Saturday, January 19, 2008

என்ன எழுதுவது? எதை எழுதுவது?

கடந்த சில நாட்களாக மீண்டும் பதிவுகளை வாசித்தாலும், எழுத முனையவில்லை. எழுத நினைத்தவை நிறைய இருக்கிறது. ஆரம்பித்த செளந்தர்ய லஹரி அப்படியே நிற்கிறது. மார்கழிக்கான பதிவுகள் என நினைத்த சில அப்படியே விட்டுப் போயிற்று. புதிதாக தெரிந்து கொண்ட பித்ரு கர்மாவினைப் பற்றிக் கூட சில பதிவுகள் எழுதலாம். புல்லாகி-பூண்டாகி விமர்சனம் கூட எப்படியோ ஒரு மாதிரியாகத்தான் எழுத முடிந்தது. என்ன தவறுகள் இருக்கோ தெரியவில்லை. குமரன் மன்னிப்பாராக. பஞ்ச நதிகளைப் பற்றி எழுத என்று எடுத்த குறிப்புக்கள், மாதங்கீ என்னும் நாமம் பற்றிய குறிப்புக்கள், சில திருமுறை பாடல்களுக்க்கான கதைகளும், கோபால சுந்தரி பற்றியும் எழுத முன்பே நினைத்திருந்தேன்.


ஆனால் மனம் ஒருமித்து ஒரு காரியமும் செய்ய முடியவில்லை. அதற்கு சோகம் என்று பெயரிடவும் தெரியவில்லை. ஏதோ அடிமனதில் ஒரு நெருடல். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது என்னளவில் சரி தானோ?. படித்த அத்வைதம் பழக்கத்தில் இல்லாத குறையோ?. என்னமோ பார்க்கலாம்.

11 comments:

குமரன் (Kumaran) said...

இந்த நிலை எல்லோருக்கும் வருவது தான் மௌலி. எத்தனை எத்தனை பதிவுகளைத் தொடங்கினேன். எத்தனை எத்தனை தொடர்களை கூடலில் எழுதத் தொடங்கினேன். சில தொடர்கள் தான் நிறைவு பெற்றன. மற்றவை அப்படியே நிற்கின்றன. தொடங்கியவற்றை முடிக்காமல் புதிய பதிவை தொடங்கக் கூடாது என்று ஒரு அன்பு நண்பர் கட்டாயமாகச் சொன்னதால் புற்றீசலைப் போல் புதிய பதிவுகள் வராமல் இருக்கின்றன. ஆனால் கூடலில் புதிய தொடர்களைத் தொடங்காமல் இருக்கவில்லை. அப்படி தொடங்கிய தொடர்கள் எல்லாம் தொடர்வதும் இல்லை.

ஆன்மிக வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட நிலை அடிக்கடி வருவதுண்டு. என் நண்பர்கள் பலருக்கும் வந்ததுண்டு. எனக்கும் வந்ததுண்டு. காலையில் எழுந்து இறைவனைத் தொழ மறுத்த நாட்களும் உண்டு. மனம் விரும்பவில்லை என்ற காரணம் ஒன்றே அப்போது போதுமானதாக இருந்தது. ஆனால் அது மிகக் குறுகிய காலம் தான். கற்றதும் பெற்ற அனுபவங்களும் மனத்தில் ஊறும் பொழுது அந்தப் பொழுது என்கிறார் அரவிந்த ஆசிரமத்தின் அன்னை. அவரிடம் ஒரு சாதகர் ஆன்மிக பயிற்சியில் இருக்கும் பலருக்கும் இந்த காலம் வருகிறதே என்று கேட்ட போது. அவர் சொல்வதும் சரி என்று தான் தோன்றுகிறது. நாளெல்லாம் பெற்ற அனுபவங்களையும் செய்திகளையும் இரவில் உறங்கும் போது மூளை ப்ராஸஸ் செய்கிறது; வேண்டியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனுபவங்களையும் செய்திகளையும் நினைவில் இருந்து தள்ளிவிடுகிறது என்று அறிவியலாளர்கள் இப்போது சொல்கிறார்களே. அதே போல் ஆன்மிக லெவலில் இப்படி சில நேரங்கள் தேவைப்படுகின்றன போலும். அன்னை இதனை சாதகர்களின் இரவு என்று குறிப்பிடுகிறார். இது ஆன்ம வளர்ச்சிக்குத் தேவையானதும் என்று சொல்கிறார். இந்த நிலை தொடங்க வெளியுலகில் நடக்கும் சில நிகழ்வுகளும் காரணமாக அமையலாம்.

மெளலி (மதுரையம்பதி) said...

என்னுடைய புலம்பலையும் படித்து, பின்னூட்டமிட்டமைக்கு நன்றி குமரன்.

நீங்கள் சொல்லிய மாதிரியான சாதகனாக நான் இருக்க அன்னை மீனாக்ஷி அருளட்டும். :-)

jeevagv said...

கருத்து சொல்வதற்கு நான் யார் என்று தோன்றியதால், மறுமொழி ஏதும் சொல்லவில்லை, மதுரையம்பதி சார்.
குமரன் சொல்வதுபோல், 'இது மிகக் குறுகிய காலம்தான்' என்று தோன்றுகிறது.

மெளலி (மதுரையம்பதி) said...

//கருத்து சொல்வதற்கு நான் யார் என்று தோன்றியதால், //

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ஜீவா. நான் எழுதுவதையும் மிஸ் பண்ணாம படிக்கும் அந்த பொறுமை ஒன்றே போதுமே நீங்க கருத்துச் சொல்ல. :)

நல்ல ஸ்னேகம் என்பது நேரில் சந்தித்து பல மணிநேரங்கள் அளவளாவுவதால் மட்டும் ஏற்படுவதில்லை என்றே எண்ணுகிறேன். ஒத்த கருத்துக்கள், ஒத்த சிந்தனை, ஒத்த ரசனை இவற்றாலும் நல்ல ஸ்நேகம் எற்படுகிறதல்லவா?

அந்த விதத்தில், நீங்கள், கே.ஆர்.எஸ், குமரன் போன்ற பல நேரில் சந்தித்திராத, பேசாத, நல்ல ஸ்நேகங்கள் எனக்கு கிட்டியுள்ளது. இந்த ஸ்நேகங்களை அளித்த இறைவனுக்கும் நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

அந்த விதத்தில், நீங்கள், கே.ஆர்.எஸ், குமரன் போன்ற பல நேரில் சந்தித்திராத, பேசாத, நல்ல ஸ்நேகங்கள் எனக்கு கிட்டியுள்ளது. இந்த ஸ்நேகங்களை அளித்த இறைவனுக்கும் நன்றி.
அது சரி நானெந்த லிஸ்டில் இருக்கிறேன்

குருவை மனதில் நினைத்து எழுதுங்கள் எல்லாம் நல்லபடியாக முடியும்.

ஸ்ருதிஸ்மிருதி புராணானாம்
ஆலயம் கருணாலயம்
நமாமீ பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்
ஜகதாம் குரு வர்யஞ்ச
காமாகோட்ய திவம் சிவம்
சந்தரசேகர யோகீந்தரம்
தேசிகம் சமூபாஸ்மஹே
தினமும் கூறுங்கள்
கார்யம் கைகூடும்

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திரச,

/அது சரி நானெந்த லிஸ்டில் இருக்கிறேன்

குருவை மனதில் நினைத்து எழுதுங்கள் எல்லாம் நல்லபடியாக முடியும்.//

நான் எங்க இருக்கேன்னு கேட்டுவிட்டு எனக்கு ஆச்சார்யாரை ஞாயாபகப்படுத்தி எனது அத்வைத சாதனைக்கு பலம் செர்க்க வழி சொல்லியிருகிறீர்கள்.

ஆகவே எனக்கு நீங்கள் வழிகாட்டி :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி அண்ணா...
இப்ப தான் இந்தப் பதிவைப் பார்த்தேன்! பார்த்து விட்டு உங்க கிட்ட பேசாம போக முடியலை! அதான் இந்தப் பின்னூட்டம்!

குமரன் தத்துவ ரீதியில் அழகாகச் சொல்லி விட்டார்! சில சமயம் காரணமே இருக்காது! ஆனாலும் மனம் லயிக்காது! எதையோ யோசனை பண்ணிக்கிட்டு இருக்கும்! ஆனா எதை யோசனை பண்ணுது-ன்னு தெரியாது!:-)

உளவியல் ரீதியாச் சொல்லணும்னா, ஒரு கலத்தினுள் ஹை பிரெஷ்ஷர் காற்று அடைத்து வைத்திருந்தால், அது இன்னொரு பொருளைக் கொள்ளாது! கலம் காலியாகத் தானே இருக்குன்னு பார்வைக்குத் தோனும்! ஆனா Vaccum என்னும் வெற்றழுத்தம் - அதன் குணாதிசியம் அப்படி!

இதுக்கெல்லாம் சர்வ ரோக நிவாரணி ஒன்னு இருக்கு! திராச ஐயா சொல்லிட்டாரு பாருங்க கரெக்டா!
குருவருள்! குருவருள்!! குருவருளில் மனம் கசிந்தால் Vaccum சல்லுனு போயிடும்! பாலுக்குத் தாய் என்றால் பாதைக்குக் குரு!

பரமாச்சார்யார் தானே நீங்க மிகவும் விரும்பிப் படிப்பது! அவர் அருளிய ஒரு நூலை மூச்சு விடாம வாசிச்சி முடிங்க! புத்துணர்ச்சி வந்துடும்! அப்படியே பிடிச்ச இசையும் கேளுங்க! அதே பாட்டை நாலைஞ்சு முறை திருப்பித் திருப்பிக் கேட்டாக் கூட தப்பில்லை! பாட்டால் மனம் நிறையும் வரை கேட்டுக்கிட்டே இருங்க!

இந்தாங்க மாதே மலையத்தவஜ பாண்டிய சஞ்சாதே பாட்டு

Cheer up anna! Next puthira punithama ungalukku puduicha topic! ready aavunga! :-))

மெளலி (மதுரையம்பதி) said...

மிக்க நன்றி கே.ஆர்.எஸ். நான் ஜிவா-வுக்கு சொன்னபடி நீங்க, குமரன், திரச-ன்னு எல்லோரும் வந்து என்னை சியரப் செய்ததே என் எண்ணத்தை, எழுத்தை உண்மையாக்கிடுத்து.

நீங்க சொன்ன ஹைபிரஷர் எக்ஸாம்பிள் மிக பொருத்தம். தே போல, //பாலுக்குத் தாய் என்றால் பாதைக்குக் குரு!// சூப்பர். அப்படி ரிதமிக்கா வருது பாருங்க உங்களுக்கு.

ஆமாம், விரைவில் ஆச்சார்ய ஹ்ருதயம் அப்படின்னு ஒரு வலைப்பூ ஆரம்பிக்க எண்ணம். :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா அந்த ஆச்சர்ய ஹிருதயத்தில் எனக்கும் இடமுண்டா?

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆஹா அந்த ஆச்சர்ய ஹிருதயத்தில் எனக்கும் இடமுண்டா?//

நானெல்லாம் ஆச்சார்யாரை ஹ்ருதயத்தில் இருத்த நினைக்கிறேன், ஆனா நீங்க ஆச்சார்யார் ஹ்ருதயத்தில் இருந்தவர். உங்களுக்கில்லாததா திராச. இன்வைட் அனுப்பியாச்சு. நீங்கதான் முதல் பதிவும் போடப் போறீங்க. :-)

Geetha Sambasivam said...

//புல்லாகி-பூண்டாகி விமர்சனம் கூட எப்படியோ ஒரு மாதிரியாகத்தான் எழுத முடிந்தது. என்ன தவறுகள் இருக்கோ தெரியவில்லை. குமரன் மன்னிப்பாராக.//

நீங்க ஒரு மாதிரியா எழுதினதே இப்படி இருந்தா இன்னும் நல்லா எழுதி இருந்தா எப்படி இருந்திருக்கும்? நானெல்லாம் எழுதினது விமரிசனமே கிடையாது. ஆகவே இதுக்கெல்லாம் சோர்ந்து போகாதீங்க.