Sunday, September 18, 2011

மஹாளய பக்ஷம் : "ராமோ விக்ரஹவான் தர்ம:" பகுதி-3


முன்னர் "ராமோ விக்ரஹவான் தர்ம" என்கிற தலைப்பில் இரண்டு இடுகைகள் இட்டேன். இதன் தொடர்பாக சில குறிப்புக்கள் எடுத்தாலும், அப்போது இத்தொடரை தொடரவில்லை. இந்த இடுகை அதன் தொடர்ச்சி. முந்தைய பகுதிகளுக்கான உரல் கீழே!

பகுதி -1
பகுதி -2

ராமபிரானது பித்ரு வாக்ய பரிபாலனம் நாமெல்லாம் அறிந்ததே!. தந்தை சொல்லுக்கு மறுபேச்சில்லை என்று கானகம் சென்றார். சித்ரகூடத்தில் பர்ணசாலை அமைத்து இருந்த காலத்தில் பரதன் புடைசூழ வந்து மீண்டும் நாடாள அழைக்கையில் தந்தையின் மறைவினைச் கேள்விப்படுகிறார் ஸ்ரீராமர்.


தனது பிரிவால் தந்தை உயிர் நீத்ததை அறிந்து பல்வாறு புலம்பியழுகிறார், பின்னர் தசரதருக்கு மகனாக தான் செய்ய வேண்டிய கர்மாக்களை முறையாகச் செய்தார் என்கிறார் வால்மிகி மகரிஷி. அயோத்யா காண்டத்தில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.

ஆநயேங்குதி பிண்யாகம் சீரமாஹர சோத்தரம்
ஜலக்ரியார்த்தம் ததாஸ்ய கமிஷ்யாமி மஹாத்மந:

இந்த வாக்யம் ஸீதையைப் பார்த்து ராமர் சொல்வதாக அமைந்திருக்கிறது. ஸீதே! உனது மாமனார் இறந்துவிட்டார். அவருக்கு நான் தர்ப்பண்ம், பிண்டதானம் போன்றவை செய்யவேண்டும், அதற்கு தேவையான பிண்டங்களை தயார் செய்ய இங்குதீ மரத்தில் உள்ள பழங்களை பிண்டமாக உருட்டிக் கொண்டு வா! என்று கூறுகிறார்.

தந்தையின் மறைவால் மிகுந்த வருத்தமடைந்தாலும், மகனாக, மறைந்த தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமகிரியைகளை செய்யத் தொடங்குகிறார். இவ்வாறு செய்ய ஆற்றங்கரைக்குச் செல்கையில் முதலில் ஸீதையும், பின்னர் லக்ஷ்மணனும் செல்ல, கடைசியாக ராமர் சென்றாராம். வனவாசம் செல்வதைச் செல்லுகையில், முதலில் ராமனும், பின்னர் ஸீதையும், கடைசியாக லக்ஷ்மணனும் வருவதாகச் சொன்ன வால்மிகி, குறிப்பாக இந்த இடத்தில் மாற்றிச் சொல்கிறார், இதன் காரணமென்ன?. ஸம்ஸ்காரத்திற்குச் செல்லும் போது சிறியவர்கள் முதலிலும், பின்னர் பெரியவர்கள் என்பதாக மூத்தவர் கடைசியில் செல்ல வேண்டும் என்ற தர்ம சாஸ்த்ர விதியை ராமர் கடைப்பிடித்ததை குறிப்பாகச் சொல்லியிருக்கிறார்.

இதற்கடுத்த ஸ்லோகத்தில் (அயோத்யா காண்டம்,102) இராமர் இன்றுவரையில் பிண்டப்பிரதானத்திற்குச் சொல்லப்படும் மந்திரத்தைச் சொல்லி தனது தந்தைக்கு பிண்டதானம் செய்ததாக, மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் வால்மிகி மஹரிஷி. இவ்வாறு சொல்லிய பின்னர், இந்த பிண்டதானத்திற்கு உபயோகம் செய்த பொருட்கள் என்ன என்பதையும் சொல்லியிருக்கிறார். அதில், இலந்தைப் பழத்துடன் கூடிய ஐங்குதீ பழங்களால் ஆன பிண்டத்தை தர்பத்தில் வைத்து மந்திரம் சொன்னதாகச் சொல்லுகிறார். என்று இக்கர்மாவைச் செய்யும் பலருக்கும், அதென்ன பழத்தாலான பிண்டம்?, நாமெல்லாம் அன்னத்தாலான பிண்டமல்லவா வைத்துச் செய்கிறோம்? என்று தோன்றலாம்.

கர்மா செய்பவர் என்ன உணவினை உண்ணுகிறாரோ, அதனாலேயே பிண்டம் செய்ய வேண்டும் என்பது தர்ம சாஸ்த்ர விதி, அதனால்தான் தனது உணவான ஐங்குதீ, மற்றும் இலந்தைப் பழத்தாலான பிண்டத்தைச் செய்து அக்கர்மாவைச் செய்ததாகச் சொல்லுகிறார் வால்மிகி.

இங்கு இன்னொரு விஷயம் கவனிக்கத்தக்கது. தசரதரது மறைவினையொட்டி பரதன் மற்றும் சத்ருக்னன் தமது தந்தையின் ப்ரேத மற்றும் பித்ரு கார்யங்களைச் செய்தாலும், ராமபிரானும் தனது தந்தையின் மறைவு கேட்டவுடன் கர்மாவைச் செய்யத் தலைப்படுகிறார். அதான் தனது தம்பிகள் செய்துவிட்டார்களே, நான் ஏன் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. சாஸ்த்ரவிதிப்படி தான் செய்யவேண்டியதைச் செய்யத் தயாராகிறார். அதனால்தான் ராமரை தர்ம தேவதையின் உருவமாகச் சொல்லுகிறார்கள். இதே போல பின்னர் ஆரண்ய காண்டத்தில் ஒருமுறை ப்ரத்யாப்திக சிராத்தம் செய்ய வேண்டிய நாளில் ராம-லக்ஷ்மணர்கள் தமது குடில்களிலிருந்து சென்றவர்கள் அபரான்ன காலத்தில் குடிலுக்கு திரும்பாததால் சீதா தேவியே பிண்டகளை இட்டதாகவும், அதை தசரதர் ஏறதாகவும், பின்னர் அசரீரியாக ஸ்ரீராமருக்குத் தெரிவித்ததாகவும் சொல்லியிருக்கிறார் வால்மிகீ.

இவற்றின் மூலமாக பித்ரு கர்மா என்பது எத்துணை முக்கியம் என்று தெரிகிறது. தற்போது மஹாளய பக்ஷம் நடக்கிறது. இக்கர்மாவிற்கு அதிகாரம் உள்ளவர்கள் பக்ஷிய மஹாளயமாக 16 நாட்களோ அல்லது 15 தினங்களில் ஒருநாள் பார்ணவ சிராத்தமாகவே அல்லது ஹிரண்யமாகச் செய்து உணவிடுதலோ செய்யவோம். இவ்வாறு ஏதும் செய்ய இயலாத சூழ்நிலை இருக்குமானால் தனது தாய்/தந்தையினருக்கான திதியன்று மட்டுமாவது தில தர்பண ரூபமாக சிராத்தம் செய்யத் தலைப்படுவோம். இந்த 15 தினங்களில் செய்யப்படும் சிராத்தங்களானது நமது பித்ருக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடியதெனச் சொல்லியிருக்கிறார்கள். இந்த பதினைந்து தினங்களில் ஒவ்வொரு நாளன்று செய்யப்படும் தர்பணங்களுக்கும், ஒவ்வொரு விசேஷ பலன்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த பதினைந்து தினங்களில் மட்டுமே நமது பித்ரு வர்க்க, மாத்ரு வர்க்க பித்ருக்களைத் தவிர மற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்கள், குரு போன்றவர்களுக்குத் தர்பணம் செய்யும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வோம்.

11 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

உபயோகமுள்ள பதிவு மௌளி. 15 நாளும் தர்ப்பணம் வெளிசாப்பாடுகிடையாது, ஒரு வேளை உணவு, மறுவேளை பலகாரம். வெளியூர்பயாணம் கிடையாது.முடிந்தவரை செய்கிறேன் என்ன பண்ணாலும் அப்பா அம்மா நமக்கு செய்ததற்கு இது உன்னுமே இல்லை

தி. ரா. ச.(T.R.C.) said...

கம்பரும்
"புக்கனன் புனலிடை முழ்கிப் போந்தனன்
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட தான்
முக் கையின் நீர் விதி முறயின் ஈந்தனன்
ஒக்க நின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான்
இதில் முக்கிய செய்தி பரம் பொருளான ராமரே குருவின் மூலமாகத்தான் பித்துருக்கடனைச் செய்தான் என்பது.மனுடர்கள் செய்ய வேன்டிய தருமத்தை தானே செய்து வழிகாட்டியவன்

Maheshwaran Ganapati said...

Dear Sir
Excellent post. I used to wonder why the paramaatma, just because he took manushya roopam inflicted pain on Himself and penalised SELF by not performing the pitru karma to Dasaratha Chakravarthy. This post is a wonderful answer for my doubts:-). Very useful information on what should be in the pindam. I read in the amavasya tarpanam book and performing only barani (last saturday), sunday (because it was a holiday), today (appa's thithi), ashtami(20/09), trayodasi (25/09) and mahalaya amavasai on 27/09. just have a doubt. i performed maasa tarpanam first and then barani mahalaya tarpanam on 17/09. is that right? is this is the same sequence i should follow even on 27/09? thanks once again. warm regards Mahesh

Maheshwaran Ganapati said...

Dear Sir
Excellent post. I used to wonder why the paramaatma, just because he took manushya roopam inflicted pain on Himself and penalised SELF by not performing the pitru karma to Dasaratha Chakravarthy. This post is a wonderful answer for my doubts:-). Very useful information on what should be in the pindam. I read in the amavasya tarpanam book and performing only barani (last saturday), sunday (because it was a holiday), today (appa's thithi), ashtami(20/09), trayodasi (25/09) and mahalaya amavasai on 27/09. just have a doubt. i performed maasa tarpanam first and then barani mahalaya tarpanam on 17/09. is that right? is this is the same sequence i should follow even on 27/09? thanks once again. warm regards Mahesh

vijayaragavan said...

/*இந்த பதினைந்து தினங்களில் மட்டுமே நமது பித்ரு வர்க்க, மாத்ரு வர்க்க பித்ருக்களைத் தவிர மற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்கள், குரு போன்றவர்களுக்குத் தர்பணம் செய்யும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வோம். */
Anna! So is this for all whose parents are alive?

Jayashree said...

""ப்ரத்யாப்திக சிராத்தம் செய்ய வேண்டிய நாளில் ராம-லக்ஷ்மணர்கள் தமது குடில்களிலிருந்து சென்றவர்கள் அபரான்ன காலத்தில் குடிலுக்கு திரும்பாததால் சீதா தேவியே பிண்டகளை இட்டதாகவும், அதை தசரதர் ஏறதாகவும்""

பெண்கள் செய்யக்கூடாது/ முடியாது என்று நாமேவிதித்துக்கொண்டதாய் சில கார்யங்கள் ஆகிவிடுகிறது. எந்த காரியத்திற்க்கும் அதனை சார்ந்த உணர்வுகள் எத்தனை ஆத்மார்த்தத்துடன் செய்யப்படுகிறது என்பதே முக்கியம் என்பதை நான் இந்த மஹாளய பக்ஷ்த்தின் ஆரம்பத்திலே புரிந்துகொள்ள ஒரு நிகழ்வு நடந்து மனதை நிறைத்து சந்தோஷப்படுத்தியதால் மேலே நீங்கள் எழுதியிருக்கும் இந்த பகுதியின் நிகழ்வுகளுக்கு என்னால் RELATE பண்ண முடிகிறது

மதுரையம்பதி said...

நன்றிகள் பல திராச சார். நீங்கள் சொல்லியது போல, பெற்றோர்கள் நமக்குச் செய்தவற்றுக்கு முன்னால் இவை எல்லாம் ஒண்ணுமே இல்லைதான்....இவற்றால் அவர்கள் இன்பமடைகிறார்கள் என்னும் போது இவற்றைச் செய்வதில் நமக்கு சிரத்தை இன்னும் அதிகமாகிறது.

கம்பரிலிருந்து எடுத்துக்காட்டியது அழகு. மிக்க நன்றிகள் கூட.

மதுரையம்பதி said...

மஹேஸ்வரன்,

உங்களது முதல் வருகைக்கு நன்றி. இந்த இடுகை உங்களுக்கு உபயோகமாக இருந்தது பற்றிச் சந்தோஷம்.

மாசப் பிறப்பு, மஹாளயம் என்று வருகையில் நீங்கள் செய்த ஆர்டர் சரிதான்.

நீங்கள் தினமும் தர்பணம் (பக்ஷீய மாஹாளயம்) செய்வதாகச் சொல்லவில்லை...குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே செய்திருக்கிறீர்கள். ஆகவே 27/9 மஹாளய அம்மாவாசைத் தர்பணம் மட்டும் செய்தால் போதும்....

ஒவ்வொரு மாசப்பிறப்புத் தர்பணம், மற்றும் அம்மாவாசை தர்பணங்களை விடாது செய்யுங்கள்... பின்னர் ஒவ்வொன்றாக நேரம் ஏற்படுத்திக் கொண்டு வருஷத்திற்கு 96 தர்பணங்கள் (ஷண்ணவதி) செய்யலாம்.

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீ மா.

//பெண்கள் செய்யக்கூடாது/ முடியாது என்று நாமேவிதித்துக்கொண்டதாய் சில கார்யங்கள் ஆகிவிடுகிறது. //

ஒவ்வொரு யுகத்திலும் தர்மங்கள் மாறும்....என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மற்றவை தனி மெயிலில். :-)

மதுரையம்பதி said...

விஜயராகவன்,

வாங்க,

//Anna! So is this for all whose parents are alive?//

பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை இந்த தர்பணங்கள் ஏதும் கிடையாது. பெற்றோர் இறந்தபின்னரும், தர்பணம் எடுத்துக் கொள்ளுதல் என்று ஒரு நிகழ்ச்சி உண்டு, அதன் பிறகே மாசப்பிறப்பு, அம்மாவாசை, மஹாளயம் போன்றவை. மற்ற தர்பணங்கள் செய்பவருக்கு மட்டுமே மஹாளயத்தில் காருணீக பித்ருக்களுக்கு (உற்றார்-உறவினர்-நண்பர்கள்-குரு போன்றவர்களுக்கு) செய்யும் அதிகாரம் வருகிறது.

தி. ரா. ச.(T.R.C.) said...

brammayagyathil varum pithur tharpanam amma appa iruppacvarkalum seyalaam athil amma appavaiyo thatha paattiyaiyo kuripituvathillai