Wednesday, January 30, 2008

வேத வியாசர்..




மனிதன் மன நிறைவுடன் வாழ வழிகாட்டுவது வேதங்கள். உலகில் உள்ள கலைகள் எல்லாம் வேதத்தில் அடக்கம். அப்படி சிறப்பான வேதத்தை காத்து நமக்களித்தவர் வேத வியாசர். தெய்வத்தை நம்பி தெய்வ பலத்தால் வாழ்க்கை கடைத்தேற வழி காண்பித்தவர் வியாசர். மஹா பாரதத்தை நமக்கு அளித்தவர்.

தக்ஷிணா மூர்த்தியை ஆதி குரு என்கிறோம். வியாசரோ விஷ்ணு அம்சம், இதுதான் "வியாசாய விஷ்ணு ரூபாய: வியாச ரூபாய விஷ்ணவே". இவரை இந்து மதத்தின் எல்லா பிரிவுகளும் ஆதி குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்தான் நமக்கு வேதங்களை பிரித்து தந்தவர். இவர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு சங்கரர், ராமானுஜர், மாத்வர், ஆகியோர் மிக அழகாக பாஷ்யம் பண்ணி தங்களது மத கோட்பாடுகளை நிறுவிச் சென்றுள்ளனர்.


குரு என்று சொல்லும் போது நாம் தக்ஷிணா மூர்த்தியிலிருந்து ஆரம்பிப்பது கிடையாது. ஸ்ரீமன் நாராயணனை முதலாக கொண்டே எல்லா குரு பரம்பரையும் ஆரம்பிப்பதை காணலாம். அப்படி வருகையில் இரண்டாவதாக வருவதே வியாசர். இன்றும் இந்தியாவில் இருக்கும் எல்லா சன்யாசிகளும் தமது சாதுர் மாஸ்ய விரத சங்கல்பத்தில் வியாசரை முன்னிறுத்தி அவரிலிருந்து தமது குரு வரையில் இருப்பவர்களை பூஜிப்பத்தை பார்த்திருக்கலாம். இப்படியாக பெயர் பெற்ற குரு வியாசரை மனதில் நினைத்து இந்த பதிவினை தொடங்குகிறோம்.


பி.கு: இந்த வலைப்பூ எந்த ஒரு குறிப்பிட்ட ஆச்சார்ய பரம்பரையை மட்டும் சார்ந்ததாக இருக்காது. இந்துமததின் எல்லா குருமார்கள் பற்றியும், அவர்களது உபதேச கருத்துக்களையும் சொல்வதாக இந்த வலைப்பூவை கொண்டு செல்ல உத்தேசம். குருவருள் துணை செய்யட்டும்.

1 comment:

மெளலி (மதுரையம்பதி) said...

பின்வரும் பின்னூட்டங்கள் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் இவ்விடுகையை இட்ட போது வந்தவை.

12 comments:
தி. ரா. ச.(T.R.C.) said...
நல்லபடியா ஆரம்பிச்சுட்டீங்க குருவருள் திருவருள் பெற்று வாழ்க

January 31, 2008 12:04 PM
கபீரன்பன் said...
ஆதித்ய ஹ்ருதயம் மாதிரி ஆச்சார்ய ஹ்ருதயமா ? ஆச்சாரியன் தானே ஞான சூரியன்!மிகவும் பொருத்தமாக இருக்கிறது. புது வலைப்பூ நன்கு மலர்ந்து ஆன்மீக மணம் பரப்ப ஆச்சார்யார்களின் கிருபை இருக்கட்டும்.

February 1, 2008 1:33 AM
ambi said...
//இந்துமததின் எல்லா குருமார்கள் பற்றியும், அவர்களது உபதேச கருத்துக்களையும் சொல்வதாக இந்த வலைப்பூவை கொண்டு செல்ல உத்தேசம்.//

ஆஹா! குருவருள் பெற ஆவலோடு காத்திருக்கிறோம்.

Note: Pls remove this word verification.

February 1, 2008 3:45 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
மெளலி அண்ணா

வியாசரை முதற்கொண்டு துவங்கிய பதிவுகள் மேன்மேலும் சிறக்கட்டும்! வாழ்த்துக்கள்!
திராச பதிவுக்குப் போட்ட பின்னூட்டமே இங்கும் போட்டு வாழ்த்துகிறேன்!

லக்ஷ்மீ நாத சமாரம்பம்
நாத யாமுன மத்யமம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தம்
வந்தே "குரு பரம்பரா"

திருமகள், திருமால் முதற்கொண்டு
நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!

சதா சிவ சமாரம்பம்
சங்கராச்சர்ய மத்யமம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தம்
வந்தே "குரு பரம்பரா"

சதா சிவ பெருமான் முதற்கொண்டு
ஆதி - சங்கராச்சார்யர் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!

குருப்யோ நமஹ!
கிருஷ்ணம் வந்தே "ஜகத் குரும்"!
"குருவாய்" வருவாய் அருள்வாய் குகனே!

February 1, 2008 11:21 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
மகான்களில் வியாசருக்கு மட்டும் தான் "பகவான்" என்ற பட்டம் உண்டு!
வியாச பகவான்

மற்ற மகான்கள் எல்லாம் "பகவத்’ என்றே அழைக்கப்படுகிறார்கள்!
சங்கர பகவத் பாதர்
பகவத் இராமானுசர்

இப்படி வியாசரே, பகவான் சொரூபமாக உள்ளதால் தான், "வியாசய விஷ்ணு ரூபாய" என்று வந்தது!

வியாசம் என்றால் diameter என்று ஒரு பொருள் உண்டு! (diameter of a circle)
வட்டத்தின் (circle) பல இடங்களில் இருந்து, மையப்புள்ளிக்கு (center) இணைக்கும் கருவியே இந்த விட்டம் (diameter)!

அது போல பல சமயங்கள், பிரிவுகள், சார்புகள், தத்துவங்கள் என்று இருந்தாலும், அத்தனையும் மையமான பரம்பொருளுக்கு இணைக்கும் கருவியே வியாச பகவான்!

கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வியாசருக்கு வந்தனங்கள்!

February 1, 2008 11:59 PM
குமரன் (Kumaran) said...
நம்மாழ்வாரின் பாசுரக் கருத்துகளை விளக்கும் ஒரு நூலுக்கு 'ஆசார்ய ஹ்ருதயம்' என்று பெயர். அதனைத் தான் இந்தப் பதிவின் பெயரும் நினைவூட்டியது.

அத்வைத சம்ப்ரதாயத்தின் ஆசார்யர்கள் என்று மட்டுமில்லாமல் எல்லா சம்ப்ரதாய ஆசார்யர்களைப் பற்றியும் எழுத முனைத்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. நன்றியும் வாழ்த்துகளும் மௌலி.

February 3, 2008 6:08 PM
மதுரையம்பதி said...
/நம்மாழ்வாரின் பாசுரக் கருத்துகளை விளக்கும் ஒரு நூலுக்கு 'ஆசார்ய ஹ்ருதயம்' என்று பெயர். அதனைத் தான் இந்தப் பதிவின் பெயரும் நினைவூட்டியது.//

ஆமாம் குமரன். அந்த நூலைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் படிக்க, இன்னும் குருவருள் சித்திக்கவில்லை.

//நன்றியும் வாழ்த்துகளும் மௌலி.//
நன்றி குமரன்.

February 4, 2008 2:11 AM
மதுரையம்பதி said...
வாங்க ரவி.

வியாசம் = diameter பற்றி நீங்க குறிப்பிட்டு இருப்பது எனக்கு புதிய செய்தி. நன்றி.

கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்....

February 4, 2008 2:18 AM
மதுரையம்பதி said...
அம்பி,

வருகைக்கு நன்றி. தம்பிக்கும் தகவல் சொல்லவும் :-).

//Note: Pls remove this word verification.//

Done Sir.

February 4, 2008 2:19 AM
மதுரையம்பதி said...
வாங்க கபீரன்பன்.

//ஆச்சாரியன் தானே ஞான சூரியன்!மிகவும் பொருத்தமாக இருக்கிறது. //

அதே! அதே!

//புது வலைப்பூ நன்கு மலர்ந்து ஆன்மீக மணம் பரப்ப ஆச்சார்யார்களின் கிருபை இருக்கட்டும்//

நன்றி.

February 4, 2008 2:20 AM
மதுரையம்பதி said...
எல்லாம் உங்கள் ஆசிதான் திரச.
அதுசரி, அடுத்த பதிவு ரெடியா?. :-)

February 4, 2008 2:21 AM
கீதா சாம்பசிவம் said...
பிள்ளையார் நல்லா ஜாலியா உட்கார்ந்துட்டு இருக்காரே? என்ன இருந்தாலும் என்னோட நண்பர் ஆச்சே? அதான், நல்ல அருமையான தொடக்கம், உண்மையில் நானும் தட்சிணா மூர்த்தியில் ஆரம்பிப்பீங்களோன்னு தான் நினைச்சேன். ஆனால் உங்க விளக்கம் நல்லா இருக்கு.

February 6, 2008 4:03 AM