இரண்டு நாட்கள் முன் நண்பர் ஒருவருடன் சாட்டிக் கொண்டிருந்ததை அசை போடும் விதமான பதிவு இது.
பக்தன் என்பவனுக்கு ராக த்வேஷம் இருக்க கூடாது. ராக த்வேஷம்ன்ன்னா?. ஜீவாவும், திரசவும், கேஆரெஸ்ஸும் எழுதும் பூர்வி கல்யாணி, ரிதி கெளளை, மோகனம் போன்றவை மேல் கூட த்வேஷம் ஏற்படுமா என்ன?. அட ஞஞன சூன்யமே!, ராகம் தெரியாட்டாக் கூட அதன் மெலடியை ரசிக்க வேண்டுமே?, அதைக் கூட ரசிக்கத் தெரியாம த்வேஷம் கொள்ளலாமா? அப்படின்னு திட்டாதீங்க. இந்த ராக த்வேஷம் வேற.
நாம் சில விஷயங்களில் ரொம்ப பற்றுடன் இருப்பதும், சிலவற்றை புறந்தள்ளுவதும் மிக சாதாரணம். இந்த மாதிரியான பிடித்தது, பிடிக்காதது அப்படின்னு இருப்பதையே ராகத்வேஷம் அப்படின்னு சொல்லியிருக்கு. பொதுவாக ராக த்வேஷம் கொண்டவர்களுக்கு பிறரைத் தொந்தரவு செய்யும் மனப்பான்மை இருக்கும். ஆனால் ஒரு பூரண பக்தனுக்கு / சரணாகதி செய்பவனுக்கு இந்த குணம் இருக்காது. ஏனென்றால் அவனுக்கு இறைவனை விட உயர்ந்த பொருள் என்று எதுவுமே கிடையாது. எப்போதும் கடவுளை நினைத்துக் கொண்டிருக்கும் பக்தனுக்கு மற்றவற்றை த்வேஷிக்கவே தெரியாது / முடியாது. ஆகவே பக்தன் என்பவன் 'அத்வேஷ்டா ஸர்வ பூதானாம்' என்றபடியான யாரையும் தூஷிக்காத, எல்லோரையும் எற்றுக் கொள்ளும் நிலையினை அடைய வேண்டும். எல்லோரிடமும் ஸ்நேகம் /கருணை கொண்டு இருக்க வேண்டும்.
அடுத்த குணம் அஹங்காரம். பணம், படிப்பு, பதவி என்பதாக சில பல காரணிகள் அஹங்காரத்திற்கு. அஹங்காரத்தால் என்ன ஆகும் என்று நமக்கு தெரியும். எப்போ ஒருத்தனுக்கு அஹங்காரம் வருமோ அப்போது எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்கிற விவேகம் போய்விடும். விவேகம் போயிவிட்டதென்றால் தவறுகள் ஒரு தொடர் பதிவு ஆகிவிடும். சாதாரணமாக நாம் செய்யும் நல்ல/கெட்ட காரியங்களுக்கான பலன் அடுத்த ஜென்மத்தில் என்பார்கள், ஆனால் இந்த இரண்டில் ஏதோ ஒன்று மிக அதிகமாகிவிட்டால் அது அந்த ஜென்மத்திலேயே பலனளிக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. தவறுகள் ஒரு அளவிற்கு மேல் தொடரும் போது அதற்கான தண்டனை அதே ஜென்மத்தில் கிடைக்கும் என்பதற்கு உதாரணம் இராவணன், சிசுபாலன், துரியோதனன் போன்றோர். ஆகையால் கர்வம்/அஹங்காரம் என்பது எப்போது ஒருவனுக்குள் புகுகிறதோ அப்போதே இறைவன் அவனிடத்திலிருந்து நீங்குகிறான் என்பது திண்ணம்.
நேரமின்மையால் நண்பனுடன் செய்த சாட் இத்துடன் நின்று விட்டது. மீண்டும் தொடர இருக்கிறோம். அப்போது இந்த பதிவுக்கு இன்னொரு பாகம் வரும்.
14 comments:
ராஜ்ய லக்ஷ்மி நிவாசாய
ராகத்வேஷ நிவாரினே
மட்ட பல்லி நிவாசாய
ச்ரி ந்ரும்சுமாய மங்களம்
மறுபடி படித்துவிட்டு வருகிறேன்
excellent post, i am happy to see your blog since i m also from Madurai, pirandhadu, valardhadu, padichachu ellam... good.. keep it up man...
நல்லது.
ராகத் த்வேஷம் பற்றி....
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
- இரண்டாம் திருமறை (திருஞான சம்பந்தர்)
பண்காட்டும் இசையானாய் எம்பிரான் எழுந்தருளியிருக்க எமக்கென்ன கலக்கம்,
தண்ணொளி தனில் அவன் என்றும் மலர,
இன்னொளி தனை நான் வேண்டி,
அவன்தாள் தனை பணிந்திடுவேனே.
//பொதுவாக ராக த்வேஷம் கொண்டவர்களுக்கு பிறரைத் தொந்தரவு செய்யும் மனப்பான்மை இருக்கும். ஆனால் ஒரு பூரண பக்தனுக்கு / சரணாகதி செய்பவனுக்கு இந்த குணம் இருக்காது. //
ஹிஹிஹி, ஏதோ உ.கு. மாதிரித் தோணிச்சு, அப்படி இல்லையே?
சரி, எப்போ வந்தீங்க/
ம்ம்ம்ம்,. சிவராத்திரிக்கு ஏதாவது எழுதவாவது முடியுமா தெரியலை! :(
டெல்லித் தமிழரே, வாங்க, வாங்க இன்னொரு மதுரைக்காரரா? வருக, வருக
ப்ரஸாத புத்தினு சொல்லுவார்கள். தனக்கு கிடைப்பதை பற்றிய பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது. சரி தானா? :)
Geetha paati, தன்னேஞ்சே தன்னை சுடுகிறதோ? :p
@ அம்பி,
வாங்க...நீங்க சொன்னது மிகச் சரி.
கீதாம்மா,
ஒரு குத்தும் இல்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்...அப்படிங்கற மாதிரி இருக்கு நீங்க சொல்வதைப் பார்த்தால்...:)
வாங்க ஜீவி. தங்களது முதல் வருகைக்கு நன்றி. நீங்க பின்னூட்டமிட்டிருப்பது திருவெண்காட்டுப் பதிகம் தானே?. அடிக்கடி வந்து கருத்துக்களை பகிருங்கள்.
@ டெல்லி தமிழரே,
வாங்க, முதல்வரவு நல்வரவே. அடிக்கடி வந்து கருத்துக்களை பகிருங்கள்.
வாங்க திரச, நிதானமா படிச்சுட்டு வாங்க.... நரசிம்மர் நம் ராகத்வேஷத்தை நீக்கட்டும்.
@ அம்பி,
வாங்க...நீங்க சொன்னது மிகச் சரி.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அடுத்த பகுதியையும் இட்டுவிட்டீர்களா மௌலி? இந்த கீதா ஸ்லோகம் இப்போதெல்லாம் அடிக்கடி நினைவிற்கு வருகிறது. வந்து என்ன செய்ய? கண்ணன் சொன்னது ஒவ்வொன்றும் கடப்பதற்கு அரிய கடலைப் போல் அல்லவா இருக்கிறது. ஏதேனும் ஒன்றை மட்டும் செய்ய முனைந்து அது கைவந்துவிட்டால் மற்றதெல்லாம் தானே வந்துவிடும் என்று தான் பெரியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இந்த அலைபாயும் மனது ஒன்றை மட்டும் பற்றுகிறதா? இல்லையே?!
ஸந்துஷ்ட என்று தொடங்கும் அடுத்த பகுதியையும் படிக்க வேண்டும்.
வாங்க குமரன்...லேட்டா வந்தாலும் லேட்டஸ்டான கேள்வியை கேட்டிருக்கீங்க. :-). ஆமாம், இந்த பதிவுக்கு அப்பறமா நண்பனுடன் பேச இயலவில்லை. அவன் டிராவல் பண்ணிக்கிட்டிருக்கான்.
அடிக்கடி ஞாபகம் வருவது நல்லதே....நல்லவை மனதில் இருக்கத்தொடங்கினால், ஒரும் நாள் செயலிலும் வர ஆரம்பிக்கும். :-)
Post a Comment