Monday, December 10, 2007

மார்கழி திங்களல்லவா.....

எல்லா மாதங்களும் வருகின்றது, நாமும் அந்தந்த மாதத்தில் வரும் பண்டிகைகளை கொண்டாடுகிறோம். மார்கழி பிறக்கப் போகிறது. நம் மனத்திலும் பல கேள்விகள்.


அதென்ன எல்லா மாதங்களை விட மார்கழி உசத்தி?. பரந்தாமன் மாதங்களில் நான் மார்கழி என்றதால் மட்டுமா?.


ஏன் திருப்பாவை-திருவெம்பாவையினை இந்த மாதத்தில் பாராயணம் செய்கிறோம்?.


குறிப்பாக அருணோதய வேளையில் இந்த பாசுரங்களை பாட/பஜீக்க வேண்டிய அவசியம் யாது?


பாவை நோன்பிருந்தாளாமே கோதை?...அதென்ன பாவை நோன்பு?

வல்லியம்மா கூட ஏதோ G-சாட் மெசெஜ் குடுத்திருக்காங்களே 'மார்கழி ஆராட்டு'ன்னு அதென்ன?


ஆமாம், இரண்டு பாவைகளிலும் இணையான கருத்துகள் என்று ஏதேனும் இருக்கா?

கே.ஆர்.எஸ் ஏற்கனவே கேட்டிருக்கிறார் என்ன பதிவுகள் வருமென. எவ்வளவு எழுத முடியுமோ தெரியவில்லை. பராம்பிகை அருளிருந்தால், மேலே சொன்ன சில கோர்வையான எண்ணங்களை எழுதலாம் மார்கழித் தொடராக.

10 comments:

Geetha Sambasivam said...

எழுதுங்க, பார்க்கலாம், இந்தப் பின்னூட்டமாவது, வந்து சேருதான்னு, அது சரி, நான் தான் பஷ்டா?????? முதல்லே எது வரப் போகுது? பாவை நோன்பு பத்தியா?

pudugaithendral said...

பாவை நோன்பு பத்தி எழுதுங்க. அப்படியே திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் விளக்கங்களும் கூட போட்டால் நல்லா இருக்கும்.

மெளலி (மதுரையம்பதி) said...

முதல் வருகைக்கு நன்றி புதுகைத்தென்றல்.

பல மூத்த பதிவர்கள் (எ.எ.பாலா, ரங்கன், வி.எஸ்கே)திருப்பாவை-திருவெம்பாவை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் மீள்பதிவார்கள் என நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

முன்னிகைப் பார்த்தா அருமையா இருக்கு. சூப்பர்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி குமரன்....ஆமாம், "முன்னிகை" அப்படின்னா?. முன்னறிவிப்புன்னு அர்த்தமா?.

தி. ரா. ச.(T.R.C.) said...

மார்கழி மஹோத்ஸ்வமா நடக்கட்டும்.

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் - தொடர்க

மெளலி (மதுரையம்பதி) said...

வருகை புரிந்து ஆசிர்வதித்த தி.ரா.ச, சீனா ஆகியோருக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

முன்னிகைன்னா Proposal.

மெளலி (மதுரையம்பதி) said...

//முன்னிகைன்னா Proposal.//

ஓ!, நன்றி குமரன்.