Tuesday, January 22, 2008

அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை



"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்,
பசியினால் இளைத்தே வீடு தோறும் இருந்தும்
பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்"


என்று வாழ்ந்த வள்ளலார் ஸித்தி அடைந்த தினம் தைப்பூசம். இவர் தமது வாழ்க்கையின் பெரும் பகுதி சமரஸ சமய ஸன்மார்க்கத்திற்காக (மத நல்லிணக்கம்) பெரும் தொண்டாற்றி அதற்க்காக வடலூரில் சத்ய ஞான சபை என்னும் இயக்கத்தை தோற்றுவித்தார். இவர் எழுதிய எட்டாயிரம் பாடல்களே 'திருவருட்பா' என்று அழைக்கப்படுகிறது.இவரது மந்திரமே அருட் பெரும் ஜோதி- தனிப் பெரும் கருணை என்பதாகும். இறைவனை ஜோதி வடிவில் வழிபடவும், தியானம் செய்யவும் தூண்டினார்.


1823-ல் சிதம்பரம் அருகில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார் (அ) வள்ளலார். இவரது தாய், தந்தையர் பெயர் கிருஷ்ணம்மா, ராமையா என்பதாகும். இவர் 30-101-1874 அன்று தாம் நிறுவிய சித்தி வளாகத்தில் சித்தியடைந்ததாகவும், மற்ற ஞானிகள் போல் அல்லாது பூத உடலை பூவுலகில் விடாது, அந்தர்யாமி ஆனதாக சொல்லப்படுகிறது. அவர் தம் கையால் ஏற்றிய விளக்கு இன்றும் வடலூரில் பிரகாசிக்கிறது. இவர் அங்கு நிறுவிய தர்மசாலையில் இன்றும் அன்ன தானம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
நாளை தைப்பூசம். வடலூர் சத்ய ஞான சபையில் ஜோதி தரிசனம் மிக பிரசித்தி. நாமும் இந்த மஹானின் அருளாசியினை வேண்டுவோம்.

5 comments:

குமரன் (Kumaran) said...

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆமாம் வள்ளலார் மூட்டிய அடுப்பு கடந்த 140 வருடங்களாக அணையாமல் எரிந்து தினமும் எல்லோருக்கும் அமுது படைதுக்கொண்டிருக்கிறது.
அன்பர் பணி செய்ய என்னை ஆக்கி விட்டால் இனப நிலை.தாமேவந்து எய்யும் பராபரமே என்று கூறியவர் அல்லவா அவர்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன் & திராச...

Anonymous said...

இந்த பதிவுக்கு கீதா மேடம் ராயல்டி கேக்க போறாங்க பாருங்க. :p

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க அம்பி.

//இந்த பதிவுக்கு கீதா மேடம் ராயல்டி கேக்க போறாங்க பாருங்க. :p//

ஏம்ப்பா?. மொக்கைன்னா?....ஹஹஹ