப்போதும்? புரிந்தால் சரி! :))

திவாண்ணா said...

//அதான் கேட்டேன் திவா சார். அணையாய் படுத்துக் காக்கும் போது, விளக்கு எங்கே வந்தது? பெருகி வரும் நீரைத் தடுக்க அணை ஆனான். சரி. எதற்கு விளக்காய் ஜோதியாய் ஆனான்? //

நான் எழுதியது கூடிதல் தகவல்தான். மௌலி எழுதியது தப்பு என்று சொல்லவில்லை.

//ஒரு முறை சரஸ்வதிக்குத் தெரியாமல் பிரமன் யாகம் நடத்தினான். இதை அறிந்த சரஸ்வதி, மாயநலன் என்ற அரக்கனின் துணையுடன் அந்த யாகத்தை அழிக்க முயன்றாள்.மாயநலன், யாகத்தை அழிக்க உலகம் முழுவதையும் இருட்டாக்கினான். பிரமன் திருமாலின் துணையை வேண்டினான். திருமாலும் ஒரு பேரொளியாகத் தோன்றினார். இருளை அகற்றினார். எனவே, திருமாலுக்குத் தீபப் பிரகாசர் என்ற பெயர் தோன்றிற்று. இப்படி ஜோதி வடிவில் தோன்றிய பெருமாளை தீப உருவில் வைணவர்கள் வணங்குவர்.//

இப்படி தகவல் இருக்கு.

திவாண்ணா said...

//இது மமதையான பேச்சு!//

இது நல்லா இல்லியேப்பா!
ஆன்மீகம் எழுதற இடத்தில இப்படி எழுதறது எல்லாம் ஆரோக்கியமா தோணலை. டேக் இட் ஈஸி ரவி!