Thursday, July 3, 2008

பக்தி சில எண்ணங்கள்......பகுதி -2


பல மாதங்கள் கழித்து நண்பனுடன் சில நாட்கள் முன் சாட்டினேன். கடந்த முறை சாட்டியதை தொடரவே நினைத்தாலும், திவாண்ணாவின் பதிவுகள் பக்கம் பேச்சு திரும்பியதால் கர்மா, கர்மயோகம் ஆகியவற்றுக்கான வேறுபாடு, ஞான யோகம், பக்தி யோகம் என்று எங்கோ சென்றுவிட்டோம். ஞான மார்க்கத்தில் இருக்கும் யம, நியம, ப்ராணாயாம, தாரண, ஆசன, சமாதி போன்றவை பற்றியெல்லாம் பேசி, இன்றைய நிலையில் அதனை செயல்படுத்துவதில் இருக்கும் கஷ்டங்களையும், பக்தி யோகத்தில் இருக்கும் 32 ப்ரம்ம வித்தைகள் என்ன என்று தெரிந்தவற்றை பட்டியலிட்டு, முடிவாக பக்தி யோகமும் சராசரியான என் போன்றவர்களுக்கு அல்ல என்றே முடிவுக்கு வந்தோம். எத்தனையோ நெறிகள். வேதம் சொல்லும் ஓராயிரம் தர்மங்களையும் இன்றைய காலத்தில் செய்ய முடிகிறதா?. நித்ய கர்மாக்களையே நம்மிடத்து எவ்வளவு பேர் செய்கிறோம்?.


இவ்வாறாக எந்த யோகமும், செய்ய இயலாத நமக்கு இறையருள் கிடையாதா என்று பேசிக்கொண்டிருக்கையில் சட்டென நினைவில் வந்தது "த்வமேவ உபாயபூதோ மே பாவ இதி ப்ரார்தநா மதி: சரணாகதி:" என்னும் கீத வாக்கியம், கீதாம்மா வாக்கியமல்ல....கீதையில் கண்ணன் சொன்னது. அதாவது கர்ம/பக்தி/ஞான யோகம் செய்தால் அடையும் கிடைக்கும் பலன்களை, பரமாத்மாவின் திருவடியைப் பற்றி சரணாகதியானாலேயே கொடுத்து விடுகிறானாம். 'என்னையே சரணடை' என்றும் அடைந்தால் எளிதில் பலனளிக்கிறேன் என்றும் கூறுகிறான் கண்ணன். இறைவன் திருவடியை பற்றிக் கொள்வதே சிறந்தது, அதுதான் சரணாகதி. "நீ தான் உபாயம்; நீ தான் உபயம்; பலனும் நீயே" என்பதாக பிடித்துக் கொள்வது சரணாகதி.


ஞான யோகம், பக்தி யோகம் போன்றவற்றில் இருப்பது போல சரணாகதிக்கும் சில விஷயங்கள் உண்டு. ஐந்து அங்கங்களுடன் கூடிய ஆறாவதான ஆத்ம சமர்ப்பணம் தான் சரணாகதி. ஐந்து அங்கங்கள் நம்மிடம் இருக்க வேண்டும், அத்துடன் கூடிய ஆத்மாவை அப்படியே சமர்ப்பித்தலே சரணாகதி. ஆக ஐந்து அங்கங்கள், ஆறாவதாக சரணாகதி. சரி, அதென்ன ஐந்து அங்கங்கள்?.


'அநூகூல்யஸ்ய சங்கல்ப: ப்ரதி கூல்யஸ்ய வர்ஜனம் ரக்ஷிஸ்யதிதி விஸ்வாஸோ கோப்த்ருத்வே வரணம் ததா ஆத்மநிஷே கார்பண்யே ஷட்விதா சரணாகதி'


[இதைத்தான் ஆண்டாள், "உய்யும் வகை ஆறை எண்ணி" (திருப்பாவை 2ஆம் பாடல்) என்று கூறினாள் என்று நண்பன் கூறினான். இதுபோன்றே அவன் பெரிய திருவந்தாதியிலும் ஒரு பாடல் சொன்னான். எனக்கு அந்த தொடர்பு தெரியவில்லை, ஆகவே அந்த பாடலை இங்கு தரவில்லை. நினைவில் வருகையில் அதை பின்னூட்டமாகத் தருகிறேன். ]


ஒவ்வொரு அங்கமாக பார்க்கலாம். "அனுகூலஸ்ய சங்கல்பம்" என்றால் இறைவனிடமும், பக்தர்களிடமும் ப்ரீதியுடன் இருத்தல் என்பதே இது. சாஸ்திரம் சொல்வதை கேட்பதும், அதன்படி நடத்தலும், இறைவனது கல்யாண குணங்களைப் பாடுவதும், போற்றுவதும், பாகவதோத்தமர்களிடத்து ப்ரியத்துடன் இருத்தலும் ஆலயங்களுக்கு சென்று வணங்குதலுமாக பகவான் நம்மை விரும்பும்படியாக நாம் இருக்க வேண்டும். இறைவன் எவனை விரும்புகிறானோ அவன் இறைவனால் அடையப்படுகிறான் என்கிறது கடோபநிஷத். சரி, பரமாத்மா தன்னிஷ்டத்துக்கு யாரை வேண்டுமானாலும் விரும்பி செல்வான் என்றால் என்ன பொருள்?. யாரையெல்லாம் விரும்புவான்?. வேதத்திற்கு அனுகூலமாய், கர்மானுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டு, ஸ்வதர்மத்தை விடாது அனுசரித்துச் செல்பவனை பகவான் விரும்புவான். பகவானுக்கு எது ப்ரீதியோ அதை கட்டாயம் செய்ய வேண்டும். அதுதான் 'அனுகூலஸ்ய சங்கல்பம்'.


"பர்திகூலஸ்ய வர்ஜனம்" என்றால் என்ன?, அனுகூலத்துக்கு தடையாக இருப்பதை விலக்குதல் ப்ரதிகூலம் என்று சொல்லலாம். குடும்பத்தில் எல்லோரும் கோவிலுக்கு செல்ல நினைக்கையில் ஒருவர் அதை வேண்டாமென சொல்லும் போது, வேண்டாம் என்பவரை விடுத்து மற்றவர்கள் செல்ல வேண்டும். இறைவனை அடைவதற்கு ப்ரதிபந்தமாக இருப்பவற்றை மொத்தமாக விலக்க வேண்டும் என்பதே இரண்டாம் அங்கம்.


"ரக்ஷிஸ்யதிதி விஸ்வாசம்" - இறைவனிடத்து பூரணமான நம்பிக்கை என்பது மிக அவசியம். குமரில பட்டர் பெளத்தம் கற்பதற்காக பெளத்த மதத்தவராக நடித்துவரும் காலத்தில் பெளத்த மடலாயத்தில் இருப்பவர்கள் குமரிலரின் உண்மை நிலை அறிந்து அவர் செய்யும் வஞ்சகமான செயலுக்கு தண்டனையாக அவரை வஞ்சமாக கொல்ல மடாலயத்தின் மேல் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயல்கின்றனர். அப்போது பட்டர் தனது ப்ரார்த்தனையாக 'நான் நம்பும் வேதம் உண்மையானால் அது என்னைக் காக்கட்டும்' என்று கூறுகிறார். அவர் தனது கால் ஊனமாவதுடன் உயிர் பிழைக்கிறார். அப்போது அசிரீரி பின்வருமாறு சொல்கிறது, 'உனக்கு வேதத்தின் மீது முழு நம்பிக்கை இல்லை, 'உண்மையானால்' என்று சந்தேகத்துடனேயே இருந்ததால் உன் கால்களை நீ இழக்க நேரிட்டது'. ஆக பூரண விஸ்வாசம் எப்படியிருக்கக் கூடாது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது போன்று, இறைவனது திருவடியை பற்றும்போது, அவன் ரக்ஷிப்பானா?. கைவிட்டுவிடுவானா?, கைவிட்டால் என்ன செய்வது? என்ற மாற்று சிந்தனைகளே இருக்கக் கூடாது. இவ்வாறான சந்தேகத்துடன் திருவடியைச் சரணடையக் கூடாது. பூரண விஸ்வாசத்துடன், நீயே கதி என்பதாக சரணடைய வேண்டும்.

ஸ்ரீ வைஷ்ணவத்தில் ந்யாஸ தசகம் என்று ஒரு நூல் இருக்கிறது. ஸ்வாமி வேதாந்த தேசிகனால் சொல்லப்பட்ட நூல் இது. அதில், 'விஸ்வாஸ ப்ரார்த்தநா பூர்வம் ஆத்மரக்ஷா பர்மத்வய' என்கிறார். அதாவது, ஆத்மாவை ரக்ஷிக்க வேண்டிய பொறுப்பு இறைவனுடையது என்று அவனிடம் விஸ்வாசத்துடன் ஆத்ம சமர்பணம் செய்தல் என்பது அடுத்த அங்கம்.


எனவே, யோகம் எல்லாம் பண்ண முடியல்லையே, கடைத்தேறுவது எப்படி என்று விசாரம் செய்துகொண்டே காலம் கழிக்காது, நித்திய கர்மாக்களை முடிந்தவரை கண்டிப்பாகச் செய்து கொண்டு "அவனருளால் அவன் தாள் பணிந்து" பூரண சரணாகதி செய்வோம்.

51 comments:

Geetha Sambasivam said...

இன்னும் படிக்கலை, பாபநாசம் கோயில் பத்தின லிங்கைத் தேடிப் போட்டுட்டு வந்து படிக்கறேன், :P

Geetha Sambasivam said...

//"உய்யும் வகை ஆறை எண்ணி" (திருப்பாவை 2ஆம் பாடல்) //

//
வையத்து வாழ்வீர்காள், நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள், பையத் துயின்ற பரமனடிபாடி,//

இதிலே "உய்யுமாறென்றெண்ணி"அப்படினு தானே ஆண்டாள் சொன்னா??ம்ம்ம்ம்ம்ம்?? //உய்யும் வகை ஆறு" னு ஒண்ணும் வரலையே? புதுசா இருக்கு??? :P எதுக்கும் பார்த்துக்கறேன் ஒருமுறை! திடீர்னு ஆண்டாள் மாத்திட்டாளோனு?

தி. ரா. ச.(T.R.C.) said...

நித்ய கர்மாக்களையே நம்மிடத்து எவ்வளவு பேர் செய்கிறோம்?.


Million dollar uestion?

Kavinaya said...

//பக்தி யோகத்தில் இருக்கும் 32 ப்ரம்ம வித்தைகள் என்ன என்று தெரிந்தவற்றை பட்டியலிட்டு//

எங்களுக்கும் சொல்லுங்களேன்..

//முடிவாக பக்தி யோகமும் சராசரியான என் போன்றவர்களுக்கு அல்ல//

சராசரி? தாங்கள்? அப்ப நாங்கள்?

//இறைவனது திருவடியை பற்றும்போது, அவன் ரக்ஷிப்பானா?. கைவிட்டுவிடுவானா?, கைவிட்டால் என்ன செய்வது? என்ற மாற்று சிந்தனைகளே இருக்கக் கூடாது. //

சரணாகதி பற்றி நல்லா விளக்கியிருக்கீங்க. என்னை மாதிரி இருக்கறவங்களுக்கும் வழி இருக்கு போல :) நன்றி மௌலி!

Geetha Sambasivam said...

இப்போத் தான் முழுசும் படிச்சேன்,

Geetha Sambasivam said...

பயிற்சி இல்லாமல் ஞானம்??? ஞானமா?? தியானமா?? எது சிறந்தது? தியானமா? கர்மபலனால் கிட்டுவதா?? அதையும் விட்டுவிட்டால், அப்போ கடைசியில் பூரண சரணாகதி??? அப்போ எல்லாத்தையும் விட்டுடணும் இல்லையா? எனக்குப்புரிஞ்சதைக் கேட்டிருக்கேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா....

உய்யுமாறென்றெண்ணி - இதை உய்யும் ஆறு வகைகளை எண்ணி அப்படின்னு பிரிச்சுட்டான் என் நண்பன்...தவராக இல்லையே? :-)

Geetha Sambasivam said...

"வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:
இந்த வையத்தில்(உலகத்தில்) வாழ்பவர்களே,நாம் பாவை நோன்புக்கு செய்யும் செயல்களை கேளுங்கள். பாற்கடலில் மெல்ல துயில் கொண்டுள்ள பரமனின் திருவடிகளை பாடுவோம். விடியற்காலை(நாட்காலே) நீராடுவோம். நெய்,பால் போன்றவற்றை உண்ணாமல் இருப்போம். கண்களுக்கு மையிடாமல், மலர்கள் சூடாமல் இருப்போம். செய்யக்கூடாதவற்றை செய்யாமல் இருப்போம். பிறரை கோள்(தீக்குறள்) சொல்லாமல் இருப்போம். தகுதியுள்ளவர்களுக்கு பொருளும்,பிச்சையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு(ஆந்தனையும்) கொடுப்போம்.

மெளலி (மதுரையம்பதி) said...

//Million dollar uestion?//

வாங்க திராச...இப்படி கேள்வியை எனக்கே திருப்பி கேட்டு மாட்டிவிடறீங்களே... :-)

Geetha Sambasivam said...

//உய்யுமாறென்றெண்ணி - இதை உய்யும் ஆறு வகைகளை எண்ணி அப்படின்னு பிரிச்சுட்டான் என் நண்பன்...தவராக இல்லையே?//
உங்க நண்பர் சொன்னது என்னமோ உங்களுக்குச் சரியாக இருக்கலாம், ஆனால் ஆண்டாள் அந்த அர்த்தத்தில் பாடவில்லையே? பாட்டும், பொருளும் கொடுத்திருக்கேன், தனியா, எத்தனை வருஷமாப் படிக்கிறேன், இன்னிக்கு அர்த்தம் வேறே வருதேனு தோணுது, அதான்!!!!

மெளலி (மதுரையம்பதி) said...

முழுசையும் படிச்சதுக்கு நன்றி கீதாம்மா :)

//பயிற்சி இல்லாமல் ஞானம்??? ஞானமா?? தியானமா?? எது சிறந்தது? தியானமா? கர்மபலனால் கிட்டுவதா?? அதையும் விட்டுவிட்டால், அப்போ கடைசியில் பூரண சரணாகதி??? அப்போ எல்லாத்தையும் விட்டுடணும் இல்லையா? எனக்குப்புரிஞ்சதைக் கேட்டிருக்கேன்.//

பயிற்சியால் தான் ஞானமும், தியானமும் கைவரும். கர்மபலன் என்பது ஒரு தொடர், அத்தொடரை அறுக்க வேண்டும். ஞானமும், தியானமும் பண்ண இயலாவிடினும், கர்மபலனை முழுதும் துறக்க, பூரண சரணாகதி உதவும்....அப்படிங்கறது என்னோட புரிதல். :)

மெளலி (மதுரையம்பதி) said...

கீதாம்மா, நீங்க பாடலுக்கு கொடுத்த பொருள் சரிதான்...

ஆனால், திருப்பாவை முழுவதையும் வேறு விதமாக, அதாவது அதில் இருக்கும் மறைபொருளைச் சொல்வதுண்டு. நண்பன் இந்த பதிவில் சொல்லியது அந்த வகை.

Geetha Sambasivam said...

//ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்."//

நம்மிடம் உள்ள அனைத்தையும், உரியவர்களுக்கு, இங்கே தக்கவர்களுக்கு என்ற பொருளில் வரும் அவர்கள் மனம் மகிழும் வண்ணம் கொடுத்து நாமும் மகிழ்வோம், இதுதான் உய்யுமாறெண்ணி= மனம் மகிழும் வண்ணம் என்ற பொருளில் வரும்னு நம்பறேன். தப்பாய்ச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

Geetha Sambasivam said...

//ஆனால், திருப்பாவை முழுவதையும் வேறு விதமாக, அதாவது அதில் இருக்கும் மறைபொருளைச் சொல்வதுண்டு. நண்பன் இந்த பதிவில் சொல்லியது அந்த வகை.//
என்றால் திருப்பாவையின் மறைபொருள் வெளிச்சத்துக்குக் கொண்டு வாருங்கள், காத்திருக்கோம், என் மாதிரி கை.நா.க்களுக்கும் புரியும் இல்லையா???

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா...

//எங்களுக்கும் சொல்லுங்களேன்..//

32 வித்தைகளை லிஸ்ட் பண்ணினா போதுமா?... :)

//சரணாகதி பற்றி நல்லா விளக்கியிருக்கீங்க//

ஆக நானும் கொஞ்சம் விளக்கமா பதிவெழுதறேன்னு சொல்றீங்க.. நன்றிக்கோவ்.. :)

மெளலி (மதுரையம்பதி) said...

//தப்பாய்ச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.//

அச்சோ!, கீதாம்மா, நீங்க சொன்னா தப்பாயிருக்குமா...

//திருப்பாவையின் மறைபொருள் வெளிச்சத்துக்குக் கொண்டு வாருங்கள், காத்திருக்கோம், என் மாதிரி கை.நா.க்களுக்கும் புரியும் இல்லையா?//

யாரு நீங்க கை.நா வா?..அது சரி :-)
எனக்கு முழு திருப்பாவைக்கும் இந்த மறைபொருள் விளக்கம் தெரியாதே...ஆனால் முயற்சிக்கலாம்...இண்ட்ரஸ்டிங்கா இருக்கும் :-). நண்பன் உதவியும் தம்பி கே.ஆர்.எஸ் உதவியும் கிடைத்தால் முழுவதையும் எழுதலாம்.
டிரைப் பண்றேன் கீதாம்மா :)

Geetha Sambasivam said...

ஒரு விதத்தில் "உய்யுமாறெண்ணி" க்கு அர்த்தம் புரியுது. அனைத்தையும் துறக்கணும் இல்லையா??? எல்லாத்தையும் தக்கவர்களுக்குக்கொடுக்கணும் இல்லையா??? அப்போ நம் கர்மாக்களுக்கான பலன்களும், இன்னும் அனைத்தையும் தியாகம் செய்து, அந்த ஆண்டவனையே சரணம்னு அடையணும் என்ற அர்த்தத்தில் ஆண்டாள் சொல்லி இருப்பாள் இல்லையா??? அப்பாடி, ஒரு மாதிரியா, குடைச்சல் தீர்ந்தது என் வரையில், நிம்மதியாத் தூங்கப் போலாம், ராத்திரி!

jeevagv said...

நல்லதொடு இடுகை திரு.மௌலி.
//அப்போது அசிரீரி பின்வருமாறு சொல்கிறது, 'உனக்கு வேதத்தின் மீது முழு நம்பிக்கை இல்லை, 'உண்மையானால்' என்று சந்தேகத்துடனேயே இருந்ததால் உன் கால்களை நீ இழக்க நேரிட்டது'//
அடக்கடவுளே, இப்படி 'Reading between the lines இருக்குமானால், நிறைய யோசித்துத்தான் பேசணும்!

வல்லிசிம்ஹன் said...

உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்."//

puthu vilakkam. Nanraagave irukku.

Good faith and faith alone can save us.

Thank you Mouli.
sorry to comment in English.

Geetha Sambasivam said...

//பாபநாசம் கோயில் பத்தின லிங்கைத் தேடிப் போட்டுட்டு வந்து படிக்கறேன், :P//

லிங்க் கிடைக்கலை, தொலைஞ்சு போன சில பதிவுகளிலே அதுவும் ஒண்ணு போலிருக்கு, நானே இப்போத் தான் கவனிச்சேன், ரொம்ப வருத்தமாப் போயிடுச்சு!! :(((((

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

கடைசி இரு பத்திகள் என்னைப் போன்றவர்களுக்குப் பொருந்தும்.

//எனவே, யோகம் எல்லாம் பண்ண முடியல்லையே, கடைத்தேறுவது எப்படி என்று விசாரம் செய்துகொண்டே காலம் கழிக்காது, நித்திய கர்மாக்களை முடிந்தவரை கண்டிப்பாகச் செய்து கொண்டு "அவனருளால் அவன் தாள் பணிந்து" பூரண சரணாகதி செய்வோம்.//


மறு மொழிகளும் பதில் மொழிகளும் நல்ல ஆரோக்கியமான விவாதமாக அமைந்து பதிவிற்கு மேலும் மெருகூட்டுகின்றன

அருமையான பதிவு - நல்வாழ்த்துகள்

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க சீனா சார்...நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

//puthu vilakkam. Nanraagave irukku.

Good faith and faith alone can save us.

Thank you Mouli.
sorry to comment in English.//

வாங்க வல்லியம்மா...நன்றி... :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஜீவா!!!

//அடக்கடவுளே, இப்படி 'Reading between the lines இருக்குமானால், நிறைய யோசித்துத்தான் பேசணும்!//

இது 'Reading between the lines இல்லை, ஷண நேரம் அவருக்கு வேதத்தின் மீது அவநம்பிக்கை வந்ததே, அது தவறு என்பதைக் குறிக்க மட்டுமே அந்த வரி :-)

மெளலி (மதுரையம்பதி) said...

கவிநயாக்கா,

நீங்க கேட்ட 32 வித்தைகளில் சில,

நியாஸ, அந்தர்யாமி, நாசிகேதச, உபகோசல, அக்நித்ரய, ப்ராஹ்மண, மாண்டூக்ய, பர்யங்க, ப்ருஹதாரண்யக, பாலாகி, மைத்ரேயி, கார்க் யக்ஷர, சாண்டில்ய,பார்க்க வீவாருணி, த்ரிமாத்ர-ப்ரணவ, தஹர, ஸத்யகாம, ஸம்வார்க்க, பஞ்சாக்னி,ஜியேஷ்ட-ச்ரேஷ்ட ப்ராண, உஷஸ்தகஹோல...என்பதாக தொடரும்...மிதி இருப்பவை எனக்கும் தெரியல்ல...தேடித்தான் பார்க்கணும்.

Geetha Sambasivam said...

இப்போ ஒரு சந்தேகம், மனசு மறையணும்னு பரமாசாரியார் சொல்லி இருக்கார், தன்னுடைய அருள் வாக்கிலே. அப்படி மனசு மறைந்தது என்றால், பக்தி செலுத்தறது எப்படி??/ உணருவது எப்படி?? பகவானுடைய உருவம், குணம், செயல்கள், அருள் போன்ற எல்லாவற்றையும் எப்படி அனுபவித்துத் தெரிந்து கொள்வோம்?? பகவானை நினைத்துத் தானே பூரண சரணாகதினு போகணும்??? அப்போ மனசை என்ன செய்யறது?? அது பகவானிடமே ஒன்றினால் போதுமா?? குழப்பமா யோசிக்கிறேனோ??? ம்ம்ம்ம்ம்ம்ம்??? ஆனால் இதெல்லாம் கேள்வியினாலும், வரும் பதில்களினாலும் புரிஞ்சுக்கற ஒண்ணில்லை, என்ற வரையில் தெளிவா இருக்கு!!! :(((((((

Kavinaya said...

//32 வித்தைகளை லிஸ்ட் பண்ணினா போதுமா?... :)//

அடடா, விளக்கமும் சொல்லணும்னு சொல்றதுக்குள்ள நீங்க முந்திக்கிட்டீங்க :)

//நீங்க கேட்ட 32 வித்தைகளில் சில,//

விளக்குங்களேன், நேரம் கிடைக்கிறப்போ...

நன்றி மௌலி.

மெளலி (மதுரையம்பதி) said...

//இப்போ ஒரு சந்தேகம், மனசு மறையணும்னு பரமாசாரியார் சொல்லி இருக்கார், தன்னுடைய அருள் வாக்கிலே. அப்படி மனசு மறைந்தது என்றால், பக்தி செலுத்தறது எப்படி??/ உணருவது எப்படி?? பகவானுடைய உருவம், குணம், செயல்கள், அருள் போன்ற எல்லாவற்றையும் எப்படி அனுபவித்துத் தெரிந்து கொள்வோம்?? பகவானை நினைத்துத் தானே பூரண சரணாகதினு போகணும்??? அப்போ மனசை என்ன செய்யறது?? அது பகவானிடமே ஒன்றினால் போதுமா?? குழப்பமா யோசிக்கிறேனோ???//

மும்மலங்களை களைதல் என்பதை மனசு மறையணும் என்று சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது. "நான்-எனக்கு" என்கிற உணர்வுகள் மனதில் இருந்தால் இறையனுபவம் வாய்க்காது, தூய அன்பு இருக்காது என்பதால் அவர் மனம் மறையணுமுன்னு சொல்லியிருக்கலாம்.

எல்லாவற்றிலும் இறைவனை பார்க்கவேணுமானால், மனஸ் மறையவேணுமுன்னு தோன்றுகிறது.

இந்த 32 வித்தைகள் சொல்லியபடி பக்தி செய்வது என்பது எனக்கு தெரிந்தவரையில் அவ்வளவு எளிதல்ல கீதாம்மா. இதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் இயலாத செயல் என்பதால்தான் இயன்றவரை கர்மாக்களை விடாது செய்தலும், பூரண சரணாகதியும், நாமஸ்மரணையும் செய்தல் என்றவரையில் நம்மை நாம் வழிப்படுத்திக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள் மஹான்கள்.


பூரண சரணாகதி என்பது நடக்குமானால் மனஸ் தானாக மறைந்துவிடும், எல்லாவற்றிலும் இறைவனைக் காணத் தலைப்படுவோம் என்றே தோன்றுகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நண்பன் உதவியும் தம்பி கே.ஆர்.எஸ் உதவியும் கிடைத்தால் முழுவதையும் எழுதலாம்//

நான் அவன் அல்ல! "அந்த" நண்பன் அல்ல! :-)
சொல்றதைத் தெளீவாச் சொல்லிருங்கண்ணா! அப்பறம் நான் தான் "அந்த" நண்பனுமாக்கும்-னு கீதாம்மா மாதவிப் பந்தலைப் பிரிச்சி மேஞ்சிறப் போறாங்க :-)

சரணாகதித் தத்துவத்தைச் சுலோகம் எல்லாம் சொல்லி மெளலி அண்ணா விளக்கறதைப் பார்த்தா, இதை இன்னும் அப்படியே விரித்துச் சொல்ல அடியேனுக்கு கை பரபர என்கிறதே! பதிவ போட்டூறட்டுமா? :-)

சரீ....வரவர மெளலி அண்ணா வைணவ சித்தாந்த முத்துக்களா அள்ளித் தராரே! என்ன ரக்சியமோ? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உங்க நண்பர் சொன்னது என்னமோ உங்களுக்குச் சரியாக இருக்கலாம், ஆனால் ஆண்டாள் அந்த அர்த்தத்தில் பாடவில்லையே?//

இதோ கீதாம்மாவுக்குக் கொஞ்சம் அக்கார அடிசில்! :-)

பொதுவாக "உய்யும் ஆறு என்றெண்ணி உகந்தேலோ" என்பது
"அன்பர்களே, உய்யும் வழி இதெல்லாம் என்று மகிழ்வடைந்து நோன்பு நோற்கவும்"
என்ற பொருளில் தான் வரும்!

ஆனால் இதற்கு நுண்விளக்கங்களும் ஆறாயிரப்படி வியாக்யானங்களில் உண்டு! அதைத் தான் மெளலி அண்ணா எடுத்துச் சொல்லி இருக்கார்.
ஆறும் ஆறும் ஆறுமாய் என்ற பாசுரமும் இதே தத்துவ விளக்கம் தான்!

1. நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
=ப்ரதி கூல்யஸ்ய வர்ஜனம்=உதவாதவற்றை விலக்கி வைப்பது!

அதாவது இறைவன் பணிக்குத் தடையாய் இருப்பதைத் தள்ளி வைப்பது. பாலும் நெய்யும் உண்ண வேண்டுமானால் காலையில் இருந்து கடைய வேண்டும்! அப்பறம் நோன்புக்கு நேரம் இருக்காது!
எனவே நோன்பு காலங்களில் மட்டும், நோன்பு நோற்பவர் இதை விலக்கி வைக்கிறார்கள்! = ப்ரதி கூல்யஸ்ய வர்ஜனம்

2. நாட்காலே நீராடி
=அநூகூல்யஸ்ய சங்கல்பம்=அனுகூலமாய் இருக்க உறுதி பூண்டு கொள்வது!

மார்கழி நீராடல் என்னும் நோன்பை நோற்று, உடலாலும் உள்ளத்தாலும் இறைவனுக்கு அனுகூலமாய் இருப்பேன் என்று சங்கல்பித்துக் கொள்வது, உறுதி ஏற்படுத்திக் கொள்வது!=அநூகூல்யஸ்ய சங்கல்பம்

3. மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
=கார்பண்யம்=நம்மால் முடியாது, எல்லாம் அவனே என்ற உணர்தல்!

எவ்வளவு தான் அலங்கரித்துக் கொண்டாலும், அது அழிந்து போகும் அழகு. மை கரையும்! மலர் வாடி விடும்! எனவே என்னை நான் அலங்காரம் செய்து கொள்ள முடியாது! - இயலாமை!
இறைவன் ஒருவனால் மட்டுமே அலங்காரம் செய்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை! = கார்பண்யம்

4. செய்யாதன செய்யோம்,தீக்குறளை சென்றோதோம்
=பூரண விஸ்வாஸம்=திட நம்பிக்கை!

ஒருவரை நம்பாததால் தான் அவரைப் பற்றிக் கோள் சொல்ல முற்படுகிறோம். அவரும் அடியவர், தீங்கு இழைக்காதவர் என்று உணரத் தொடங்கி விட்டால் கோள் சொல்ல வராதே! அனைத்தும் பகவத் சொரூபம் என்று எண்ணத் தொடங்கி விட்டால், தன் காரியம் ஆக செய்யாதனவற்றைச் செய்ய மாட்டார்கள்! பூரணமாக விசுவாசம் வைத்து அவன் பார்த்துக் கொள்வான் என்று விட்டு விடுவார்கள்!=பூரண விஸ்வாஸம்

5. ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங் கைகாட்டி
=கோப்த்ருத்வே வரணம்=விடாமுயற்சியுடன் பிடித்துக் கொள்வது! ஆந்தனையும், ஆன மட்டும் கைகாட்டிக் கொள்வது! இயன்ற மட்டும் ஐயமும் பிச்சையும் இடுவது!

இப்படி நோன்பின் ஐந்து செயல்களும் ஐந்து அங்கங்கள்! இதைக் கடைப்பிடிப்பதால் சரணாகதி ஏதுவாகும்! அந்தச் சரணாகதியே உய்யும் ஆறு! உய்யும் வழி! உகந்தேலோ ரெம்பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

மெளலி (மதுரையம்பதி) said...

//சரணாகதித் தத்துவத்தைச் சுலோகம் எல்லாம் சொல்லி மெளலி அண்ணா விளக்கறதைப் பார்த்தா, இதை இன்னும் அப்படியே விரித்துச் சொல்ல அடியேனுக்கு கை பரபர என்கிறதே! பதிவ போட்டூறட்டுமா? :-)//

பதிவு போடுங்க கே.ஆர்.எஸ்...நான் எழுதுவதை விட நீங்க எழுதறது நல்லது....உங்கள் எழுத்து நிறைய வாசகர்களைச் சென்றடையும். எல்லோர் மனதிலும் நிலைக்கும்படி வகையில் எழுதத் தெரிந்தவர் நீங்க. :)

//சரீ....வரவர மெளலி அண்ணா வைணவ சித்தாந்த முத்துக்களா அள்ளித் தராரே! என்ன ரக்சியமோ? :-)//

சரணாகதிக்கு வைணவம் மிக உன்னதமான எடுத்துக் காட்டுகளை கொண்டுள்ளது.

ஏன் வைணவ சித்தாந்தம் நான் எழுதக்கூடாதா?..யாருக்கேனும் பட்டா போட்டுக் கொடுத்த சொத்தா அது? :))

நான் எழுதும் வைணவத்தில் தவறேதும் இருந்தா திருத்த நீங்க இருக்கீங்கங்கற எண்ணமே என்னை எழுத வைக்கிறது. :))

சில நாட்கள் முன் நம்மாழ்வார் பாசுரம் பற்றி உங்களிடம் கேட்டேன், நினைவிருக்கிறதா?, அது இதுக்குத்தான். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆனால் இதற்கு நுண்விளக்கங்களும் ஆறாயிரப்படி வியாக்யானங்களில் உண்டு! அதைத் தான் மெளலி அண்ணா எடுத்துச் சொல்லி இருக்கார்.
ஆறும் ஆறும் ஆறுமாய் என்ற பாசுரமும் இதே தத்துவ விளக்கம் தான்!//

நானெங்கே சொன்னேன் கே.ஆர்.எஸ் ?, நண்பன் சேஷசாயி சொன்னான் அப்படிங்கறது தான் உண்மை. :), நான் கீதாம்மாவுக்கு சொன்னது போலவே, நீங்களும் வந்து பிரிச்சு மேஞ்சுட்டீங்க...:-)

நன்றி கே.ஆர்.எஸ்

மெளலி (மதுரையம்பதி) said...

மாயனை மன்னு வடமதுரை...(5)பாடலும் சரணாகதி தத்துவத்தை விளக்குவதே...பூரண சரணாகதி செய்தால் மற்ற எல்லாவற்றையும் பெருமாள் பாத்துப்பார் அப்படிங்கற மாதிரியான பொருள் சொல்லலாம்.

ஒருத்தி மகனாய் பிறந்தோரிரவில்..
(25) பாடல் "சகலம் விஷ்ணுமயம் ஜெகத்" என்பதாக பொருள் சொல்லமுடியும்.

ambi said...

//வரவர மெளலி அண்ணா வைணவ சித்தாந்த முத்துக்களா அள்ளித் தராரே! என்ன ரக்சியமோ?//

எல்லாம் சேர்க்கை தான். :p
ஒரு சாக்த சிரோண்மணி ____ ஆக கன்வர்ட் செய்யபடுகிறார். :)))

ambi said...

பதிவும் அருமை, பின்னூட்டத்தில் பாடலுக்கு விளக்கங்களும் மிக அருமை.

வாய கிளறினா தான் சிலபேரிடமிருந்து நிறைய விஷயங்கள் வெளி வரும் போலிருக்கு. :p



//ஏன் வைணவ சித்தாந்தம் நான் எழுதக்கூடாதா?..யாருக்கேனும் பட்டா போட்டுக் கொடுத்த சொத்தா அது? //

நான் இந்த வரிகளை படிக்கவேயில்லைப்பா. :))

கேஆரேஸ் எப்போ சேஷாயினு பேரை மாத்தி வெச்சு.... சரி எனக்கெதுக்கு வம்பு? :)))

மெளலி (மதுரையம்பதி) said...

//எல்லாம் சேர்க்கை தான். :p
ஒரு சாக்த சிரோண்மணி ____ ஆக கன்வர்ட் செய்யபடுகிறார். :)))//

ஏன் அம்பி கணேசனை இதுல கொண்டுவந்து சேர்க்கறீங்க? :))...

//வாய கிளறினா தான் சிலபேரிடமிருந்து நிறைய விஷயங்கள் வெளி வரும் போலிருக்கு//

ஆமாம் தம்பி கணேசன் வாயைக் கிளறினாத்தான் நிறையச் சொல்றார்... :))

//நான் இந்த வரிகளை படிக்கவேயில்லைப்பா. //

ஆமாம், படிக்காமத்தான் இம்புட்டு நக்கல்... :))

சேஷசாயிங்கறது கே.ஆர்.எஸ் இல்லை, இல்லை, இல்லை... :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கேஆரேஸ் எப்போ சேஷாயினு பேரை மாத்தி வெச்சு.... சரி எனக்கெதுக்கு வம்பு? :)))//

அம்பி
நான் சோபா மேல கூட சாயலையே! நான் எப்போ சேஷம் மேல சாஞ்சேன்?

தி. ரா. ச.(T.R.C.) said...

மனசு என்பது என்ன ""மனமேவ மனுஷ்யானாம்"" மனம் தான் மனுஷுயன்.மனித நிலையைத் தாண்டினால்தான் மேலே போய் இறைவனிடம் அடையமுடியும். அதனால் தான் பெரியவர் சொன்னார் மனதை மறக்கவேண்டும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

'நான் நம்பும் வேதம் உண்மையானால் அது என்னைக் காக்கட்டும்'

இறைவன் அளித்த வரம் உன்னை நான் காப்பேனென்பது.ஆனால் அது கன்டிஷனல் வரம்
மாமேகம் சரணம் விரஜ என்றுதான் சொன்னானேதவிர மாம் சரணம் விரஜ என்று சொல்ல வில்லை.அவனிடம் மட்டும் முழு நம்பிக்கையும் வைத்தால்தான் பலன் கிடைக்கும் சந்தேகம் உண்மையானால் ஏன்றால் பலன் சேராது.திரௌபதி தன் மானத்தை தன் கையினால் காப்பாற்றிகொள்ளலாம் என்ற வரை கண்ணன் வரவில்லை. இரு கைகளையும் தூக்கி கண்ணா அபயம் என்று அழைத்த பிறகுதான் புடவைக் கடல் சூழ்ந்தது.சென்னியில் கைகுவித்தாள்
அவள் செவ்விய மேனியைச் சார்ந்துநின்றே முன்னிய ஹ்ரிநாமம்தன்னில் மூளும் நற்பயன் உலகு அறிந்திடவே""

Geetha Sambasivam said...

//திரௌபதி தன் மானத்தை தன் கையினால் காப்பாற்றிகொள்ளலாம் என்ற வரை கண்ணன் வரவில்லை. இரு கைகளையும் தூக்கி கண்ணா அபயம் என்று அழைத்த பிறகுதான் புடவைக் கடல் சூழ்ந்தது.//

அதோட இல்லையே திராச சார், அவள் முதல்லே கூப்பிட்டது, ஆதிமூலமே, ஜெகத்ரட்சகான்னு எல்லாம், அப்புறம் இரண்டு கையையும் தூக்கித் தொழுது, "ஹே, ஹ்ருதய கமலவாசா!" னு கூப்பிட்டதும் தானே கண்ணன் தன் அருளைக் காட்டினான்.திரெளபதி, கண்ணனிடம், "நான் அத்தனை கதறியும் நீ ஏன் வரலை? ஏன் என்னை இத்தனை நேரம் தவிக்கவிட்டாய்?னு கேட்டப்போ, கண்ணன், நீ என்னை நான் இருக்குமிடம் விட்டு விட்டு இல்லாத இடத்திலெல்லாம் தேடினாய், கடைசியில் நான் எங்கே இருக்கின்றேனோ அதைக் கண்டுகொண்டு நீ கூப்பிட்டதும், நான் உடனே வந்தேனா இல்லையா?" என்று கேட்டானாம். முக்கூர் அவர்களின் உரையில் படித்ததும், கேட்டதும்.

Geetha Sambasivam said...

கே ஆர் எஸ் சொன்ன உய்யும் வகை ஆறும் ஏற்கெனவே படிச்சதுதான், ஆனால் இதை இப்படிப் பதம் பிரிச்சுச் சொல்லித் தரலை, மற்றபடி இறைவன் தொண்டில் நம்மை நாம் மறக்கவேண்டும் என்பது சொல்லிக் கொடுத்தது தான். இதிலே மறைபொருள் இருக்கிறதாத் தெரியலை! :P

sury siva said...

//இறைவன் திருவடியை பற்றிக் கொள்வதே சிறந்தது, அதுதான் சரணாகதி. "நீ தான் உபாயம்; நீ தான் உபயம்; பலனும் நீயே" என்பதாக பிடித்துக் கொள்வது சரணாகதி.//

இன்னொரு பதிவில் தாங்கள் பின்னூட்டமோ/ மறுமொழியோ தரும்போது குரங்குப்பிடி நியாயம்
பூனைக்குட்டி நியாயம் என்றெல்லாம் கூட இந்த சரணாகதியில் இருக்கிறது, அவையெல்லாம்
என்னென்ன சம்பிரதாயம் என்று விளக்கி இருக்கிறீர்கள்.

இங்கு சரணாகதி என்பது லேசான காரியம் இல்லை. பெருமாளே ! நான் உன் சரணாகதி
என்றால் சரணாகதி ஆகிவிடுமா ? அதற்கு நீங்கள்

//ஞான யோகம், பக்தி யோகம் போன்றவற்றில் இருப்பது போல சரணாகதிக்கும் சில விஷயங்கள் உண்டு. ஐந்து அங்கங்களுடன் கூடிய ஆறாவதான ஆத்ம சமர்ப்பணம் தான் சரணாகதி. ஐந்து அங்கங்கள் நம்மிடம் இருக்க வேண்டும், அத்துடன் கூடிய ஆத்மாவை அப்படியே சமர்ப்பித்தலே சரணாகதி//

எனச் சொல்லியிருப்பது நிறைவாக இருக்கிறது எனினும் மேலும் சிலவற்றினைக் கூற ஆவல்.

ஐம்புலன்களுக்குப் புலப்படும் பொருட்களூடே பெறப்படும் இன்பம் வெள்ளிடைமலை. அனுபவ‌
சாத்தியம். இறையே " பொறிவாயிற் ஐந்தவித்தான்". ஐம்புலன்களுக்கும் மனத்திற்கும் எளிதில்
எட்ட இயலாதவன். ஆதலின் அவன்பால் உய்த்திடும் இன்பம் மனித அனுபவத்தில் அரிது.
ஆதலால், இறைவனிடத்தே ப்ரீதியை அவ்வுணர்வை ஒரு உத்வேகத்துடன் எழச்செய்தல்
அவசியம். இறையே ' நம்முள் ' எனினும் மாயை மானுட இயல்பான தெய்வப்ப்ரீதியை
மறைக்கவும் செய்கிறது.

இந்த மாயைதனை ( அழுக்கினை ) நீக்க ஒன்பது வகை ரீதிகளைச் சாத்திரங்கள் சொல்லும்.
" நாம் அறியாமலேயே நம்மிடத்து அன்பு கொண்டு நமக்கு எல்லா நனமைகளை எப்போதும்
என்னிலையிலும் மறைந்து நின்று செய்யும் அவனிடம் " நமக்கு ப்ரீதி உண்டாக வேண்டுமெனின்
முதற்கண் அவனது பெருமையையும், குணங்களையும் அவைகளை இறைவன் விளக்குகின்ற‌
செயல்களைத் தெரிந்தவர் வாயிலாகக் கேட்கவேண்டும். இது ச்ரவணம்.

பின் அவன் குணாதிசயங்களைச் சுருங்க விளக்கும் நாமங்களை வாய்விட்டு உரைத்தல் வேண்டும்.
இது கீர்த்தனம்.

இந்நாமங்கள் உணர்த்தும் அவனது பெருமைகளை உள்ளன்புடனும் நினைக்கவேண்டும்.
இது ஸ்மரணம்.

ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம் நித்தம் செய்பவன் ஒருவனுக்கு ' அவன் உளன் ' எனும்
நம்பிக்கை தானாக உறுதிப்படும். ' அவனை'த் தனக்குப் பிடித்த உருவில் சமைத்து,
அவனைச் சிந்திக்கையில் அவ்வுரு காணப்படுவது ஸ்வபாவமாகிறது. " அவனது "
திருவடிக்கு சிறுதொண்டு செய்ய அவா மனதில் தோன்றும். இது பாத ஸேவனம்.

" அவனது" உருவை நீர் மலர் முதலியவெற்றால் பூஜிக்கவேண்டுமே. அது "அர்ச்சனம்."

வழிபாடு முடிவடைகிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்குகிறோம்.
அது " வந்தனம் "

ஆக, பாத ஸேவனம், அர்ச்சனம், வந்தனம், ஆகியவை வலுக்க அவ்வுருவுடன் நெருங்கிப்
பழகி ' அவனை 'த் தனது எஜமானாக பாவிக்கும் தருணம் வருகிறது. " நான் அவனது
அடிமை " என்னும் உணர்வு மேலிடுகிறது. இது " தாஸ்யம் "

உறவு முற்றுகிறது. எஜமானன் மீது ப்ரீதி வலுவடைகிறது. 'அவனை ' நமக்கு ஒரு
தோழனாகக் கருதுகிறோம். அது " ஸாக்யம் ".

இந்த நிலை வந்தபின் தான் , வந்தபின்பு தான், வந்த பின்பு தான்,
நாம் செய்யும் எல்லா செயல்களுமே அவன் பொருட்டே என்று இறைவனுக்கு
உரிமையாக்கி அவனிடத்து தன்னையும் ஒப்புவிக்கும் நிலை.
இது " ஆத்ம நிவேதனம். "

ஆக, ஸ்ரவணம் முதல் ஆத்ம நிவேதனம் வரை சொல்லப்பட்ட ஒன்பது நிலைகளும்
இறையிடத்து நிலைத்து நிற்கும் பக்தியைப் பெற வழி வகுக்கும் ஆரம்ப படிகளாம்.

இவையெல்லாம் இல்லாமல், ஒரு போல் வால்ட் செய்து
பெருமாளே ! நான் சரணாகதி என்று சொல்வதோ நினைப்பதோ
போதுமா எனத்தெரியவில்லை.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க சூரி சார்.


//ஆக, ஸ்ரவணம் முதல் ஆத்ம நிவேதனம் வரை சொல்லப்பட்ட ஒன்பது நிலைகளும்
இறையிடத்து நிலைத்து நிற்கும் பக்தியைப் பெற வழி வகுக்கும் ஆரம்ப படிகளாம்.//

நீங்க சொல்லியது எல்லாமே சூப்பர்.
இந்த ஒன்பது நிலைகளும் நான் சொல்லிய 32 வித்தைகளில் வருவன தான், ஆனா வேறு பெயர்கள், முறைகளில் இருக்கும். இந்த 32ம் எனக்கு முழுமையா தெரியல்ல. தெரிந்தபின் இந்த இடுகையின் அடுத்த பாகமாக அதை எழுத எண்ணம்.

//இவையெல்லாம் இல்லாமல், ஒரு போல் வால்ட் செய்து
பெருமாளே ! நான் சரணாகதி என்று சொல்வதோ நினைப்பதோ
போதுமா எனத்தெரியவில்லை//

இல்லை ஐயா, நான் போல் வால்ட் எல்லாம் செய்ய சொல்லலை. அப்படி ஒரு எண்ணத்தை இந்த பதிவு ஏற்படுத்தியிருக்குமாயின் அது என் தவறே.

சாதாரணமாக சரணாகதி என்று சொல்வதும், நினைப்பதும் மட்டும் போதாது...உளமாற நமது எல்லா செயல்களையும் சமர்பித்து,வணங்கி சரணாகதி பண்ண வேண்டும். என்னைப் போன்ற சாதாரணனுக்கு இது கஷ்டமானது தான். ஆனால் இதை விட்டால் எனக்கு வேறு வழிதெரியல்லை.

Kavinaya said...

ஆஹா, அருமையாகச் சொன்னீர்கள் சுப்புரத்தினம் ஐயா. மிக்க நன்றி!

//இல்லை ஐயா, நான் போல் வால்ட் எல்லாம் செய்ய சொல்லலை. அப்படி ஒரு எண்ணத்தை இந்த பதிவு ஏற்படுத்தியிருக்குமாயின் அது என் தவறே.//

நான் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை மௌலி. நீங்கள் சொல்ல வந்த கோணத்தில் அதன் புரிதல் சரியாகவே இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

யமம், நியமம் முதலியவை ஞான யோகத்தைச் சார்ந்தனவா? அஷ்டாங்க யோகத்தைச் சார்ந்தவை தானே அவை? ஞான யோகிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளாதவர்களும் யம நியமாதி அஷ்டாங்க யோகத்தைப் பயின்றிருக்கிறார்களே.

உபநிடதங்கள் கூறும் பிரம்ம வித்தைகள், உபாசனைகள் கொண்டதே பக்தி யோகம் என்பது பல ஆசாரியர்களின் கருத்தாக இருக்கிறது. அது தற்காலத்தில் 'பக்தி' என்பதற்கு இருக்கும் புரிதலுக்கு மாறுபட்டது. பிரம்ம வித்தைகள், உபாசனைகள் பெரும்பாலானோருக்கு எளிதாக இயல்வது இல்லை என்றே அந்த ஆசாரியர்கள் அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்.

சரணாகதி என்னும் ப்ரபத்தி யோகமே எளிதானது என்று அந்த ஆசாரியர்கள் சொன்னாலும் அதுவும் மிகக் கடினமானதே. 'நீயே வழி. நீயே உதவி. நீயே இறுதியில் அடையும் பயன்' என்று இருப்பது அவ்வளவு எளிதாகவா இருக்கிறது?

சரணாகதியின் ஆறு அங்கங்களாக விசிஷ்டாத்வைதம் கூறுவதை மிக மிக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள் மௌலி. அந்த அங்கங்களை இன்னும் கூட விரித்துக் கூறலாம்.

உய்யுமாறெண்ணி என்று கோதை நாச்சியார் கூறுவதற்கு 'உய்யும் வழியை எண்ணி' என்பது நேர்ப்பொருள். ஆறு என்றால் வழி என்று பொருள். ஆற்றுப்படை என்ற இடத்திலும் அதே பொருள் தான். இதற்கு மறை பொருளாக 'உய்யும் வழியானது எது என்று ஆராய்ந்து எண்ணிப் பார்த்து' என்று ஆசாரியர்கள் பொருள் சொல்வார்கள். அது சரணாகதியே என்பது அவர்களின் முடிவு. அதனால் சரணாகதியின் ஆறு அங்கங்களையும் இங்கே எண்ணுப்பெயராக ஆறு என்று குறித்தாள் 'வேதம் அனைத்திற்கும் வித்தானதை'ச் சொன்ன நாச்சியார் என்பதும் சரியே. அங்கே வழி என்று சொல்லியிருந்தால் அது வழியை மட்டும் குறித்திருக்கும். ஆறு என்று சொன்னதால் நேர்ப்பொருளான வழியைக் குறித்து ஆறங்கங்களுடன் கூடிய சரணாகதியைக் குறித்தது என்று சொல்வது சரி.

இரவிசங்கர் இன்னும் வரலையா? வந்திருந்தால் இந்த இடுகையைப் பிரிச்சு மேய்ஞ்சிருப்பாரே? :-)

அப்புறம் உங்களுக்கு மட்டும் ஒரு கேள்வி. மத்தவங்க இதைப் படிக்க வேண்டாம். :-) உங்க நண்பர் வடகலையா தென்கலையா? ஆறங்கங்களைப் பேசுவதைப் பார்த்தா வடகலை மாதிரி தெரியுது. அதான் கேக்குறேன். நீங்க சொல்ல விரும்பாவிட்டால் பரவாயில்லை. :-)

(பேருந்தில் படிப்பதற்காக இந்த இடுகையைப் பிரதி எடுத்து வைத்துக் கொண்ட போது இரவிசங்கரின் பின்னூட்டங்கள் இல்லை. அதனால் தான் இன்று பேருந்தில் படித்து எழுதிய பின்னூட்டத்தில் அவர் இன்னும் வரவில்லையா என்று கேட்டேன். இப்போது பார்த்தால் அவர் வந்து நான் எதிர்பார்த்தது போல் நன்கு பிரித்து மேய்ந்திருக்கிறார். :-) )

மெளலி (மதுரையம்பதி) said...

//""மனமேவ மனுஷ்யானாம்"" மனம் தான் மனுஷுயன்.மனித நிலையைத் தாண்டினால்தான் மேலே போய் இறைவனிடம் அடையமுடியும். அதனால் தான் பெரியவர் சொன்னார் மனதை மறக்கவேண்டும்.//

உண்மைதான் திரச...மனதை மறக்கடிக்க சரக்கா அடிக்கவா முடியும்?
எப்படி மறக்கடிப்பது?...பரமாச்சார்யார் சொல்லிய வழிகளைத்தான் நீங்க மில்லியன் டாலர் கேள்வின்னுட்டீங்களே? :-))

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்...

//இப்போது பார்த்தால் அவர் வந்து நான் எதிர்பார்த்தது போல் நன்கு பிரித்து மேய்ந்திருக்கிறார். :-) //

பிரித்து மேய்ந்து, துவைத்துக் காயப்போட்டுவிட்டு போயிருக்கார். மீண்டும் வருவார் அப்படின்னுதான் தோணுது, இப்போ சமிபமாக என் பதிவுகள்ள வாணவேடிக்கை காண்பிக்கிறார்...:-)அதிலிருந்து நானும் கொஞ்சம் தெரிந்து கொள்கிறேன்

//உபநிடதங்கள் கூறும் பிரம்ம வித்தைகள், உபாசனைகள் கொண்டதே பக்தி யோகம் என்பது பல ஆசாரியர்களின் கருத்தாக இருக்கிறது. அது தற்காலத்தில் 'பக்தி' என்பதற்கு இருக்கும் புரிதலுக்கு மாறுபட்டது. //

ஆமாம் குமரன் இன்று நாம் ஒரு முழம் பூவைச் சாற்றிவிட்டு ஒரு ஊதுபத்தி கொளுத்துவதே பக்தி என்றல்லவா இருக்கிறோம்?

//பிரம்ம வித்தைகள், உபாசனைகள் பெரும்பாலானோருக்கு எளிதாக இயல்வது இல்லை என்றே அந்த ஆசாரியர்கள் அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். //

//சரணாகதி என்னும் ப்ரபத்தி யோகமே எளிதானது என்று அந்த ஆசாரியர்கள் சொன்னாலும் அதுவும் மிகக் கடினமானதே. 'நீயே வழி. நீயே உதவி. நீயே இறுதியில் அடையும் பயன்' என்று இருப்பது அவ்வளவு எளிதாகவா இருக்கிறது? //

முற்றிலும் உண்மை.

//சரணாகதியின் ஆறு அங்கங்களாக விசிஷ்டாத்வைதம் கூறுவதை மிக மிக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள் மௌலி. //

//ஆறு என்று சொன்னதால் நேர்ப்பொருளான வழியைக் குறித்து ஆறங்கங்களுடன் கூடிய சரணாகதியைக் குறித்தது என்று சொல்வது சரி. //

நன்றி குமரன்...ஏதோ வசிஷ்டர் வாயால் அப்படிங்கற மாதிரி குமரனால் எற்றுக்கொள்ளப்பட்ட பதிவா இது.... :))

//அந்த அங்கங்களை இன்னும் கூட விரித்துக் கூறலாம்.//

கூறினானே நண்பன், நான் சில-பல கருத்துக்களை விட்டுவிட்டேன்...நண்பனுடன் சாட்-ல ஆரம்பிச்சு போன்ல முடிந்த கான்வர்சேஷன் என்பதால் சிலது மறந்துவிட்டது. அதிலொன்று திருவாய் மொழிப் பாசுரம்...கே.ஆர்.எஸ் கிட்ட கூட அது பத்தி கொஞ்சம் கேட்டேன். அப்பறம் வந்து சொல்வார் என்று நினைக்கிறேன். :)

//உங்களுக்கு மட்டும் ஒரு கேள்வி. மத்தவங்க இதைப் படிக்க வேண்டாம். :-)//

கண்டிப்பா வேற யாரும் படிக்க மாட்டாங்க குமரன் :))

// உங்க நண்பர் வடகலையா தென்கலையா? ஆறங்கங்களைப் பேசுவதைப் பார்த்தா வடகலை மாதிரி தெரியுது. அதான் கேக்குறேன். நீங்க சொல்ல விரும்பாவிட்டால் பரவாயில்லை//

உங்க கெஸ் சரிதான் :). ஆமாம், ஏப்படி கண்டுபிடிச்சீங்க ? எனக்கு மட்டும் சொல்லுங்க :))

குமரன் (Kumaran) said...

//உங்க கெஸ் சரிதான் :). ஆமாம், ஏப்படி கண்டுபிடிச்சீங்க ? எனக்கு மட்டும் சொல்லுங்க :))//

எல்லாம் பூனைக்குட்டி பிரபத்தி குரங்குக்குட்டி பிரபத்தி வேறுபாடு தான். :-)

சாஸ்திரங்கள் எல்லாம் பெருமாளின் நியமனம் என்பதால் அவற்றில் சொல்லியிருப்பவற்றை எல்லாம் தவறாமல் பின்பற்றி அவனை நாம் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற குரங்குக்குட்டி நியாயத்தைச் சொல்வது வடகலை. அதனால் அங்கங்களுடன் கூடிய பிரபத்தியைப் பற்றி ஸ்வாமி தேசிகன் நிறைய பேசுவார். பலவைகயான ந்யாஸங்கள்/பிரபத்திகள் பற்றியும் பேசுவார். தென்கலையில் அவ்வளவாக அங்கங்களைப் பற்றிய பேச்சு வராது. அங்கே இறைவன் இட்டபடி கிடக்கும் நிலையே பிரபத்தி என்று பேசப்படும்.

இடுகையிலும் ஸ்வாமி தேசிகனைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் - அதுவும் ஒரு குறிப்பு. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//எல்லாம் பூனைக்குட்டி பிரபத்தி குரங்குக்குட்டி பிரபத்தி வேறுபாடு தான். :-)//

ஹிஹி....நினைச்சேன் :))

நினைச்சது போலவே விளக்கத்தையும் தொட்டு சென்றதுக்கு நன்றி குமரன் :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அட
பிடியுங்கள் 50:-)

உய்யும் 50 என்றெண்ணி
உகந்தேலோ ரெம்பாவாய்! :-))

மெளலி (மதுரையம்பதி) said...

கே.ஆர்.எஸ், ஏதேது எனக்கும் இந்த பின்னூட்ட வியாதியை பரப்ப வழிசெய்யற மாதிரி இருக்கு? :))