Tuesday, January 29, 2008

க்ஷிப்ர ப்ரஸாதிநி, சதுரங்க பலேஸ்வரி


க்ஷிப்ரம் என்றால் சீக்கிரம் விரைவு என்று பொருள். திருஞான சம்பந்தர் அழைத்தவுடன் வந்து ஞானப்பால் தந்த அன்னையை "விரைவாக வந்து அருள்புரிபவள்" என்பதைத்தான் க்ஷிப்ர ப்ரஸாதிநீ என்கிறது சஹஸ்ர நாமம். இராமனிடம் சரணாகதி அடைய வந்த விபீஷணன், 'நிவேதயதமாம் க்ஷிப்ரம்' என்கிறானாம். இதற்கு 'என் சரணாகதியினை உடனடியாக தெரிவியுங்கள்' என்பது பொருள்.

காளிதாஸன் மிகப் பெரிய கவிஞன் மட்டுமல்ல சிறந்த சாக்தனும் கூட. அந்த காளிதாசனை ஓரே இரவில் திடிரென கவிஞனாக்கியவள் அன்னை. காளிதாசனும், ஞான சம்பந்தரும் மட்டுமா?, அபிராமி பட்டர் 100 பாடல்களை பாடி முடிக்கும் முன் அம்மாவாசை இரவில் பூர்ண நிலவினை காட்டிய அருளியவள் அல்லவா?.



பாஸ்கர ராயர் பற்றி சாக்தர்களுக்கு தெரியாமல் இருக்காது. லலிதா சஹஸ்கர நாமத்துக்கு பாஷ்யம் அருளியவர்களில் ஒருவர். இவரது ஏழ்மையினை போக்கியதும் திடிரென ஒரு பகல் பொழுதில் தான். இவர் பூஜித்த மஹா மேருவை இன்றும் பாஸ்கர ராயபுரத்தில் அவரது பூர்விக இல்லத்தில் காணலாம்.



ஒரு நாள், கையிலாயத்தில் அன்னையும், அப்பனும் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தார்களாம். அதில் அம்பிகை ஜெயித்து விடுகிறாள். ஆனால் நடுவராக இருந்த திருமாலோ ஈசன் வெற்றி பெற்றதாக அறிவித்து அன்னையிடம் வாங்கி கட்டிக்கொள்கிறாராம். அப்போது அன்னை திருமாலை பாம்பாக பிறக்க சபித்து விடுகிறாளாம். இந்த சாபம் தீர நாராயணன் திருவாலங்காட்டில் பாம்பாக ஜெனித்து தவமியற்றி விமோசனம் அடைந்தது புராணம். இந்த புராணத்திலிருந்து அன்னைக்கு ஒரு நாமம் தோன்றியது. அந்த நாமமே 'சதுரங்க பலேஸ்வரி என்பது.

11 comments:

நிவிஷா..... said...

//இந்த புராணத்திலிருந்து அன்னைக்கு ஒரு நாமம் தோன்றியது. அந்த நாமமே 'சதுரங்க பலேஸ்வரி என்பது. //
ithukku ippadi oru kadhai irukka!
nice :)

natpodu
nivisha

தி. ரா. ச.(T.R.C.) said...

சதுரங்கம் என்றால் கஜ ரத துரக பதாதி நால்வகை சேனைகளால் சூழப்பட்டவள் என்ருதான் இதுவரை நினைதிருந்தேன். உங்களது விளக்கம்
சரியாக் பொருந்துகிறது

Anonymous said...

அண்ணா, பதிவு அழகாக உள்ளது தொடரட்டும் நிமது ஆன்மீக பயணம்.

மெளலி (மதுரையம்பதி) said...

என்னப்பா தம்பி, ஆளையே காணோம்?. போன் பண்ணினாலும் எடுக்கறது இல்ல. என்ன ஆச்சு?.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திராச. நீங்க சொவதற்கு வேற நாமம் இருக்கு. அடுத்து அதை பதிவா போட்டுவிடுகிறேன் :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க நிவிஷா. நன்றி.

ambi said...

சார் எழுப்பிய அதே சந்தேகம் தான் எனக்கும். சரி, மீ தி வெயிட்டிங்க். :)

நான் போன் பண்றேன் இன்னிக்கு. :p

Geetha Sambasivam said...

ஆயிரம் நாமங்களையும் வரிசைப் படுத்தி எழுத முடியுமா? ஸ்ரீ மாதா வில் இருந்து ஆரம்பித்து, ஸ்லோகமும் கொடுத்தாப் போல் இருக்கும்?

குமரன் (Kumaran) said...

கீதையிலும் கண்ணன் பூலோகத்தில் தேவதைகளை வணங்கும் போது இகலோக பலன்கள் விரைவில் கிடைக்கின்றன என்று சொல்லும் போது க்ஷிப்ரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறான் மௌலி. இந்த இடுகையின் முதல் பதிவைப் படித்தவுடன் அது தான் நினைவிற்கு வந்தது.

சொக்கட்டான் தான் செஸ் ஆட்டமா? செஸ் என்பது சதுரங்கம் என்கிற இன்னொரு விளையாட்டு இல்லையா? ஆகா. சதுரங்கமும் சொக்கட்டானும் வெவ்வேறு ஆட்டம் தான் போலிருக்கிறது. இங்கே சதுரங்க பலேஸ்வரின்னு சொல்லியிருக்கிறது சதுரங்க விளையாட்டைப் பற்றி மட்டுமா? இரத கஜ துரக பதாதிகள்ன்னு சொல்ற சதுரங்க படைகளை உடையவள் என்ற பொருள் இல்லையா?

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்.

செஸ் என்பது வேறுதான், உணர்ந்தேன், பதிவினையும் திருத்தி விட்டேன். நன்றி.

சதுரங்க பலேஸ்வரி என்னும் நாமம் ரத/கஜ துரத பதாதிகளை குறிப்பதில்லை. ஏனென்றால் அதற்கென தனியாக நாமங்கள் இருக்கு.

அடுத்ததாக அன்னையின் சயின்யத்தை
வர்ணிக்கும் நாமாக்களை எடுத்து
போட்டுவிடுகிறேன். அப்போது இன்னும் கொஞ்சம் தெளிவாகலாம். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா.

//ஆயிரம் நாமங்களையும் வரிசைப் படுத்தி எழுத முடியுமா?//

எழுதலாம், ஆனா நிறைய புத்தங்கங்கள் இருக்கே?. பாராயணம் பண்ணுவதற்கு அது வசதியாயிற்றே.

என்னுடைய முயற்சி, சில நாமங்களுக்கு இருக்கும் தொடர்புடைய செய்திகளை தொகுத்தல்....அம்புட்டுத்தான்.