Saturday, December 31, 2011

ராமானுஜருக்கு உகந்த திருப்பாவைப் பாடல்




கடந்த 5 நாட்களில் கும்பகோணத்தைச் சுற்றியிருக்கும் பல கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்த்து. அதில் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படும் திருநாரையூரும் ஒன்று. அங்கிருக்கும் பட்டர் ஒருவரிடத்துப் பேசிய போது கிடைத்த தகவலே இந்த பதிவு.

திருப்பாவைப் பாசுரங்கள் ராமானுஜருக்கு மிகவும் உகந்தவை என்று கூறி, ஆண்டாள் தமது பாடலில் கூறிய 100 தடா அக்காரவடிசலை பெருமாளுக்குப் படைத்தவர் ராமானுஜர் என்று கூறினார். ராமானுஜர் பிக்ஷைக்குச் செல்லும் போது பாசுரங்களைப் பாடியவாறு செல்வாராம். இவ்வாறு பிக்ஷைக்குச் செல்லுகையில் ஒருநாள் திருப்பாவைப் பாடல்களைப் பாடியவாறு சென்றிருக்கிறார். அப்போது அவர் பெரியநம்பி அவர்களது வீட்டு வாசலில் பிக்ஷை கேட்கிறாராம். பெரியநம்பியின் மகள் அத்துழாய், பிக்ஷை இடுவதற்காக தமது இல்லத்தின் வாசலுக்கு வருகிறார். அத்துழாயின் வருகையைக் கண்ட ராமானுஜர் அவள் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.


ராமானுஜரைப் பற்றி முன்னரே அறிந்திருந்த அத்துழாய், அவர் தன்னை வீழ்ந்து வணங்கியது கண்டு அதிர்ச்சி அடைகிறாள், பின்னர் தனது தந்தையான பெரிய நம்பியிடம் நடந்த நிகழ்வினைக் கூறுகிறாள். இதைக் கேட்ட நம்பி, வீழ்ந்து வணங்கும் போது ராமானுஜர், “உந்து மதகளிறு” பாசுரம் பாடினாரா? என்று தனது மகளைக் கேட்கிறார். அத்துழாயும் ‘ஆம்’ என்று பதிலளிக்கிறாள். அப்போது அத்துழாய்க்கு சற்றுப் புரிந்திருக்கிறது.

“செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப, வந்து திறவாய் மகிழ்ந்தலோரெம்பாவாய்” என்ற இட்த்தைப் பாடியபோது அத்துழாய் தனது இல்லத்துக் கதவைத் திறந்து வெளியே வந்திருக்கிறாள். பாடிய பாசுரத்தில் தன்னை மறந்த ராமானுஜர், நம்பியின் இல்லத்துக் கதவைத் திறந்தது பாடலில் சொல்லிய நப்பின்னை தேவியே என்பதாக அத்துழாய்யை வீழ்ந்து வணங்கியிருக்கிறார். அதாவது அத்துழாய் ராமானுஜரது கண்களில் நப்பின்னையாகவே தோன்றியிருக்கிறாள். இந்த நிகழ்ச்சியைக் கொண்டு, இப்பாடாலை ராமானுஜருக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறுகிறார்கள்.

பிராட்டியை முன்னிட்டே பெருமாளைச் சரணடைய வேண்டும் என்பது வைஷ்ணவ சம்பிரதாயக் கோட்பாடு. அதனால்தான் இந்தப் பாடலில் நப்பின்னையைத் துயிலெழுப்புவதன் மூலமாக பெருமாளைச் சரணடைகிறாள் ஆண்டாள். இன்றும் இந்தப் பாசுரத்தைப் பாடும் போது இதை இரண்டு முறை ஓதுவார்களாம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

9 comments:

Geetha Sambasivam said...

http://sivamgss.blogspot.com/2011/01/18.html//

ம்ம்ம்ம்ம் ஒரு வார்த்தை முன்னேயே சொல்லி இருந்தா எங்க ஊர் பரவாக்கரைப் பெருமாளையும், பக்கத்துக் கருவிலி சற்குணேஸ்வரரையும் பார்க்கச் சொல்லி இருப்பேன். ஊருக்கும் தொலைபேசித் தெரிவித்திருப்போம். :( நல்லா தரிசனம் பண்ணி வைச்சிருப்பாங்க.

Geetha Sambasivam said...

மறந்துட்டேனே, "உந்து மதகளிற்றன்" பாடலுக்கும், 100 தடா வெண்ணெய், 100 தடா பால், சேர்த்த அக்கார அடிசிலுக்கும் குறிப்பிட்ட வலைப்பக்கத்தில் பார்க்கலாம். சுட்டி "உந்துமத களிற்றன்" வியாக்கியானத்தைச் சொல்லும். தொடர்ந்து வரும் "கூடாரவல்லி" 27-ஆம் நாள் பாடலில் மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்த அக்கார அடிசில் பற்றிய பாடல்

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, முடிக்க விடலை, கூகிள் பெரிசா இருக்குனு திட்டு! :))) 100 தடாக் கதையும் கிடைக்கும். :P

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவீங்க இல்லை?? புத்தாண்டு வாழ்த்துகள். உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

S.Muruganandam said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அது திருநறையூர்( நாச்சியார் கோவில்) என்று நினைக்கிறேன்.

Kavinaya said...

நன்றி மௌலி.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

மதுரையம்பதி said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கவிக்கா...உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மதுரையம்பதி said...

வாங்க கீதாம்மா. ஏதும் பெரிய ப்ளான் எல்லாம் பண்ணல்ல...குழந்தை லீவுக்கு எங்காவது போகணும் என்றாள்....எனக்கு கோவில்களைத் தவிர வேறு என்ன தெரியும்...ஆகவே முடிவு செய்த மறுநாளே கிளம்பிட்டேன்.

மதுரையம்பதி said...

வாங்க கைலாஷி சார். புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆமாம், நீங்க சொல்லியது சரிதான்.

தக்குடு said...

நாக்குல ஜொள்ளு வடிய வடிய பாசுரத்தையும் விளக்கத்தையும் ருசித்தோம். மாதங்கிக்கு அடிக்கடி லீவு விடனும்னு உம்மாச்சி கிட்ட வேண்டிக்கறேன். :)