Monday, December 10, 2007

25 முக்தி நிலை / ஜோதியில் கலத்தல்.



பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரணத்தை தழுவியே ஆக வேண்டும். இதனை தடுக்க முடியாது. ஆனால் மறுபடி பிறவி ஏற்படாமல் தடுப்பது நம் கையில்தான் இருக்கிறது. முக்தி, பிரம்மத்துடன் இணைவது, ஜோதியில் கலப்பது என்றெல்லாம் சொல்வது நடக்க வேண்டுமானால் இறந்தால்தான் முடியுமா?. உயிருடன் இருக்கும் போதே பிரும்ம ஞானியாக முடியும், அதனையே வள்ளலார் பெருமான் மரணமில்லா பெருவாழ்வு என்கிறார். இதனைத்தான் "பிறவாமை" என்று காரைக்கால் அம்மையாரும், பட்டினத்தாரும் சொல்லியிருக்கிறார்கள். சங்கரர், ரமணர் போன்ற பல முனி ஸ்ரேஷ்டர்களும் இதனைக் விளக்க முற்பட்டுள்ளனர்.


மானிட பிறப்பு முக்திநிலை அடைய ஆத்மா-அனாத்மா விவேகம் வேண்டும். இந்த விவேகம் கிட்டுவதற்கோ குருவின் அருளும் அருகாமையும் அவசியம். "ஈசனருள் நமக்கே" என்றிருப்பவர்களுக்கு இறைவன் அருள் செய்கிறான். குருவுக்காக காத்திருத்தலும், கிடைத்தபின் அவரை சரணடைதலும் மிக முக்கியம். ஒரு ஜீவனுக்கு நல்ல குரு கிடத்தல் என்பதே பூர்வ ஜென்ம பலத்தால்தான். அண்டத்தில் நடக்கும் அருணோதயம் எவ்வாறு இருள் நீக்குகிறதோ, அதுபோல பிண்டத்திற்குள்ளிருக்கும் அறியாமை என்னும் இருள் நீக்க வரும் அருணோதயமே குரு.

எனக்கு நல்லதோரு தந்தையாக மட்டுமல்லாது, பிரம்மோபதேசம் செய்வித்து குருவாகவும், குப்தமாக ஸ்ரீவித்யா பற்றிச் சொல்லிக் கொடுத்து ஆசானாகவும் என்னை வழிந்டத்தி வ்ந்த என் தந்தை ஸ்ரீ வி.ஆர். கணபதி, இன்று மதியம் 2 மணி அள்வில் ஸ்ரீபுரம் அடைந்தார். அன்னை மீனாக்ஷி அவரது ஆத்மா சாந்தி அடைய அனுகிரக்கட்டும்.

1 comment:

jeevagv said...

அடடா, இப்போதுதான் பார்த்தேன் - செய்தியைக் கேட்டு வருந்துகிறேன்...
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைந்திட என் பிராத்தனைகளை சமர்பித்திடுகிறேன்...

கருணாநிதியே தாயே உன் கடைக்கண் திறந்தருள்வாயே...

எல்லாம் வல்ல சிவசக்தி, தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் சக்தியையும் சாந்தியையும் தர பிரார்த்திகிறோம்.